/* ]]> */
Feb 252020
 

மூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்?

ripening of fruits

குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் காய் உள்ளபோது இயல்பிலேயே எத்திலீன் (ethylene) வாயுவை உமிழும், இந்த எத்திலின் வாயுப் பொருள்தான் , காய்களைப் பழுக்கச் செய்கிறது. காய் வெளியிடும் எத்திலின் அதைச் சுற்றிப் படரும். அதைச் சுவாசிக்கும் காய் பழுக்கும். திறந்த வெளியில் வைத்தால், வீசும் மென்காற்றுகூட காயைச் சுற்றியுள்ள எத்திலீன் வாயுப் படலத்தைச் சிதைத்துவிடலாம். எனவே எளிதில் பழுக்காது. மூடி வைத்தால், காய் உமிழும் எத்திலீன் வாயு அங்கேயே அடைபட்டுக் கிடக்கும். மென்மேலும் காய் வெளியிடும் எத்திலீன் வாயு காரணமாக அதைச் சுற்றி எத்திலீன் செறிவு கூடும்.இதனால் பழமாகும் வினைவேகம் கொண்டுவிரைவாகப் பழுத்துவிடுகிறது.

செயற்கையாக பழுக்கவைக்க கால்சியம் கார்பனேட் என்ற பொருளைப் பயன்படுத்துகின்றனர். இந்த வேதிப் பொருள் காற்றில் உள்ள ஈரப் பதத்துடன் வினை புரிந்து, அசிட்டிலின் (acetylene) வாயுவை உருவாக்குகிறது. வேதியியல்படி, அசெட்டிலின் வாயு எத்திலின் வாயுவுக்கு நெருங்கிய வேதிப் பண்பு கொண்டது. எனவேதான் அசெட்டிலின் தூண்டி பழம் விரைவாகப் பழுக்கிறது. ஆனால் இப்படி அசெட்டிலின் கொண்டு செயற்கையாகப் பழுக்கவைப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவேதான் பல இடங்களின் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>