/* ]]> */
Apr 142011
 

 

மாப்பிள்ளை விமர்சனம் - தனுஷ்

மாப்பிள்ளை விமர்சனம் - தனுஷ்

 

மாப்பிள்ளை என்பது அதே பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து 1989ம் வருடம் வெளிவந்த ரஜினியின் சூப்பர் ஹிட் படம். அதை சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த மாப்பிள்ளை படம் பற்றி பேசுவதற்கு முன் பழைய மாப்பிள்ள பற்றி ஓரிரு வரிகள்:

 

மாப்பிள்ளை ரஜினி

 

மாப்பிள்ளை : 1989 – மாப்பிள்ளை 1989ம் வருடம் வெளிவந்த ப்ளாக்பஸ்டர். ரஜினி, ஸ்ரீவித்யா அமலா நடிக்க ரஜினிக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் நடக்கும் அனல் கக்கும் மாமியார் மருமகன் போராட்டம் தான் கதை. இளையராஜா இசையில் “என்னோட ராசி நல்ல ராசி” “மானின் இரு கண்கள் கொண்ட ” போன்ற ஹிட் பாடல்களையும் “என்னதான் சுகமோ” என்ற காலங்கள் தாண்டிய மெலடியையும் கொண்ட படம். சிரஞ்சீவியும் ரஜினியும் இணைந்து தெலுங்கில் ரஜினி தயாரித்து கெஸ்ட் ரோலில் நடிக்க தமிழில் சிரஞ்சீவி தயாரித்து கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் இருவரும் இந்தபபடத்தை எடுப்பதே இன்கம் டேக்ஸ் கணக்கு காட்ட என்றும் அந்தக் காலத்தில் கிசுகிசுக்கப்பட்ட படம். வெற்றிப்பட இயக்குநர் , அந்தக்கால கே.எஸ்.ரவிக்குமார்… ராஜசேகர் இயக்கிய படம். இந்த படம் எடுக்கும்போதுதான் ரஜினி – அமலா இருவரும் இணைந்து கிசுகிசுக்கப்பட்டது பீக்கில் இருந்தது.  இப்படி பல வகையில் அந்தக்காலத்தில் சென்சேஷனல் ஆன படம் மாப்பிள்ளை.

 

maappillai - dhanush - hamsika motwani

இன்றைய மாப்பிள்ளை : ரஜினி படத்தை ரீமேக் செய்வது இருக்கட்டும் அந்தப் பட பெயர்களை வைத்தே பலர் கைகளை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து முதலில் வெளி வந்தவர் அஜித். பில்லாவில் ரஜினி ரோலை தன் ஸ்டைலில் செய்து ஒரு புது வழியை காண்பித்தார். தனுஷும் புத்திசாலித்தனமாய் ரஜினியிசம் இல்லாமல் தன் ஸ்டைலில் இந்த ரோலை செய்திருக்கிறார்.

 

 

கதை : மாமியார் மனிஷா கொய்ராலாவின் அராஜகப் போக்கால், அவரை ப்ளான் செய்து மடக்க , அவர் மகனால் கர்ப்பமான தன் தங்கையை அவரின் மகனுக்கே மணமுடிக்க அவர் மகளான ஹன்சிகா மோத்வானியை அப்பாவி வேடம் போட்டு காதலித்து மனீஷாவிடம் சவால் செய்து அவரை கல்யாணம் செய்து அப்புறம் மாமியார் செய்யும் ஒவ்வொரு அடிக்கும் தன் புத்திசாலித்தனத்தால் பதிலடி கொடுப்பதுதான் கதை ! நிறைய சீன்களை ஒரிஜனலில் இருந்து மாற்றியிருக்கிறார்கள். அது ஆறுதல்.

 

வசனம் : படத்தின் ஹைலைட் வசனங்கள் . அற்புதமான டைமிங்க் வசனங்கள் , சிரிப்பு காமெடி வெடிகள் படமெங்கும் கலக்குகிறது. நிச்சயம் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

காமெடி : விவேக் – தனுஷ் மீண்டும் ஹிட் அடித்திருக்கிறார்கள். அதுவும் ஆரம்பககால விவேக் காட்சிகள் சூப்பர். ஆனால் அவர் அந்த பணக்கார கெட்டப்பில் வருவது முந்தைய தனுஷ் படங்களையே நினைவு படுத்துகிறது. கொஞ்ச்சம் வித்தியாசமாய் யோசித்திருக்கலாம்.

