/* ]]> */
Nov 082011
 

 

மீன லக்னம் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகரின் குணநலன் எப்படியிருக்கும்?

மீன லக்னம்

மீன ராசி என்பது இரண்டு மீன்கள் சேர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். எனவே மீன ராசியை ஒரு நீர் ராசி என்று குறிப்பிடுவர்.

மேலும் மீன ராசி ஒரு ஜாதகத்தின் 12 –வது இடமாகும். அது மட்டுமல்ல, கடைசி இடமும் அதுதான்.  எனவே இந்த மீனம் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் துயரத்துக்குக் காரணமாகும். ஒருவர் தன் வாழ்நாளில்  ஒரு பகுதியையாவது மருத்துவமனையிலோ , சிறையிலோ அல்லது ஆசிரமத்திலோ கழிக்க வேண்டியிருக்கும்.  அல்லது ராணுவத்தின் கேம்பில் இருக்கவேண்டியிருக்கும் . பொதுவாக வீட்டையும் குடும்பத்தையும் பிரிந்திருப்பது என்பது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாததாகிவிடும்.

மீன லக்னம் குருவின் வீட்டில் அமர்ந்துள்ளது. குருவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்  எப்போதுமே ஆன்மீக நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள்.  மேலும், நேர்மையானவர்கள், வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உள்ளவர்கள்,  மனிதாபிமானம் கொண்டு மற்றவர்க்கு உதவும் குணமுள்ளவர்களாக இருப்பார்கள்.  பிறர் கூப்பிட்ட மாத்திரத்தில் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.  எதிரிகளைக்கூட அமைதிப்படுத்தி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனலக்னத்திற்கு இரண்டாமிடம் செவ்வாயின் வீடாக இருப்பதால், இவர்களுக்கு  உறவினர்களுடன் நல்லுறவு இருக்காது.

இரண்டு மீன்களை அடையாளமாகக் கொண்டுள்ளதால், மற்றவர்களுக்கு முரண்பாடுகளின்  உருவமாகத் தோன்றுவார்.  இனிமயான சுபாவமும், சமூக சிந்தனை உள்ளவராகவும் இருப்பார்.  தன்னம்பிக்கையின்றி பயந்த சுபாவமுள்ளவராகவும்  இருப்பார்.

மூன்றாம் இடத்து அதிபதியான சுக்கிரன் பக்கத்து வீட்டுக்காரர்களின் நட்பைக்  கொடுக்கும்.  அவர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டு , அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.  நண்பர்களைப் பற்றி லேட்டாகத்தான் புரிந்துகொள்வார்கள். நண்பர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பலவிதம் உண்டு என்பதை  இவர்கள் புரிந்துகொள்ளும்போது காலம் கடந்துவிடும்.  சிலர் சனியின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு, கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து கஷ்டப்படுவர்.   அறிவுத் தெளிவு என்பது இவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் ஏற்படும்.

இவர்களுடைய  நிதிநிலைமை  பொதுவாக திருப்தியாக இருக்காது.  மீனலக்னத்தார், நேர்மை, உண்மை மற்றும் ஆன்மீகவாதிகளாகவும் இருப்பதால், அடிக்கடி மனவருத்தத்தில் விழுவர்.

ஜாதகத்தின் 12-வது இடமாக இருப்பதால், மூட்டு மற்றும் பாதத்தைக் குறிக்கும். அதனால், இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், கால்பந்து, கிரிக்கெட் முதலிய விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவேண்டும்.  இவர்களுக்கு முட்டி, பாதங்களில் பெரிய காயங்கள் ஏற்படும்.  லக்னத்தில் குரு இருக்கப்பெற்றவர்கள், பாதத்தில் வீக்கம், வயிற்றுப்பகுதிகளில் கட்டி,  மூட்டுவலி ஆகியவற்றைக் கொடுக்கும்.  சனி லக்னத்தில் இருந்தால், மூட்டுவலியும், சூரியன் இருந்தால், டைபாய்டும், சந்திரன் இருந்தால் குடிப் பழக்கமும் ஏற்படும்.  மீனலக்னத்தில் பிறந்த  தாகூர், வேப்பிலை சாற்றை தினமும் குடிப்பாராம்.  சந்திரன் கற்பனை சக்தியைத் தூண்டக்கூடியவர் என்பதால்,  தாகூர் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார்.  ஆனால், புதல்வர்களுடன் சரியான உறவு இருக்காது. தாகூரின் மகன் இவரை எதிர்த்தே வாழ்ந்தார். தந்தைக்கான அந்திமக் கிரியைகளைக்கூட அவர்  செய்யவில்லை .

மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார்; புதன்   நீச்சமாகிறார்.  நீச்சமாவதோடு தவறான முடிவுகளையும் எடுக்க வைக்கிறார்.  ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலுவாக இல்லையென்றால், வாழ்க்கை புயலும் சூறாவளியும் நிறைந்து காணப்படும்.  அவருக்கு நல்ல கல்வியும்கூட கிடைப்பது சிரமம்.

புதன்  அறிவைக் குறிப்பதால், புதன் வலுவிழந்தால்,   சரியான சமயத்தில்,  தேவையான சமயோஜித அறிவு செயல்படாமல் போகும்.  அறிவு முதிர்ச்சி என்பது ஒருபோதும் ஏற்படாது.  ஜாதகர் ஒரு கோழையாகச் செயல்பட்டு பலவித பிரச்சினைகளைக் கற்பனையிலேயே கண்டு பயப்படுவார்.  வியாபாரத்திலும் ஜொலிக்க முடியாது.  புதன் 4,7-ம் வீடுகளுக்கு சொந்தக்காரராக இருப்பதால், வாழ்க்கை வளங்கள் அடியோடு பழுதுபடும். அவருக்கு திருமணத்தினால் மகிழ்ச்சி ஏற்படாது. ஒருபோதும் நிம்மதியான வாழ்க்கை அமையாது.

