/* ]]> */
Oct 042018
 

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது  ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்?

generetor

மின்னாக்கி( ஜெனரேட்டர்) என்பது இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி. இது மின் காந்தத் தூண்டலால் இயங்குகிறது. இதில் பெரியதும் சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இதனைப்; ‘புலக் காந்தம்’ என்பார்கள். இது 2 உலோக வளையங்களாள் இணைக்கப்பட்டிருக்கும்.

இதில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள், கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். செப்புக் கம்பிகளால் செய்யப்பட்டிருக்கும் அந்தக் கம்பி காந்தத்தின்  இரு முனைகளுக்கு இடையே சுழலும்போது மின் காந்தத் தூண்டல் ஏற்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது.

இப்படி உருவாகும் மின்சாரம் அந்தக் கருவியைச் சுற்றி உள்ள இரும்பு போன்ற உலோகங்களில் பாயாமல் இருக்க, மிங்காப்பு ஒயர்கள் இருக்கும். எனவேதான் மின்சாரம் வெளியே பாய்வது இல்லை. சில சமயம் இந்த மிங்காப்பு தேய்ந்து , மின்சாரம் பாய வாய்ப்பிருக்கிறது. இதற்காகவே மோட்டார் பம்ப், ஜெனெரேடர் போன்ற கருவிகள் மின்தடை பெறுவதற்காக , நிலத்தில் (earth) இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>