நடிப்பு :

ரீமேக் என்பதால் அந்த ஒரிஜனல் கம்பேரிசனை தவிர்க்க முடியவில்லை….

தனுஷ் vs ரஜினி : ரஜினியிசத்தை ஒதுக்கிவிட்டு தனுஷ் ந்த ரோலை அப்ரோச் செய்தது பெரிய ஆறுதல். ஆனால் மனீஷாவிடம் மோதும் சில இடங்களில்  அந்தப் பழைய ரஜினி நம் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை… மாமனார் 100 பர்சென்ட் என்றால் இந்த மாப்பிள்ளைக்கு 70 கொடுக்கலாம் !

hansika motwani - maappillai

ஹன்சிகா மோத்வானி  vs அமலா : ரொம்ப நாளா நம்ம குறும்பு குப்பு ஹன்சிகா ஹன்சிகா என்று கேலரியிலும் சினி நொறுக்குத்தீனியிலும் ஆசை கிளப்பிய ஃபிகர். ஆனால் ஃபிகரே இல்லாமல் பீப்பாய மாதிரி கொழுக் மொழுகென்று இருக்கிறார்.  முகத்திலும் நடிப்புக்கான மினிமம் எக்ஸ்பிரஷன் கூட வர மாட்டேன் என்கிறது. என்ன ஹம்சிகாவோ என்ன மோத்வானியோ.. ( ஹன்சிகா ரசிகர்கள் என்மேல் பாய வேண்டாம்… இதை கண்டித்து விரைவில் ஹன்சிகா ஃபிகர்தான் என நிரூபிக்க குறும்புகுப்பு கேலரியில் படங்கள் போடுவார் என்று நம்புவோம் !).. அதுவும் அந்தக் கால அழகு பெட்டகம் அமலா முன் ஹன்சிகா பாஸ் ஆவதே கடினம்…

 

மாப்பிள்ளை - தனுஷ் - ஹன்சிகா - மனீஷா கொய்ராலா

 

மனீஷா  vs ஸ்ரீவித்யா : அப்படி படையப்பா பின் ரம்யா கிருஷ்ணன் நின்றாரோ அது போல் ஒரிஜனல் மாப்பிள்ளை வெற்றியின் பின்  ஸ்ரீவித்யா நின்றார். ஆனால் அந்த வெர்சடைல் நடிகையின் கிட்டக் கூட வராமல் ஏதோ காமெடி பீசாய் வந்து போகிறார் மனீஷா. அவரையும் குறை சொல்ல முடியாது. சுராஜ் லைட் ட்ரீட்மென்ட் தர முடிவெடுத்தது ஒரு காரணம். ஆனால் இப்படி அவர் தனுஷ் செய்யும் ஒவ்வொரு அடிக்கும் திணறி ஏமாறுவது அந்தக கேரக்டர் பலத்தையே போக்கி விட்டது. அதோடு பாவம் மனீஷா… இன்னமும் அழகாய் வேறு இருந்து தொலைக்கிறார். அதனால் அவர் மீது வெறுப்பே வர மாட்டேன் என்கிறது ( நீ இன்னும் 1942 லவ் ஸ்டோரி  ஹேண்கோவரிலிருந்து வெளீ வரவில்லை என்று என் நண்பர்பள் சொல்வது கேட்கிறது :-) )

இசை : பாட்டுதான் தனுஷ் படங்களுக்கு எப்பவுமே பெப். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்.

 

கேமரா : நிறைய இடங்களில் டிவி சீரியலோ என்று தோன்றுமளவிற்கு சப் ஸ்டாண்டார்ட் கேமரா.

இயக்கம் : சுராஜ் ஒரு பெரிய ஹிட் படத்தை நிறைய சீன் களை மாற்றி ட்ரீட்மென்டை மாற்றி எடுத்ததை பாராட்ட வேண்டும் ஆனால் ரொம்ப கேஷுவலாக செய்ததால் படம் காமெடிக்கும் மசாலாவிற்கும் நடுவில் தொக்கி நிற்கிறது.

 

பார்க்கலாமா ?

வேணாம் தலைவா.. இன்னும் கொஞ்ச்ச நாள்ல சூப்பர் ஹிட் படமா சன் டிவில போடுவாங்க.. அது வரைக்கும் ஏதாவது ஒரிஜனல் மாப்பிள்ளை டிவிடி கிடைச்சா பாருங்க!

 

சிம்பிள் வெர்டிக்ட் :

மாப்பிள்ளா … டாப்பில்லை!

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>