/* ]]> */
Aug 232013
 

முதியோர் கதைகள் :
வாரம் ஒருமுறை வெளியிடப் போகும் இந்த முதியோர் கதைகளின் நோக்கம் என்னவென்றால், இதைப் படிக்கும் இளைய சமுதாயத்தினர், முதியவர்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே. பிச்சைக்காரர்களாகவும், நோயில் வாடி, கவனிப்பாரற்றும் பிளாட்பாரங்களில் வீழ்ந்து கிடக்கும் முதியவர்களிடம் இரக்கமும் அன்பும் காட்டவேண்டிய அவசியம் நம்முடைய இளைஞர்களிடம் வளர்க்கப்படவேண்டிய ஒரு கடமையாக உள்ளதால், ஒவ்வொரு கதையும் மனதை மாற்றும் கருவியாகப் பயன்பட்டால், அதுவே ஆசிரியரின் நோக்கம் நிறைவேறியதாக அமையும். நன்றி !

aged

முதியோர் கதை எண் 1:-

சந்தானமும் ‘ ஃப்ரீ கோட்டா’ வின் கீழ் வருஇறார்:

அன்று கால 5 மணிக்கே எழுந்துவிட்டார், சந்தானம் .. இது அவருடைய மனைவி கல்யாணி ஏற்படுத்திய பழக்கம். இன்று கல்யாணி இல்லை. அவரும் அவருடைய வீட்டில் இல்லை . கல்யாணி போனதுக்கப்புறம் இந்த முதியோர் இல்லம்தான் அவருடைய வீடு. கல்யாணியின் பிரிவைத் தாங்க முடியாத அவருடைய தவிப்பைப் புரிந்துகொள்ள அந்த வீட்டில் யாருமில்லை. விட்டத்தை வெறித்து நோக்கும் அவர் பார்வையையும், தட்டில் போட்டு வைத்த சாதத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அவர் அமர்ந்திருப்பதையும்., திடீரெனப் பெருங்குரலெடுத்து அழும் அவர் வேதையையும் யாரும் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை என்பதோடு அவருக்கு மனநிலை சரியில்லை என்ற பட்டமும் கட்டினாள் அவருடைய மருமகள். . மனநோயாளியாகிவிட்ட அவரைப் பார்த்துக் குழந்தைகள் பயப்படுவதாக , அலுவலகத்திலிருந்து மகன் வந்ததும் சொல்லிச் சொல்லியே மருமகள் அவரை வீட்டிலிருந்து பேக்கப் பண்ணிவிட்டாள். மகன் அவரைக் கொண்டுவந்து இந்த ஹோமில் சேர்த்துவிட்டு மாதாமாதம் அவருக்கான கட்டணத்தைச் செலுத்திவிடுகிறான்.
குளியல் முதலிய விஷயங்களை கையோடு முடித்துவிட்ட அவர், வெளியே வந்து வராண்டாவில் நின்றபடி ‘ கௌரி வந்தாச்சா?’ என்று கண்களால் தேட ஆரம்பித்தார். ‘ என்ன மணி 6 1/2 ஆகப் போகுது; இன்னும் கௌரியைக் காணோம்’ என்று கவலைப்படவும் ஆரம்பித்தார். இவருடைய மாதக் கட்டணம் செலுத்தப்பட்டுவிடுவதால் இவர் ஹோமில் வேலை எதுவும் செய்யவேண்டியதில்லை. கட்டணம் செலுத்தமுடியாதவர்கள் ஒரு சிறிய இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது , சாப்பாட்டு டேபிளில் தட்டுகளை அரேஞ்ச் பண்ணுவது, துணிகளைக் கலெக்ட் பண்ணி அவற்றை வாஷிங்குக்கு கொடுப்பது என்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யவேண்டும். 70 வயதுக்கு மேலாகிவிட்டால், பணம் கட்டாவிட்டாலும் வேலை எதுவும் செய்யவேண்டியதில்லை. இதுவே ஹோமில் நடைமுறையில் உள்ள விதிகள். இதன்படி சந்தானத்துக்கு வேலை எதுவும் இல்லை. ஆனால் அவர் தன்னுடைய தோழி கௌரியின் வேலையை செய்துகொடுப்பார். கல்யாணி உயிருடன் இருந்தவரை அவரை எந்த வேலையையும் செய்யவிட்டதில்லை. இப்போது தோழிக்காக இதைப் பழக்கமாக்கிக்கொண்டார்.
