/* ]]> */
Jun 232017
 

முகப் பொலிவுக்குத் தேவையான இயற்கை முறைகள்:

NATURAL TREATMENT FOR FACE

முகத்தில் சில இடங்களில் எண்ணெய்ப் பசையுடனோ..வறட்சியாகவோ..அல்லது நார்மலாகவோ இருக்கும். குறிப்பாக பலருக்கும் ‘டி-ஸோன்’ எனப்படும் பகுதிகளில் (நெற்றி-மூக்கு- தாடைப் பகுதி) எண்ணெய்ப் பசையுடன் காணப்படும். இதுபோன்ற சருமத்தைக் கொண்டவர்கள் ‘காம்பினேஷன் ஸ்கின்’மிக்கவர்களாக இருப்பார்கள்.

  • இரண்டு பகுதிகள், வேறு வேறு தன்மையைக் கொண்டு இருப்பதால்,தனித் தனியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
  • நல்ல தரமான ‘க்ளென்ஸிங்’ ‘டோனர்’ ‘மாய்ஸ்சரைசரை’ இருவேளை பயன்படுத்தலாம்.
  • பயத்த மாவு, தேன், தயிர் கலந்து முகத்தில் பேக் போல போட்டு, கால் மணி நேரம் கழித்துக் கழுவலாம்.
  • வாழைப் பழம், கேரட்டை மசித்து தேன் கலந்து பேக் போட்டு, இளஞ்சூடான நீரில் கழுவுவது நல்லது.
  • பாதாம் எண்ணெய், தேன் , கேரட் ஆறு கலந்தும் முகத்தில் பேக்காக உபயோகிக்கலாம். தேனில் ‘மினரல்ஸ்’, ‘விட்டமின்ஸ்’ உள்ளதால், சருமத்திற்கு மிக நல்லது.
  •  தண்ணீர் முறையாக அருந்துவது நல்லது . பழச்சாறுகள் பருகுவதும் நலம்.
  • வெள்ளரிக்காய், பன்னீரை( ரோஸ் வாட்டர்) ‘டோனராக’ பயன்படுத்தலாம்.
  •  காய்கறிகள், பழங்கள் கீரைகளை முறயாக உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
  •  நடைப் பயிற்சி அவசியம்.

கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:

  • இரு வகையான சருமமாக இருப்பதால், சிலருக்கு முகப் பருக்கள் உருவாகும். நமைச்சலாகவும் இருக்கும்.
  • எந்தக் காரணம் கொண்டும் முகத்தை அடிக்கடி தொடுவதோ, கிள்ளுவதோ, சொறிவதோ கூடாது.
  • ‘பேக்’ மற்றும் ‘மாஸ்க்’ வகைகளை வாரம் 2 முறை உபயோகிக்கலாம்.
  • பருக்கள் அதிகம் இருந்தால், மிதமாக பொருட்களைப் பயன்படுத்தவும்.
  •  சோப்பு போடாமல், ‘க்ளென்ஸர்’ வகைகளைப் பயன்பயுத்தவும்.
  •  வெளியில் அதிகம் சென்று வந்தால், கண்டிப்பாக முகத்தைக் கழுவுங்கள்.
  • இரவு முகத்தை சுத்தமாகக் கழுவிவிட்டு, தரமான ‘நைட் க்ரீம்’ போடவும்.
  • உங்களுக்கு எந்த வகையான ‘காம்பினேஷன் ஸ்கின்’ எனக் கண்டறிந்து அதற்குத் தகுந்தவாறு ‘ப்யூட்டி பார்லர்’களில் ‘ஃபேஷியல்’ செய்யலாம். ‘ஃபேர்லஸ்’, , ’சாக்லேட்’ பழங்களைக் கொண்ட ‘ஃபேஷியல்’களும் உண்டு.
  • எண்ணெய்ப் பசை அதிகமான பருக்கள் கொண்ட சருமம் என்றால், ‘மஸாஜ்’ தேவைப்படாது.
  • வறண்டுபோன சருமமாக இருந்தால், மிக கவனமாகக் கையாள்வது நல்லது. சரியாகக் கவனிக்கத் தவறினால், நாளடைவில் தோலில் சுருக்கங்கள் அதிகமாகிவிடும்.
  • சருமம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க .. ’பீட்டா கரோட்டீன்’ அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவும்.
  • முந்திரி, மாதுளம் பழம், மீன், சாக்லேட், வேர்க் கடலை, பாலக்கீரை, பழரசம் போன்றவைகளை அவரவரின் உடல் தன்மையைப் பொறுத்து எடுங்கள்.
  • ‘வைட்டமின்-இ’ கேப்சூல்களின் எண்ணெயை ய்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
  • ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்களை வைத்து மஸாஜ் செய்யலாம். ‘பேக்’காகவும் பயன்படுத்தலாம்.
  •  முகத்தில் இருவிதமான தன்மைகள் இருந்தால், ..பப்பாளிப் பழம், வாழைப் பழம் கொண்டு தனித் தனி இடங்களில் மஸாஜ் செய்து ‘பேக்’ போடுவோம்.
  • குக்கரில் சமையல் செய்யும்போது வரும் நீராவியை முகத்துக்கு பிடிக்கக்கூடாது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>