/* ]]> */
Mar 152018
 

முதியோர்களுக்கான வைத்திய தகவல்-சளி பிடித்தல்:

PREVENTING THE MUCUS AND PHLEGM

வயதாக வயதாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டேபோகும். அதனால், உடம்பு நோய்களை வரவேற்க ஆரம்பிக்கும். சாதாரணமாக வரும் சளிப் பிரச்சினையைக் கவனிக்காமல் விடும்போது, அது நுரையீரலில் தேங்கி விடும். இதைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

  • வயதானவர்கள் அடிக்கடி சளி பிடித்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
  •  மருந்துகள் சாப்பிட்ட பின்னரும் சளியுடன் காய்ச்சலும் தொடர்ந்தால், நுரையீரலில் சளி இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
  •  ஆரம்ப நிலையில் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, சளிப் பரிசோதனை செய்யவேண்டும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் நுரையீரலில் சேர்ந்துள்ள சளியின் அளவு மற்றும் அதன் தாக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளின் மூலம் காச நோய், நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் இருந்தாலும் கண்டறிந்துவிட முடியும்.
  •  சளி பிடித்து ஒரு வாரத்தில் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்ளும். நுரையீரலில் தேங்கியிருக்கும் அதிக அளவு சளியை பிராங்கோடைலேட்டர் சிகிச்சை மூலம் வெளியேற்றலாம்.
  •  நாள்பட்ட நெஞ்சகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதே ஆவி பிடித்தல், நுரையீரல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் பிஸியோதெரபி  பயிற்சிகள் போன்றவற்றையும் செய்யலாம்.  இது மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும். சளியைக் கரைத்து வெளியேற்றவும் உதவும்..
  •  சிகிச்சையின்போது பசியின்மை, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இருந்தால், அவற்றை மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். சளி மாத்திரைகளோடு மற்ற பிற மாத்திரைகளையும் சேர்த்து சாப்பிடுவதால், வீரியம் அதிகமாகி உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வேறு உடல் நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் மாத்திரைகளைப் பற்றியும் மறவாமல் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
  •  நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சளி தொற்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் சளி மிக எளிதில் பரவும்.
  •  இந்தத் தருணங்களில் குளிரைத் தாங்கும் அளவுக்கு கதகதப்பான உடைகளை அணியவேண்டும். கம்பளி போன்ற பிரத்தியேகமான படுக்கைகளையும் விரிப்புக:ளையும் பயன்படுத்தலாம். சுத்தம் மிக முக்கியம்.
  •  குளிர்பானங்கள், இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
  •  குளிர்ந்த தரையில் வெறும் காலில் நடக்காமல் காலணிகள் அல்லது காலுறைகளை அணிந்து நடக்கவேண்டும்.
  • காதில் பஞ்சு உருண்டைகள் அல்லது காதடைப்பான்களைப் பயன்படுத்துவதால், குளிர்ந்த காற்று காதின் வழியாகச் செல்வதைத் தடுக்க முடியும்.
  •  மிதமான சூடுள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சமைத்த 2 மணி நேரத்துக்குள் உணவைச் சாப்பிடுவது சிறந்தது.
  •  வெந்நீர் பருகலாம். அதிக அளவில் நார்ச் சத்துள்ள உணவுப் பொருள்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>