/* ]]> */
Jul 132018
 

மாரடைப்பு எதனால் வருகிறது? சிறு வயதினருக்கும் வரக் காரணம் என்ன?

HEART ATTACK

மாரடைப்பு என்பதை ‘இதயத் தசை இறப்பு’ (Myocardial Infarction) என மருத்துவ உலகில் கூறுவர். அதாவது இதயத் தசைப் பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து அல்லது நின்று போகும்போது அங்கே உள்ள திசுக்கள் மடிந்துவிடும். முடியுறு தமனிகள்தான் (Corotary Arteris) இதயத் தசைப் பகுதிக்கு ரத்தத்தை ஏந்திச் செல்கின்றன.

  • முடியுறு தமனியின் சுவரில் ஏற்படும் சுருக்கம்
  • கொழுப்பு படிந்து குழாயின் அளவு சுருங்கிப் போதல்
  • ரத்தம் கட்டி அடைத்தல்

போன்ற காரணங்களால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு , தசைப் பகுதிக்கு செல்லவேண்டிய ஆக்ஸிஜனில் பற்றாக்குறை ஏற்படும்.

போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இதயத் தசைப் பகுதி மெல்ல மெல்ல மடிந்து , கடைசியில் மாரடைப்பாக மாறுகிறது.  தற்காலத்தில் சிறு வயதினர் பலர் சர்க்கரைப் பொருள், கார்போஹைட்ரேட் மிகுதியாக உண்பதன் தொடர்ச்சியாக அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால், முடியுறு தமனியின் சுவரில் கொழுப்பு படிந்து குழாயின் அளவு சுருங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம். எனவே சிறு வயதினருக்கும் மாரடைப்பு வருகிறது.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>