/* ]]> */
Sep 132020
 

மைதா, சேமியா, ஜவ்வரிசி ஆகியவை வீட்டில் வளரும் பயிர்களா?

metro

மைதா, சேமியா ஜவ்வரிசி மூன்றையும் நாம் வயல்களிலோ, மரங்களிலோ பார்த்திருக்க முடியாது. மைதா என்பது தானியம் அல்ல. மைதாவை மாவாகத்தான் பார்த்திருப்பீர்கள். இது கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட கோதுமை.

மைதாவின் நிறம் மஞ்சள்தான்.ஆனால், பென்சோயில் பெராக்ஸைடு என்ற வேதிப் பொருள் கலக்கப்பட்டதும்  மைதா மாவு வெண்மையாகிறது. இந்த வேதிப் பொருள் சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

மெட்ரோசிலோன் ஸாகு என்ற மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்துதான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஜவ்வரியை ஆங்கிலத்தில் ஸாகு என்று குறிப்பிடுவார்கள். ஜவ்வரிசி மரம் இந்தோனேஷியத் தீவுகளில் அதிகம் வளர்கிறது. தாழ்வான சதுப்புப் பகுதிகளில்  இந்த மரம் அதிகமாக வளர்கிறது. முப்பது அடி வரைகூட இது உயரமாக வளரலாம்.

*******************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>