/* ]]> */
Dec 222010
 

மிஷல் ராபின்சன் ஒபாமா, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்தார். தாயார் மரியன் ,தந்தை ஃப்ரேசர் ராபின்சன்.

அவர் சகோதரர் தற்பொழுது ஓரிகன் ஸ்டேட் பல்கலை கழகத்தின் கூடைப்பந்து பயிற்சியாளராக உள்ள க்ரைக் ராபின்சன். மிஷல் அமெரிக்காவின் 44 வது பிரதமர் பாரக் ஒபமாவின் மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி அதாவது FIRST LADY. அவர் ஆஃப்ரிக்க-அமேரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது முதல் பெண்மணியும் ஆவார். சிகாகோவில் வளர்ந்த மிஷல் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஹார்வார்ட் சட்டப் பள்ளியிலும் படித்தவர்,

சிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் பணி புரிந்த போது பாரக் ஒபாமாவைச்சந்தித்தார். அதோடு சிகாகோவின் மேயர் ரிச்சர்ட் அம் டாலேயிலும் சிகாகோ மெடிக்கல் சென்டர் பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார். அக்டோபர் 18 ,1992

இல் பாரக் ஒபாமாவைத் திருமணம் செய்து கொண்டார் மிஷல்.

அவருடைய இரு பெண் குழந்தைகளின் பெயர் மலியா மற்றும் சாஷா. பணிச்சுமை அதிகம் உள்ள குடும்பமாக இருந்தாலும் தம்பதியர் ஒருவருக்காக ஒருவர் நேரம் ஒதுக்குவதை அவசியமாகக் கருதும் மனப்போக்குடையவர்கள்.  2007 மற்றும் 2008 இல் ஒபாமாவின் தேர்தல்

பிரசாரத்திலும் கூட்டங்களில் பேசுவதிலும் வெகு கவனம் எடுத்துக்கொண்ட மிஷல் தனது சாதுர்யமான மற்றும் நகைச்சுவை மிளிரும் பேச்சால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். தனது கணவரின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றால் அது மிகையில்லை. 2008 இல் டெமாக்ரெடிக் நேஷனல் கன்வென்ஷனில் அவர் நிகழ்த்திய உரை மிகப்பிரசித்தி பெற்றது.

அமெரிக்க பெண்களால் ஒரு உதாரணப் பெண்ணாகவும் ஃபாஷன் ஐகானாகவும் கொண்டாடப்படுகிறார் மிஷல்.

எஸ்ஸென்ஸ் பத்திரிக்கையால் ” உலகின் உத்வேகம் மிக்க 25 பெண்களில் ஒருவர் ” என்று புகழப்படுகிறார். வானிடி ஃபேர் அவரை “உலகின் 10 அழகாக உடுத்தும் நபர்களுல் ஒருவர்” என்று தேர்வு செய்திருக்கிறது.

2008 பீப்பில் லிஸ்டில் ” அருமையான, தன்னம்பிக்கை மிக்க தோற்றம் கொண்டவர் ” என்று பாராட்டப்படுகிறார்.

அவர் நேர்த்தியாக உடுத்தும் அழகுக்காக ஜாக்குலின் கென்னடியோடும், கண்டிப்புக்கும் கட்டுப்பாடுக்கும் நான்சி ரீகனோடு ஒப்பிடப்படுகிறார்.

ஆரோக்கியமான உணவுமுறைகளில் ஆர்வமும் அதை பற்றின பிரச்சாரங்களில் தீவிரமும் காட்டும் மிஷல் குழந்தைப் பருவ பருமன் பற்றின விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்.

இந்தியா வந்த போது ஒபாமாவும் மிஷலும்…

ராஷ்டிர பதிபவனில் விருந்தின் போது ஒபாமாவும் மிஷலும்….

ஹோலிநேம் உயர்நிலைப்பள்ளி பம்பாயில் குழந்தைகளோடு ஆனந்தமாக நடனமாடும் மிஷல்…ஒபாமா ரசிக்கிறார். இந்தியா வந்த போது அவருடைய உற்சாகமான மனப்போக்கிலும் அருமையான அணுகுமுறையிலும் இந்தியர்களையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டார் மிஷல்.

…ஷஹி…

படங்கள் கூகுள்…தகவல் நன்றி விக்கிபீடியா..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>