/* ]]> */
Nov 232016
 

மார்பகப் புற்று நோய்- காரணங்களும் சிகிச்சையும்:

breast-cancer

  •  மார்பகப் புற்று நோய் ஏன் ஏற்படுகின்றது?

இதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களில் ஏற்படக்கூடிய அபரிமிதமான வளர்ச்சியே, புற்று நோய்க்குக் காரணம்.

  • இதில் வகைகள் உள்ளதா?

மார்பகப் புற்றுநோயில் வகைகள் கிடையாது. எல்லா புற்றுநோய்களையும் போல, இதிலும் நான்கு நிலைகள் உள்ளன.

  • எவ்வாறு பரவுகிறது?

மார்பக செல்லில் ஏற்படும் மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக, உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. பின், இது மற்ற செல்களுக்குப் பரவுகிறது.

  • மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

பரம்பரையாக வரலாம். வயது கடந்து திருமணம் செய்வது, 35 வயதிற்குமேல் குழந்தை பெறுவது, தாய்ப்பால் தராதது, வாழ்க்கைமுறை மாற்றம், சுர்ருச்சூழல் மாசு எறு பல காரணங்கள் உள்ளன.

  • தாய்ப்பால் தராதவர்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன?

தாய்ப்பால் தருவதால், புற்றுநோய்க்கு காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். எதிர்காலத்தில் புற்றுநோய் ஏறப்டுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

  • புற்றுநோய்க் கட்டியா என எப்படி தெரிந்துகொள்வது?

முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மாதம் ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். கட்டியோ அல்லது மார்பகங்களின் வடிவத்தில் மாற்றமோ தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

  • அறிகுறிகள் என்னென்ன?

மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகர்ய உணர்வு, மாரப்கத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம், மார்பக் காம்பு சிவந்து உட்பக்கமாக திரும்புதல் போன்றவை.

  • சுய பரிசோதனை செய்துகொள்வது எப்படி?

கண்ணாடி முன் நின்று, கைகள் இரண்டையும் மேலே தூக்கி, இரு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். மார்பகங்களின் எல்லாப் பகுதிகளிலும் விரல்களால் அழுந்தத் தடவி, கட்டிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  • சிகிச்சை முறைகள் என்ன?

நோயின் நிலை, புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை, நோயின் தீவிரம் என, இவற்றின் அடிப்படையில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி என சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

  • செயற்கை மார்பகம் என்பது, சம்பந்தப்பட்டவர்கள் உடலின் வேறு பாகத்தில் இருக்கும் தசையை எடுத்தோ அல்லது செயற்கை சிலிகான் மூலமாகவோ உருவாக்குவது, நோயாளிகளின் உடல் நிலையைப் பொறுத்தே அதற்கான சாத்தியம் நிர்ணயிக்கப்படும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>