/* ]]> */
Jun 292015
 

மாத ராசி பலன்- ஜூலை 2015- அனைத்து ராசிகளுக்கும்:

மாத பலன்

மாத பலன்

மேஷம்:
இந்த மாதம் உங்களுடைய பொருட்கள் திருடு போகலாம் . போதுமான பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். விரும்பத்தகாத மனிதர்களுடன் சகவாசத்தைத் தவிர்க்கவும். உங்களுடைய லட்சியங்களை அடையத் தோதாக உங்கள் தொலைநோக்குப் பார்வையை கூர்மைப்படுத்திக்கொள்வீர்கள். குழப்பமான மன நிலை நீடிக்கும். சந்தேகம் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும். அதிக வேலைப்பளுவாலும், அதிக பொறுப்புகளாலும் கஷ்டப்படுவீர்கள். வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுக்க கற்றுங்கள். மற்றவர்களை நம்பவேண்டிய நேரம்.
வருமானம் பல வழிகளிலிருந்தும் வரும். ஆனால், செலவுகள் அதிகமாக இருக்கும். ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இது சரியான தருணம் அல்ல. கட்டுமானப் பொறுட்களை போதுமான ஸ்டாக் வைத்துக்கொள்ளாவிட்டால், கஷ்டப்படநேரும்.
மாணவர்கள் படிப்பில் மின்னுவார்கள். வேலைதேடிக்கொண்டிருந்தால், வேலை கிடைக்கும். பெண்களுக்கு திருமண யோகம் கூடிவரும். அழகு சாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சின்ன சுரம் முதலியவை வரலாம்.
நலம் பயக்கும் நாட்கள்:
4,5,7,11&18:
எச்சரிக்கை தினங்கள்:
1,2,8,13,14,15,16,23,26,27,29,30&31.
ரிஷபம்:
இந்த மாதம், நீங்கள் யதார்த்தம், உண்மை, பாசம்,நேசம், தத்துவம் என்று ஆழமான நினைவுகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் நிறைய வரக்கூடிய மாதம் இது. ஆனால், அதற்காக உங்கள்நேரம் பெருமளவு செலவாகும். ஓய்வுக்கே வழியிருக்காத். ஆரோக்கியம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி அனுகூலமாக இருக்கும். நிலம் வாங்குபவர்களும் வீடு கட்டுபவர்களும் நல்ல லாபம் காண்பார்கள். பணியில் உள்ளவர்கள் அலுவலகப் பணியில் உள்ளவர்கள் சுறுசுறுப்பு குன்றியதால் கஷ் பணியிடத்தில் கடப்படுவார்கள். போதுனமான அளவு உண்மையான உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே, மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற முடியும். அதுபோல மாணவர்களும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால், தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள முடியும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடத்தில் கஷ்டமான சூழ்நிலையை சந்திப்பார்கள். உங்கள் கணவர் உங்களுக்கு துணையாக இருப்பார். அடிக்கடி விருதுகளிலும், இரவுநேரப் பயணங்களிலும் ஈடுபடுவதாலும், ஷாப்பிங் என்று அலைவதாலும், உங்கள் ஆரோக்கியமே அலட்சியமாகும். உங்கள் எடை கூடுவதைக் கவனித்து உஷாராகவேண்டும்.
