/* ]]> */
Dec 272011
 

முல்லை பெரியாறு , பாலாறு , காவிரியாறு – தமிழர்களும் ஆறுகளும்

விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் ,வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் என்று புகழ் பெற்ற தமிழர்களாகிய நம் நிலை மிக பரிதாபமாகத் தான் இருக்கிறது.

ஆயிரமாயிரம் வருடங்களாக விவசாயத்தை நம்பித்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.நாம் மட்டுமல்ல ,நம் அண்டை மாநிலத்தவர்களும் நம் தமிழ்நாட்டில் விளையும் அரிசி,காய்கறிகள்,பழங்கள்,பூக்களுக்கு நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள்.மேலும் பால்,மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும்,அவ்வளவு ஏன்,மனித உழைப்பு வரை நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள்.அப்படி இருந்தும் ,நம் அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொண்டு நம்மை வஞ்சிக்கின்றன.எப்படி என்று கேட்கிறீர்களா ?

விவசாய பூமியான தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பது கர்நாடகாவின் காவிரி,ஆந்திராவின் பாலாறு மற்றும் கேரளாவின் முல்லைப் பெரியாறு.இம்மூன்று மாநிலங்களும் வளமான நம் பூமியை போட்டி போட்டுக் கொண்டு கட்டாந்தரையாக்கிக் கொண்டிருக்கின்றன.

” எந்த ஒரு நாடு ஒரு நதியை 1000 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறதோ அந்த நதி அந்த நாட்டுக்கே அல்லது மாநிலத்துக்கே சொந்தம் என்கிறது சர்வதேச நதிநீர்ச் சட்டம் “.அப்படி பார்த்தால் காவிரி நமக்குத் தான் சொந்தம்.எப்படி என்று கேட்கிறீர்களா?

கரிகாலச் சோழன் காவிரியை மறித்து கல்லணை கட்டி 1800 வருடங்கள் முடிந்து விட்டது.இக்கல்லணையை ஆதாரமாக கொண்டு பார்த்தால் காவிரியின் முழு உரிமையும் நமக்கு தான்.

ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகம்.காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி நமக்கு கிடைக்க வேண்டியது 205 டிஎம்சி தண்ணீர்.நமக்கு கிடைப்பதோ 175 டிஎம்சி.அதுவும் பெருமழை,வெள்ளம் ஏற்பட்டால் தான்.

கர்நாடகா தான் தவித்த வாய்க்கு தண்ணீர் தரவில்லை என்றால்,ஆந்திராவும் தன் பங்குக்கு நமக்கு துரோகம் செய்தது.சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த பொழுது பாலாற்றின் குறுக்கே 30 தடுப்பணைகள் கட்டி தமிழகத்தின் வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களுகக்கு  பாலாற்றிலிருந்து தண்ணீர் வருவதை அடியோடு தடுத்து நிறுத்தி ,வளமான நிலங்களை கட்டாந்தரையாக்கிவிட்டார்.

கர்நாடகத்திற்கும்,ஆந்திராவுக்கும் நான் எவ்விதத்திலும் குறைந்தவனில்லை என்று இப்பொழுது கேரளா நிரூபித்துக் கொண்டிருக்கிறது.முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கடப்பாரையை தூக்கிக் கொண்டு தென் தமிழகத்தின் தமிழர்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால் மலையாளிகள் உண்ணும் சோறும்,குழம்புக்கு காய்கறியும்,தின்னும் பழமும்,பூஜைக்கு மலரும்…அவ்வளவு ஏன் கறிவேப்பிலை கூட தமிழகத்தில் இருந்துதான் போகிறது.[இப்படி கூறியது-பிரபல மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா-ஆனந்த விகடன் பேட்டியில்.]

மேலும் அவர் கூறியிருப்பது “கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன.அவற்றில் வெறுமனே 8 % நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது.மீதி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.இதில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்குச் செல்லும் நீரானது ஒரு பொருட்டே அல்ல.அதுவும் அந்த நீர்தான் கேரளத்துக்குத் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு ஜீவநாடி என்கிறார்.

நிற்க…நம் தமிழர்களின் உணர்வுகளை,உரிமைகளை மதிக்கத் தெரியாத கர்நாடகா,கேரளா,ஆந்திர மாநிலங்களுக்கு இடையில் இருந்து கொண்டு நாம் மவுனமாக இருந்தால் ,அடுத்த தலைமுறைக்கான சொத்தாக ஒரு சொட்டு தண்ணீர் கூட நம்மால் சேர்த்து வைக்க முடியாமல் போய் விடும்.நம் உரிமைகளை மீட்க,நிலைநாட்ட தமிழர்களாகிய நாமும் ,நம் அரசாங்கமும் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவசியம்.

தொகுப்பு:diet-b

மூலம்:

தினமலரில் மகேந்திரன் அவர்களின் “த[க]ண்ணீர் தீவு..!” கட்டுரை

ஆனந்த விகடனில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் பேட்டி.

tags : முல்லை பெரியாறு , பாலாறு ,காவிரியாறு, mullai periyar, kaveri, mullai periyar anai, mullai , periyaru, mullai periyar anai, mullai periyar dam, முல்லை, முல்லைப் பெரியார், முல்லை பெரியார், முல்லைப் பெரியாறு அணை, முல்லை பெரியாறு அணை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, தமிழர்களும் ஆறுகளும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.