கௌரிக்காக காத்திருந்த அவருக்கு, கௌரி பெருக்கவேண்டிய இடத்தை வேறொரு பெண் பெருக்க வந்தது கவலையை ஏற்படுத்தியது. அந்த மூதாட்டியிடம் சென்ற சந்தானம்,” அம்மா,எங்கே கௌரி? நீங்கள் எண் அவருடைஅய இடத்தைப் பெருக்குகிறீர்கள்? ” என்று கேட்டார். ” ஐயா, கொரிக்கு இரவு முதல் காய்ச்சல். படுத்துக்கிருக்காங்க” என்று பதிலிறுத்தார், அந்த மூதாட்டி. ‘அப்படியா?’ என்று அதிர்ந்துபோன அவர், ஓட்டமும் நடையுமாக மகளிர் பகுதியை அடைந்து கௌரி படுத்திருந்த படுக்கையருகே சென்றார். முனகியபடி படுத்திருந்த கொரியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். ” ஜுரம் இப்படிக் கொதிக்குதே !” என்று மேலாளரிடம் கேட்டார்.” ஆமாம், உதவியாளர் வந்ததும்தான் டிஸ்பென்ஸரிக்கு அழைத்துப்போக வேண்டும் ” என்ற மேலாளரின் பதிலில் திருப்தியடையாத சந்தானம், அங்கிருந்த இன்னொரு மூதாட்டியின் உதவியுடன் கைத்தாங்கலாகப் பிடித்து கௌரியை ஹோம்- ஆஸ்பத்திருக்கு அழைத்துச் சென்றார். டாக்டர் இஞ்செக்சன் போட்டு மாத்திரை கொடுத்தார். அப்படியே கேண்டீனுக்குள் நுழைந்த சந்தானம் கௌரிக்கு சூடாக ஒரு காஃபி பிரெட் வாங்கிக் கொடுத்து மாத்திரையைச் சாப்பிட வைத்தார். பிறகு இருவ்ரும் வழக்கமாக அமரும் பார்க் பெஞ்சில் அமர்ந்தனர். அந்தப் பார்க்கில் ஆங்காங்கே முதியவர் அனைவரும் வந்து அமர்வது வழக்கம். சிறிது நேரம் சென்றதும், ‘எப்படியிருக்கு, கௌரி?’ என்று கேட்டார். ‘ கொஞ்சம் ஜுரம் குறைந்திருக்கிறது” என்றாள் கொரி. கொரிக்கு 2 மகன்கள் இருந்தபோதும், இருவரும் போட்டி போட்டு கௌரியை நடுத் தெருவில் விட்டனர். அங்கே இங்கே என்று அலைந்த கௌரி கடைசியாக இரக்க குணம் உள்ள ஒரு கவுன்சிலரின் தயவால் இந்த ஹோமில் சேர்த்துவிடப்பட்டாள்.
ஹோமுக்கு வந்தபின் சந்தானமும் கௌரியும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்கின்றனர். இப்படியே 1 வருடம் சென்றுவிட்டது. சந்தானத்துக்கு கௌரியைப் பார்க்காமல், இருக்க முடியாது. கௌரிக்கு ஒதுக்கப்பட்ட வேலையை இவரே தினமும் செய்து கொடுப்பார். சந்தானத்துக்கு கௌரியின் அன்பும் கௌரிக்கு சந்தானத்தின் அன்பும் அவசியமாகிப் போயின. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை இருவரும் இணை பிரியாமல் இருந்துவந்தனர்.
பார்க் பெஞ்சில் அமர்ந்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு சந்தானத்தின் ,ம்னைவியைப் பற்றிப் போனது. தன் மனைவி தன்னை எப்படி கண்ணிமை போல் கவனிப்பாள் என்று சந்தானமும், கௌரி தன் அன்பான கணவரைப் பற்றியும் பேசி , இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கினார்கள். மதிய உணவு வேளை நெருங்கியது. கௌரியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்த சந்தானத்தின் முகம் மலர்ந்தது. ” ஜுரம் அறவே ஓடிப் போச்சே !” என்று சந்தோஷப்பட்டார்.