புது முயற்சிகளைத் தொடங்க நல்ல நாட்கள்:
4,5,7,11,&18
அனுகூலமற்ற தினங்கள்:
மிதுனம்:
உங்கள் ஆரோக்கியமும் உங்கள் பெற்றோர்களின் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும். உணவில் மிகுந்த கவனம் தேவைப்படும். ரியல் எஸ்டேட்டைச் சேர்ந்தவர்களுக்கு இது நல்ல நேரம். விவசாய நிலங்கள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். கட்டுமான வேலைகள் தடையின்றி நடக்கும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு பெரிய பதவியும் பொறுப்பும் கிடைக்கும். உங்களுடைய தனித் திறமைகளுக்காக உங்களுக்கு பெரிய விருதுகள் கிடைக்கும். மாணவர்கள் கண்விழித்துப் படித்து கடின முயற்சி மேற்கொண்டு, தேர்வுகளில் தேவையான வெற்றியைக் காண்பீர்கள். சிலர் எழுத்தாளராகும் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். சிலர் சிற்பக்கலையையும், கலைத் துறையையும் தேர்ந்தெடுக்க விரும்புவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம். நண்பர்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விடுங்கள். உங்கள் எதிரிகள் உங்களைப் பார்த்து ஓடி ஒளிவார்கள். ஒரு பெரிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ந்டக்கும் அல்லது நிச்சயமாகும். ஆடை ஆபரணங்களை வாங்கிக் குவிப்பார்கள்.
அனுகூலமான தினங்கள்:
4,5,7,&11
புது முயற்சிகள் தொடங்கலாம்.
எச்சரிக்கையோடிருக்க வேண்டிய தினங்கள்:
1,2,8,9,15,16,17,18,19,23,26,27,29,30&31.

கடகம்:
இந்த மாதம் பல வகையான சீரியசான பிரச்சினைகளுக்கு விடைகாண வேண்டுமே என்ற பரிதவிப்பில் காணப்படுகிறீர்கள். உங்களுக்கு முன்னே பலவிதமன தேவைகள் இருப்பதென்னவோ உண்மைதான். சில போராட்டமான சூழ்நிலைகளை தனிப்பட்ட முறையிலும் குடும்ப ரீதியாகவும் சந்திக்க நேரும். சில காரியத் தடங்கல்களும், மனம் புண்படும்படியாகன நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம். மாத முதல் வாரத்திலும் கடைசி வாரத்திலும் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் முக்கிய முடிவுகள் எடுப்பதையும் ஒத்திப்போடுங்கள். குடும்பத்தினரோடு கருத்துவேற்றுமை ஏற்பட்டு, குடும்ப அமைதி கெடும். மனதில் சிலவிதமான் பயங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். விரும்பத்தகாத தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளவும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில தொல்லைகள் தோன்றினாலும் மாதக்கடைசியில் அவை மறையும். பொருளாதாரம் அவ்வளவு சுமுகமாக இருக்காது. புது செலவினங்களை தவிர்த்துவிடுங்கள். ரியல் எஸ்டேட் துறையும் பலனளிக்காது. கட்டுமான வேலைகள் மந்த கதியில் போகும். தினப்படி வேலைகளைப் பார்ப்பதுதான் நல்லது. பெருமபடியான ப்ராஜெக்ட்களில் இறங்க வேண்டாம். பணியிடங்களில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையென்றால், பிரச்சினைகள் தோன்றும். மாணவர்களுக்கு ஒன்றும் பயமில்லை. படிப்பில் கஷ்டப்பட்டு திறமை காட்டுவதோடு, பயன் பெறவும் செய்வார்கள். பெண்கள் கணவரிடம் எதையும் கேட்டுப் பெறக்கூடிய நேரம் இதுவல்ல. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். இந்த மாதம் பல விஷயங்களை உணர்ச்சிப்பூர்வமாக கையாள்வீர்கள். அதனால், மிகுந்த மனக் குழப்பத்துக்கு ஆளாக நேரும். அதனால், எதுவானாலும் ஒத்திப்போட முடிந்தால், அது பிரச்சினை தன்னால் தீர வழி வகுக்கும்.
புது முயற்சிகளைத் தொடங்க அனுகூலமான தினங்கள்:
4,5,7,&18
அனுகூலமற்ற தினங்கள்:
1,2,8,9,15,16,19,20,21,23,26,27,29,30&31.
