/* ]]> */
Nov 302016
 

மீல் மேக்கர் பக்கோடா- செய்வது எப்படி?

meal-maker-bakoda-recipe

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர்-20; கடலைப் பருப்பு- 1 கிண்ணம்; வெங்காயம்-2; பச்சை மிளகாய்-2; தேங்காய்த் துருவல்-1 தேக்கரண்டி; மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி; ப்ரெட்-3; எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி; இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி; கொத்தமல்லித் தழை-சிறிதளவு; எண்ணெய்- தேவையான அளவு; உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

மீல் மேக்கரை கொதிநீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சைத் தண்ணீரில் போட்டு அலசி, பின், மிக்ஸியில் அடித்து உதிர்த்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு விசில் வரும்வரை வேக விடவும். பின்னர், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய்த் துருவல், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு மீல் மேக்கர், கடலைப் பருப்பு உப்பு, ப்ரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்ஸியில் அரைத்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொறித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் மீல் மேகக்ர் பக்கோடா ரெடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>