அதை கௌரியும் ஆமோதித்த வேளயில் , திடீரென அந்தப் பார்க்கினுள் நுழைந்தான், சந்தானத்தின் மகன் அருண். இவர்களைப் பார்த்த அவன் தலையில் அடித்துக்கொண்டான். ” சே ! எத்தனை முறை சொல்லிட்டேன்? இந்தப் பொம்பளையோட சுத்தாதே; சுத்தாதே என்று எத்தனை முறை சொல்லிட்டேன்? கேக்க மாட்டியா? உங்களைப் பத்திய பேச்சு ஏரியாவில் சிரிப்பாய்ச் சிரிக்குது. நேற்று என்கூட வேலை செய்யும் கோபி அவனுடைய அப்பாவுக்கான மாதாந்திரத் தொகையைச் செலுத்த வந்தவன் உங்களை ஜோடியாகப் பார்த்திருக்கிறான். அலுவலகத்துக்கு வந்து” அருண் ! உங்கப்பா தன் கேர்ல் ஃப்ரண்டுடன் ஜாலியா இருக்கார்” என்று எல்லோருக்கும் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்ட அனைவரும் கொல்லெனச் சிரித்தனர். எனக்குப் பெருத்த அவமானமாகி விட்டது. உன் புத்திய நீ மாத்திக்கவே மாட்டியா? இந்த வயதில் உனக்கு ஒரு லவர் கேக்குதா? பத்மாவும் குழந்தைகளும் கூட உன் நடவடிக்கையைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்கின்றனர். நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்தமாத ஃபீஸைக் கட்டிட்டேன். இந்தா, கைச் செலவுக்குப் பணம்” என்று ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தான்.” இனிமேல் இந்தப் பக்கம் வரவும் மாட்டேன்; உனக்காகப் பணம் கட்டவும் மாட்டேன். உன்னால் என் மானம் கப்பலேறியது போதும்” என்று கோபமாகக் கத்திவிட்டு அந்த பார்க்கை விட்டு வெளியேறினான். பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதியவர்,” பெத்த அப்பாவை முதியோர் இல்லத்தில் விடும்போது, போகாத உன் மானம் இனிமேல்தான் போகப் போவுதா?” என்றார்.
இதையெல்லாம் பார்த்த கௌரி அழுதேவிட்டாள். ” என்னால் உங்களுக்கு கஷ்டம். இனிமேல் பணம் கட்டாவிட்டால் சமாளிப்பது எப்படி?” என அழுதாள். ” கௌரி, கவலைப்படாதே. மேனேஜரிடம் கேட்டு ‘ ஃப்ரீ கோட்டா ‘ வில் சேர்த்துடுவேன். கொடுக்கும் வேலையைச் செய்துடுவேன்” என்றார். ” சரி; என் வேலையை இனிமே நானே செய்துடுறேன்; நீங்க உங்க வேலையை மட்டும் செய்யுங்க; உங்களுக்கு வேலை செய்து பழக்கமில்லை ” என்றாள், கௌரி., அதெல்லாம் வேண்டாம் கௌரி; நான்தான் 5 மணிக்கு எழுந்துடுறேன்ல. எனக்கு ஒன்றும் சிரமமில்லை. இப்ப எனக்கு 68 வயசாயிடுச்சு; இன்னும் 2 வருடமானால் அப்புறம் நான் வேலை செய்ய வேண்டியிருக்காது.” என்றார், சந்தானம். மகன் எறிந்துவிட்டுப் போன பணத்தைக் குனிந்து ஒவ்வொரு நோட்டாகப் பொறுக்கியெடுத்தார்.
இரண்டு பங்கு வேலை செய்யவும் தயாராக இருக்கும் சந்தானத்துக்கு கௌரியுடனான நட்பை மட்டும் விட முடியாது. எல்லாவற்றையும் இழந்துவிட்ட அவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் பாசத்தைத் தவிர இந்த உலகத்தில் வேறென்ன மிச்சம் இருக்கிறது? இது ஒரு தப்பா ?

*******************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>