சிம்மம்:
உட்கார்ந்து யோசிக்க வேண்டிய அளவுக்கு வீட்டில் பிரச்சினைகள் இருக்கும். உங்கள் தொழில் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு குடும்பப் பிரச்சினைகளை முதலில் தீர்க்கவேண்டும் என்பது அவசியமாகிறது. உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இந்த மாதம் வினோதமான கருத்துகள் தோன்றி சில வினோதமான செயல்கள் நிகழும். இந்த மாதம் யாருடனும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கத்துணை உங்கள் உதவியையும் ஆதரவையும் நாடி, உங்களை மிகவும் அனைத்து காரியங்களுக்கும் சார்ந்திருப்பார். கூட்டு வியாபாரம் தொல்லைதரும். பண வரவு இருக்கும். ஆனாலும் செலவுகள் வருமானத்தை மிஞ்சுவதால், நிதி நிலைமை சரியாக இருக்காது. தொத்துநோய் தாக்கி உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உஷ்ண சம்பந்தமான நோய்களும் தாக்கக்கூடும். விஷக்கடி ஏற்படலாம் என்பதால், முட்புதர்கள், நீர்நிலைகள் முதலிய இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும். ரியல் எஸ்டேட்டில் லாபம் பார்க்கமுடியாது. கட்டுமான வேலைகள் தாமதப்படும். எந்த டீலிங்கும் முடிப்பதற்குள் ஆவணங்களைச் சரிபார்க்கவும். அலுவலகத்தில் ஓர் உயர் பதவி கிடைக்கும். பதவி உயர்வும் சிலருக்கு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீக்காயம் ஏற்படலாம் என்பதால், அடுப்படி வேலையில் கஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த மாதம் சில புதிய திட்டங்களை செயல்படுத்த இது உகந்த மாதம். மாத முடிவிற்குள் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கையில் பல புதிய பரிணாமங்களை சந்திப்பதால், புதிய அனுபவம் உங்களைப் புது மனிதனாக்கும். முன்னேற்றமான விதத்தில் உங்கள் செயல்பாடுகள் விளங்கும்.
புது முயற்களுக்கான அனுகூலமான தினங்கள்:
4,5,7,11&18.
அனுகூலமற்ற தினங்கள்:
1,2,8,9,15,16,22,23,24,25,26,27,29,30&31
கன்னி:
இந்த மாதம் உங்களுக்கு ஒரு உய்ர் பதவி கிடைப்பதால், முக்கிய விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள். முழு பளுவையும் நீங்களே சுமக்க வேண்டாம் என்பதால், மற்றவர்களுக்கு பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பீர்கள். மனைவி குழந்தைகளுடனும் உறவினர்களுடனும் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து மகிழ்வீர்கள். நெடுநாளாக உறுத்தி வந்த பிரச்சினை ஒன்று தீரும். குடும்ப உறுப்பனர்கள் கூடும் இடங்களில் வார்த்தைகளை அளந்து பேசி, பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம். ஜாமீன் கையெழுத்துப்போடவேண்டாம். முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். மாணவர்களிடம் புத்திசாலித்தனமும் தைரியமும் நிறைந்திருக்கும். தேர்வுக்காக அதிகம் உழைக்கத் தயங்க மாட்டார்கள். பேச்சுக்கலையில் வல்லவராக முயலுவார்கள். அரசுப் பணிகளில் உள்ளவர்கள் ஒரு புதிய பொறுப்பை ஏற்பார்கள். சேல்ஸ்மேன்களாக இருப்பவர்களுக்கு ஆர்டர்கள் பிடிப்பது கஷ்டம். ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். மாத பிற்பகுதியில், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தோன்றும். வருமானம் கூடுதலாக வந்தாலும் செலவுகள் எக்கச்சக்கமாக இருப்பதால், நிதி நிலைமை நிம்மதி தராது. வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம். ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்கள் சட்டென்று முடிவெடுக்கத் திணறுவார்கள். பில்டர்கள் லாபம் காண முடியாது என்பதோடு வேலைகளும் முடங்கிப்போகும். குழந்தையில்லாத பெண்களுக்கு மருத்துவர் நல்ல செய்தி சொல்வர். சிலருக்கு குழந்தை பிறக்கும்.