சந்திரனோ அல்லது சுக்கிரனோ மீனத்தில் அமர்ந்தால், போதுமான பண வசதி அமையப்பெறாது.

மீனத்தில் சனி அமர்வது, சிரமங்களையும் , துயரங்களையும் கொடுக்கும்.

சந்திரனும் சனியும் சேர்ந்து மீனத்தில் அமர்ந்தால் குழந்தைகளுக்கு கெடுதி விளையும்.

குரு சூரியனுடன் சேர்ந்திருந்தால், குரு திசை நற்பலன் தராது.

செவ்வாயும் சனியும் 2மற்றும் 11-ம் இடங்களில்  இருப்பது சாதகமான அமைப்பாகும். அச்சமயத்தில் செவ்வாய் திசையானால் நற்பலன் கிடைக்காது.

செவ்வாய்-சுக்கிரன் அல்லது செவ்வாய்-புதன் சேர்க்கை பொருள் நஷ்டத்தையும் நோய்களையும் கொடுக்கும்.  சந்திரனுக்கு செவ்வாயின் பார்வை கிடைத்தால், யோகமாக இருக்கும்.

ராசிச் சக்கரத்திலோ அல்லது நவாம்சத்திலோ செவ்வாய் நீச்சமாக இருந்தால், ஜாதகர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருப்பார்.

பொதுவாக புதன்-ராகு அல்லது குரு-ராகு சேர்க்கை கெடுபலன் தரும்.  ஆனால் அந்த சேர்க்கை  3,6, 10, 11,5,9 அல்லது 4 ஆகிய வீடுகளில் அமைந்தால் மீன லக்னக்காரர்களுக்கு நல்லது. புதன்-சந்திரன்-கேது  சேர்ககை ஒரு ஞான முதிர்ச்சியைக் கொடுக்கும். மீன லக்கினக்காரர்களுக்கு ராகு  கன்னியிலோ விருச்சிகத்திலோ  அல்லது மீனத்திலோ அமைந்து  அந்த வீடுகளுக்கு சொந்தக்காரர்கள் திரிகோணத்திலோ அல்லது கேந்திரத்திலோ அமைந்தால், ராகு உன்னதமான பலன்களை வாரி வழங்குவார்.

ராகு அல்லது கேது 2,7 –ல் அமர்ந்து 5,9-ம் அதிபதிகளால் பார்க்கப்பட்டால், நீண்ட ஆயுள், நீடித்த செல்வம் என்று அமையப்பெறுவர். ஆனால், 7-ம் அதிபதியால் பார்வை செய்யப்படால், இளவயதில் மரணம் சம்பவிக்கலாம்.  கடகத்தில் ராகு இருந்தால், அல்லது சந்திரனிலிருந்து ஜாதகர் அரச வாழ்க்கை பெறுவார். முதுமையில் பெரும் பணக்காரராக வழ்னவார்.

குரு 1, 9 அல்லது 11-ம் வீட்டில் இருந்தால், வாழ்வு வளமாகும். குரு 5,9-ல் அமர்ந்தால் பெரிய ஞானம்  உண்டாகும்.  சந்திரனிலிருந்து  4,6 மற்றும் 8 முதலிய இடங்களில்  குரு இருப்பது நிதிநிலைமையை மோசமான கட்டத்துக்கு  கொண்டு செல்லாகாது.  திறமைசாலிகள் குரு-சனி சேர்க்கை திரிகோணத்திலோ அல்லது கேந்திரத்திலோ அமையப்பெறுவர்.  குருவும் சனியும் 5,8 முதலிய இடங்களில் பரிவர்த்தனையானால், சக்கர யோகம் அமையப் பெற்று,  வாழ்க்கையில் பெருந்துயரமான செய்தியைச் சந்திக்க நேரும்.

மீன லக்கினத்துக்கு குரு மகரத்தில் அமைவது சிறப்பல்ல. அவர்களால் வாழ்க்கையில்  ஒருபோதும் செல்வந்தராக முடியாது. துலாத்தில் குரு அமர்ந்தால், செல்வ வளம் கொழிக்கும்.

மீனத்தில் குரு உச்சம் பெற்றால், அவர்கள் சந்நியாசிகளாகும் வாய்ப்புண்டு. மீனத்திலுள்ள குரு சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பணம் கொட்டும். 11-ம் அதிபதியான சனி, குருவின் சுபப்பார்வை பெற்றால், ஜாதகர் பல நற்செயல் புரிவர். பல வி.ஐ.பிக்கள் இவருடைய வீடு தேடி வருவர்.

மீன லக்கினக்காரார்களுக்கு செவ்வாய்- சனி சேர்க்கையோ அல்லது செவ்வாய்-ராகு சேர்க்கையோ சிம்மத்தில் அமையக்கூடாது.

எட்டாமிடமான துலாத்தில் சுபகிரகங்கள் அமைந்தால், திடீர் செல்வமும், பெரிய திருப்பமும் வளமும் வந்துசேரும்.

இதுபோல பல விஷேஷமான செய்திகள் உள்ள மீன லக்னம் பற்றி இன்னும் பற்பல விஷயங்கள் இருந்தாலும், இனி வரும் பகுதிகளில்  அவைகளை ஆராயலாம்.

tags : எட்டாமிடம், மீனத்தில் குரு, மீன லக்னம், சுபகிரகங்கள்,அதிபதியான,அதிபதி, செவ்வாய்-புதன்,குரு உச்சம்,மீனத்தில் சனி ,11-ம் அதிபதி, ஜாதகர்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>