/* ]]> */
Jun 292018
 

முதுமை மறதி ( டிமென்ஷியா) நோயைத் தடுக்க:

DEMENTIA

மூளைக்கான என்னென்ன பயிற்சிகள் முதுமை மறதியைத் தாதப்படுத்த உதவும்?

தொடர்பு கொள்ளுதல், தகவல் பறிமாற்றம், ஒழுங்கமைத்தல், சிந்தித்தல் போன்ற திறன்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் நமது மன நலத்துக்கு பெரும் நன்மைகளை அளிக்கும். உதாரணமாக சில செயல்பாடுகள்:

  1. புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல்:

புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுதல், புதிய புத்தகத்தை வாசித்தல், புதிய பொழுதுபோக்கை முயற்சி செய்தல் அல்லது ஏதேனும் இசைக் கருவியை வாசிக்கப் பயிற்சி செய்தல், ஏதேனும் புதிய, ஆர்வமுள்ள ஒன்றை நோக்கி மூளையின் செயல்பாட்டைக் கொண்டுசெல்வதே இதன் அடிப்படை.

  1. நினைவாற்றலைக் கற்றுக்கொள்ளுதல்:

முதலில் சிறு விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். உதாரணமாக கடையில் வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியலை நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். பிறகு படிப்படியாக அதிகரித்து, நாட்டின் மாநிலங்களின் பெயர்கள், அவற்றின் மொழிகள், அவற்றின் தலை நகரங்கள் எனக் கடினமான, அதிக அளவிலான விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். ரைம்ஸ் பாடல்களை உருவாக்கலாம். அல்லது குழந்தைகளுடன் நினைவாற்றல் விளையாட்டுக்களையும் விளையாடலாம்.

  1. புதிர்களுக்கு விடை கண்டறியலாம். அல்லது போர்டு கேம்கள் விளையாடலாம்:

புதிர்களும், உத்தி அடிப்படையிலான விளையாட்டுகளும் மனதிற்கு நல்ல பயிற்சியை வழங்கி அறிதல் திறன் சார்ந்த செயல்பாடுகளை நல்ல நிலையில் பராமரிக்க முயற்சி செய்யலாம். சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். கார்டு கேம்களை அல்லது எண் விளையாட்டுகளை விளையாட்டுகளை விளையாடலாம். இந்த விளையாட்டுகள் உங்களை சிந்திக்க வைத்து, நன்றாகக் கவனம் செலுத்தவும் வைக்கின்றன. மொபைல் அல்லது மடிக்கணிணியிலும் நினைவாற்றல் விளையாட்டுகளை விளையாடலாம்.

  1. 5 கேள்விகள் பயிற்சியை செய்து பாருங்கள்:

ஏதேனும் ஒரு புதிய அனுபவத்தைப் பற்றி ‘யார் , என்ன, எங்கு, எப்போது, ஏன்’ என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பயிற்சியை செய்து பாருங்கள். இது உங்கள் கவனிப்புத் திறனையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும்.

  1.  உங்கள் பழக்கங்களில் சிறு மாறுதல்களைக் கொண்டு வாருங்கள்:

உங்கள் பழக்கங்களில் அவ்வப்போது புதுப்புது மாற்றங்களைக் கொண்டுவாருங்கள். உதாரணமாக அலுவலகத்திற்குச் செல்லும்போது, வழக்கமான பாதையில் போகாமல், இதுவரை செல்லாத புதிய பாதையில் செல்லுங்கள். அல்லது எழுதுதல் , தட்டச்சு செய்தல், வரைதல் அல்லது சாப்பிடுதல்,போன்ற செயல்களை , உங்களுக்குப் பழக்கமில்லாத வகையில் , அதாவது  நீங்கள் வாலது கைப் பழக்கம் உள்ளவரென்றால், இடது கையில்செய்ய முயற்சி செய்து பாருங்கள். முதுமை மறதி நோயைத் தடுக்கவோ, போக்கவோ முடியாது எனினும் வாழ்க்கை முழுதும், ஏதேனும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்தால், எப்போதும் உங்கள் மூளைக்குச் சவாலான வேலைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், முதுமை மறதி வராமல் போக அல்லது தாமதமாக அதிக வாய்ப்புள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>