புது முயற்சி தொடங்க அனுகூலமான தினங்கள்:
4,5,7,11&18
அனுகூலமற்ற தினங்கள்
1,2,8,9,15,16,23,24,25,26,27,29,30&31.

துலாம்:
பதவி யஉயர்வுக்காகக் காத்திருப்போருக்கு இந்த மாதம் பதவி உயர்வு விரும்பியவண்ணம் கிடைக்கும். உண்மையான உழைப்புக்கும் நேர்மைக்கும் உகந்த மரியாதை கிடைக்கும். சமூக சேவையில் ஈடுபடுவோர் விருது பெறுவார்கள். சிலருக்கு கண் நோய் ஏற்படலாம். மற்றபடி ஆரோக்கியம் சம்பந்தமாக எவ்வித பிரச்சினையும் வராது. நீங்கள் திடமாகவும் தெம்பாகவும் இருப்பீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல மாதம். வீடு. நிலம் வாங்கும் பேரங்கள் லாபகரமாக முடிவடையும். கட்டுமான வேலைகள் விறுவிறுவென நடக்கும். உங்களுடைய மிகப் பெரிய திட்டங்கள் அனைத்துமே தடங்கலின்றி நிறைவேறும்.உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். கம்யூனிகேஷன் துறையில் உள்ளவர்கள் அதன் மூலம் நிறைய சம்பாதிப்பார்கள். வருமானத்தைவிட செலவுகள் இரு மடங்காக இருக்கும். எனவே, செலவுகளை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த மாதம் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரின் வரவு உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நீங்கள் இருவரும் பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு, கோபப்படாமல், முக்கியம் கொடுப்பீர்கள். உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற பரிசளிப்பார். நண்பர்கள் உங்களுக்கு தயங்காமல் உதவி செய்வார்கள். இந்த மாதம் செல்வச் செழிப்பு இருக்கும். பெண்களுக்கு திருமணம் கூடிவரும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள்.
புது முயற்சிகளுக்கு அனுகூலமான தினங்கள்:
4,5,7,11&18.
அனுகூலமற்ற தினங்கள்:
1,2,4,8,9,15,16,23,26,27,28,29,30&31.
விருச்சிகம்:
பலவிதமான கவலைகளும் பயமும் உங்கள் மனதில் இருக்கும். எந்த திடமான முடிவும் எடுக்க முடியாமல் தயங்கிகொண்டிருப்பீர்கள். உங்கள் பொருள்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில், மனைவி மற்றும் குழந்தைகளின் கருத்துக்களை காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களாலும் உங்கள் கஷ்டங்களுக்கு உதவ முடியும். இந்த மாதம் உங்கள் வேண்டுதல்கள் பலிக்கும். . உங்கள் பொருளாதாரம் சாதாரணமாக இருக்கும். வரவு பற்றியும் செலவு பற்றியும் விஷேஷமாக எதுவும் கூறுவதற்கு இல்லை. உங்கள் ஆரோக்கியம் பரவாயில்லை. தொல்லைகள் எதுவும் பெரிதாக இருக்காது. அடிக்கடி தளர்ச்சி ஏற்படும் என்பதைத் தவிர பெரிய பிரச்சினைகள் இருக்காது. ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்கள் அன்றாட வேலைகளைக் கவனிப்பதுதான் நல்லது. பெரிய திட்டங்கள் செல்லுபடியாகும் நிலைமை இப்போது இல்லை. தேவையான கட்டுமானப் பொருள்களை ரெடி பண்ணி வைத்துக்கொண்டு, கட்டிட வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. பணியிடங்களில் நீங்கள் காட்டும் ஆர்வமின்மை உங்களுக்கு தொல்லை தரும். உங்கள் சோம்பேறித்தனத்தை விட்டால் மட்டுமே உங்கள் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பணம் திரும்ப கைக்கு வராது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனதை தேவையில்லாத விஷயங்களில் அலைய விடக்கூடாது. பெண்கள் அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்குவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியிடத்தில் அதிக வேலைப்பளு இருக்கும்.
