/* ]]> */
Jun 132011
 

Chennai Rhinos win CCL - சென்னை ரைனோஸ் சிசில் வெற்றி

Chennai Rhinos win CCL - சென்னை ரைனோஸ் சிசில் வெற்றி

 

நேற்று நடந்த சிசிஎல் (  CCL – Celebrity Cricket League)  போட்டியில் சென்னை ரைனோஸ் அணி இறுதி ஆட்டத்தில் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியை சுலபமாக தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த சிசிஎல் போட்டி பிரபல நடிகர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி. இதில் சூர்யா, மாதவன், சரத்குமார், ஆர்யா, விஷால், ஜீவா, சாந்தனு, விக்ராந்த் போன்ற பிரபல தமிழ் நடிகர்கள் பங்கு பெற்றனர். சூர்யா சென்னை ரைனோஸ்சின் ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் தலைமை தாங்கி வழி நடத்தினார். இறுதி ஆட்டத்தில் அப்பாஸ் தலைமை தாங்கினார். மிகவும் விறுவிறுப்பாக கிட்டத்தட்ட நிஜ கிரிக்கெட் போட்டிகளைப் போலவே இந்த ஆட்டங்கள் நடத்தப்பட்டன. நடிகர்களும் சிரமம் எடுத்துக் கொண்டு பயிற்சி எடுத்து ப்ரோஃபஷனாலாக விளையாடினார்கள்.

சென்னை ரைனோஸ் அணியின் ஓனர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா இந்த வெற்றி மிகவும் இனிப்பானது என தெரிவித்தனர். கோப்பையை வென்ற சென்னை அணிக்கு வெற்றிக் கோப்பையை அளித்தவர் முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவி.

நடிகைகள் ப்ரியாமணி, ஷ்ரயா, சோனியா அகர்வால் போன்றோர் சென்னை அணியை ஊக்குவித்தனர்.

இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. நான்கு அணிகள் இந்த முதல் சிசிஎல் போட்டியில் கலந்து கொண்டன. சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், ஆந்திரா வாரியர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணிகள். இதில் சென்னையும் கர்நாடகாவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. சென்னை அணியில் விக்ராந்தும் விஷ்ணுவும் வெகு சிறப்பாக பாட்டிங்க் ஆடினார்கள். அணிக்கு சாந்தனு பௌலிங்கில் விக்கெட்டுகள் எடுத்து கொடுத்தார்.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>