ப்து முயற்சி தொடங்க அனுகூலமான தினங்கள்:
5, 7, 11&18.
அனுகூலமற்ற தினங்கள்:
1,2,4,8,9,15,16,23,26,27,29,30&31.

தனுசு
உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாவதில் தடங்கல்கள் ஏற்படலாம். கையில் உள்ள வேலைகள் தாமதப்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேற்றுமைகளைத் தவிர்க்கவும். உங்கள் எதிரிகள் உங்களைப் பார்த்து விலகி ஓடுவார்கள். வீடு மாற்றும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் சந்தோஷமாக இருப்பார்கள். வருமானம் நிறைய வரும். வியாபாரிகள் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அப்போதுதான், பெருத்த நஷ்டம் ஏற்படுவதிலிருந்து பிசினசைக் காப்பாற்ற முடியும். உங்கள் அரோக்கியம் நன்றாகவே இருக்கும். களைத்துப் போக நேருவதால், ஏதாவது ஹெல்த் ட்ரிங்க் சாப்பிட்டால் சரியாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம். புதிய சொத்து சேரும். கட்டிட வேலைகளும் தடையின்றித் தொடரும். விவசாயிகள் அறுவடைக்கு நிற்கும் பயிர்களின் பராமரிப்பில் கவனம் காட்ட வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய பணிமாற்றம் கிடைக்கும். சட்டத் துறையில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள் . மாணவர்கள் புத்திசாலித்தனமும் தைரியமும் நிறைந்து காணப்படுவார்கள். பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொள்வார்கள். திருமணத்துக்கு தயாராயிருக்கும் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தையில்லாதோருக்கு குழந்தைக்கான நல்ல செய்தி வரும்.
புது முயற்சிகளுக்கான அனுகூலமான தினங்கள்:
7,11&18.
அனுகூலமற்ற தினங்கள்:
1,2,4,5,6,8,9,15,16,23,26,27,29,30&31.
மகரம்:
உங்கள் உறவினர்களும், நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தவர்களும், உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களும், உங்களை ஏமாற்றக்கூடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் நீங்கள் விருந்துண்டு மகிழ்வீர்கள். பல இடங்களைச் சுற்றிப் பார்க்க புறப்படுவீர்கள். உங்கள் வீட்டைப் புதுப்பிக்க ரிப்பேர் வேலைகளை மேற்கொள்வீர்கள். பல புதிய உத்திகளைப் புகுத்தி, வியாபாரத்தை லாபகரமாககுவீர்கள். நல்ல வருமானம் வரும். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். ரியல் எஸ்டேட் துறை லாபகரமாக இருக்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். கட்டிட வேலைகள் ஜரூராக நடக்கும். அலுவலகத்தில் ஒரு அதிகாரமுள்ள பதவி வந்து சேரும். பதவி உயர்வின் மூலம் சம்பள உயர்வும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள். தேர்வுகளை ஊதித் தள்ளுவார்கள். புத்திசாலித்தனம் மிகும். நீங்கள் போட்டிகளில் பெறும் வெற்றிகளால், உங்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுவார்கள். பெண்களுக்கும் இது நல்ல நேரம்தான். பொன் பொருளை வாங்குவார்கள். நண்பர்களுடன் மகிழ்ந்திருப்பார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் முதலிய அனைத்தும் அடையப் பெறுவார்கள்.
புதிய முயற்சிகளுக்கு அனுகூலமான தினங்கள்:
4, 5, 11&18.
அனுகூலமற்ற தினங்கள்;
1,2,7,8,9,15,16,23,26,27,29,30&31.
கும்பம்:
பலர் கலந்துகொள்ளும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும். அப்படிப் போக நேர்ந்தால், கட்டாயமாக அளவோடு பேசுங்கள். அனாவசிய வார்த்தைகள் சிக்கலை ஏற்படுத்தும். யாரிடமும் கோபமாகப் பேச வேண்டாம். உங்களுடைய பழைய நண்பரின் வருகையில் மகிழ்வீர்கள். இருவரும், பழங்கதைகளைப் பேசி மகிழ்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு மாற்ற நினைத்து அதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். ஏமாற்றுக்காரர்களிடம் ஜாக்கிரதாயை அனுஷ்டிக்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறு கண் நோயைத் தவிர வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம். உங்களுடைய கம்யூனிகேஷமன் அறிவுத் திறம் உங்கள் வருமானத்தைப் பெருக்க கை கொடுக்கும். உங்கள் வருமானத்தைவிட செலவுகள் அதிககமாவதால், நீங்கள் அனாவசிய செலவுகளைக் குறைத்தால்தான், அவசியத் தேவைக்குப் பணம் இருக்கும். அலுவலகத்தில் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு ஒரு முக்கிய பதவி கிடைக்கும். விஞ்ஞானிகள் மிக அதிகமாக உழைப்பார்கள். ஆனால், எந்தக் கண்டுபிடிப்பும் அவர்களால் காட்ட முடியாது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், கனவனத்தைச் சிதற விடுவார்கள். இப்போது படிப்பில் காட்டும் கவனம்தான், பிற்காலத்தில் உங்களை வாழ்க்கையில் உயர் நிலைக்கு கொண்டு செல்லும். வேலைக்குச் செல்லும் பெண்கள், பணியிடத்தில் கஷ்டப்படுவார்கள். கணவருடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். அடுக்களையில் வேலை செய்யும்போது, காய்கறி வெட்டும்போது கவனமாக இல்லாவிட்டால், காயம் ஏற்படும்.
புது முயற்சிகளுக்கு அனுகூலமான நாட்கள்:
4, 5, 7&18
அனுகூலமற்ற தினங்கள்:
1,2,8,9,10,15,16,23,26,27,29,30&31.

மீனம்:
இந்த மாதம் நீங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது, ஏனென்றால், களைப்பு ஏற்பட்டு அதன்மூலம் சோர்வடையக்கூடும். பண விஷயங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரும் முடிவுகளை எடுக்கவேண்டாம். நீங்கள் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் மிகப் பெரிய அதிகாரியை சந்திப்பீர்கள். உங்கள் அதிகாரிக்கு உங்கள் கடின உழைப்பின்மீது மரியாதை உயரும். உங்கள் பேறும் புகழும் உயரும். மாணவர்கள் படிப்பில் படு சுட்டியாக இருப்பார்கள். ஆனால், தேர்வுகள் எழுத கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண முடியும். பில்டர்ஸ் சிறப்பான லாபம் காண்பர். விவசாய நிலங்கள் சம்பந்தமான டீலிங்கில் நல்ல பலன் கிடைக்கும். பொருளாதார நிலை மிக நன்றாக இருக்கும். உங்கள் கடன் அத்தனையும் அடைபட்டுவிடும். வியாபாரிகள் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். சின்ன ஜுரம் போன்றவை தவிர, மற்ற சௌகரியக் குறைவு ஏற்படாது. பெண்களுக்கு இது நல்ல நேரம். தங்க நகைகளையும், புத்தாடைகளையும் வாங்குவர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
ப்து முயற்சி தொடங்க அனுகூலமான நாட்கள்:
4,5,7&18.
அனுகூலமற்ற நாட்கள்:
1,2,8,9,11,12,13,15,16,23,26,27,29,30&31.

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>