/* ]]> */
Mar 312015
 

மாத ராசி பலன் – ஏப்ரல் 2015- அனைத்து ராசிகளுக்கும் :

மாத பலன்

மாத பலன்

மேஷம்:
அரசு வேலை கிடைக்கும் யோகம் காணப்படுகிறது. அதிகார பதவிக்கும் வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். அறிவுத் தெளிவோடு பாடங்களைப் புரிந்து படித்து நல்ல மதிப்பெண் பெறும் வழியுண்டு. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடவேண்டியது அவசியமாகிறது. கீழே விழுந்து காயம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். அவருடன் உங்களுக்கு சில கருத்துவேறுபாடுகள் தோன்றும். உங்கள் புதல்வர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியுறுவீர்கள். உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிரான முயற்சியில் இருப்பார்கள். உங்கள் வ்ருமானம் அதிகரிக்கும். நீங்கள் கடன் கொடுத்த தொகை திரும்ப கைக்கு வரும். விவசாய நிலங்கள் நல்ல விளைச்சலையும் வருமானத்தையும் கொடுக்கும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளவில்லையென்றால் பணத் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள்.குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பயணங்கள் அதிகமாகும். அவை உங்களுக்கு களைப்பை ஏற்படுத்தும்.மற்றவர்களுக்கு உதவி செய்ய முனைவீர்கள். எதிர்ப்பும் இருக்கத் தவறாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
ரிஷபம்:
உத்தியோகத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும்.மாணவர்கள் புத்திகூர்மையுடன் செயல்பட்டு தங்கள் படிப்பில் வேகத்தைக் காட்டுவார்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விருந்துகள், உல்லாசப் பயணங்கள் என்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவி குழந்தைகளுடன் நிம்மதியோடு வாழ்வீர்கள். உங்கள் டென்ஷன் மறைந்து உங்கள் வாழ்க்கையில் புன்னகை பூக்க ஆரம்பிக்கும். நண்பர்களை நீங்கள் நிரந்தரமாக நம்ப முடியாது. உங்கள் சொந்தக்காரர்கள் உங்களை மதித்துப் போற்றுவார்கள். எதிரிகள் தொலைந்து போவார்கள். குடும்பத்தில் செல்வச் செழிப்பு இருக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையே உங்களுடைய வருமானத்துக்கு வழிவகுக்கும். வருமானம் நன்கு பெருகி, பேங்க் பேலன்ஸ் உயரும். பெண்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் உங்களுக்கு லாபமளிக்கும். பூங்கா , பீச் என்று ஜாலியாகப் பொழுது போகும். வீட்டுக்கு ரிப்பேர் செலவு செய்யவேண்டிவரும்.

மிதுனம்:
உத்தியோகத்தில் பல வெற்றிகளைக் காண்பீர்கள். ஒரு உயர் பதவி கிடைக்கும். மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் முழு கவனத்தை செலுத்தாவிட்டால், படிப்பு காலை வாரிவிடும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் சமாதானமான போக்கை கடைப்பிடிக்கவும். உங்களுடைய பழைய நண்பர்ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார். நீங்கள் பழைய இனிய நினைவுகளில் மூழ்குவீர்கள். உங்கள் எதிரிகள் விலகிச் செல்வார்கள். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.உங்களுக்கு எல்லா வழிகளிலும் லாபம் கொழிக்கும்,.. தங்கமூம் ரொக்கமும் மலிந்திருக்கும். கடன்களிலிருந்து முழுவதுமாக விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். தான தருமங்களில் ஈடுபடுவீர்கள். பெண்கள் ஆடை அணிமணிகளை வாங்கிக் குவிப்பார்கள். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். பெண்கள் தங்களை பல வழிகளிலும் அழகுபடுத்திக்கொள்வார்கள். சிறு பிரயாணங்கள் மட்டுமின்றி தொலைதூரப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். அவை நினைவில் நிற்கும் பயணங்களாகவே இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும். நீங்கள் முடிக்க வேண்டிய பணிகள் பலவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். நல்ல உணவு ,நேரத்துக்கு உறக்கம் என்று நிம்மதி தரும் மாதம் இது.

கடகம்:
உங்களுக்கு உத்தியோத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவேண்டுமானால், வேலையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி, நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உங்களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலைகள் மிகும். குடும்பத்தாருடன் தேவையற்ற பிரச்சினைகளையும் கருத்துவேறுபாடுகளையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் சுற்றத்தார் உங்களை மதித்துப் பாராட்டுவார்கள். நண்பர்கள் சேர்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும். எதிரி பயம் தொலையாது. லட்சுமி கடாட்சம் ஏற்படும். முகத்தில் மகிழ்ச்சி கூடும். கையில் பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பார்கள். விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பொருட்கள் திருட்டுப் போகும் அபாயம் தெரிவதால், ஜாக்கிரதை அவசியம் . பெண்களுக்கு திருமண யோகம் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த மாதம் சுமாராக இருக்கும். சிலர் கடற் பிரயாணம் செய்வார்கள். மிக நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற ஆசைகள் உங்களை அலைக்கழிக்கும். வீடு மாற்றும் வாய்ப்புண்டு. மிகவும் பெரிய செல்வாக்குள்ள மனிதரின் அறிமுகம் ஏற்படும்.

சிம்மம்:
வேலையிடத்தில் அலட்சியம் காட்டவேண்டாம். அப்படி நேர்ந்தால், வேறு வேலை தேட வேண்டியிருக்கும். பணிமாற்றமும் மாத பிற்பகுதியில் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் காட்டுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். உறவினர்களால் துயரம் ஏற்படும். கெட்ட நண்பர்களால் துன்பம் நேரும். எதிரிகள் சின்ன சின்னத் தொல்லைகளைத் தரத் தயங்கமாட்டார்கள். மாத முற்பகுதியில் பணத்தட்டுப்பாடு இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும். வியாரிகள் லாபம் காண முடியும். ஆரோக்கியம் தொல்லை கொடுக்கும். வயிற்றுப்போக்கு, கண் மற்றும் தலை சம்பந்தப்பட்ட நோய்களா;ல் துன்பப்பட நேரும். குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவார்கள். பிரயாணத்தின்போது எச்சரிக்கை அவசியம். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்ககை மேம்படும். நல்ல உணவு, நேரத்துக்கு உறக்கம் என்று மகிழ்ச்சி ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். ஏமாற்றுக்காரர்களை நம்பி மோசம் போகவேண்டாம். மாத பிற்பகுதியில் வீடு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
.
கன்னி:
சிலர் அதிகாரம் உள்ள புதிய பதவிக்கு செல்வார்கள். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமானால், மிக உயர்ந்த பதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீக விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவர்கள் தைர்யசாலிகளாகவும் இருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து , சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு செல்லும்போது யாருடனும் அதிகம் பேச வேண்டாம். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வதால் உங்கள் மனம் வேதனையுற நேரும். ஒரு பெரிய க்கும். எதிரிகளால் தொல்லை இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமையும் உங்கள் வருமானத்தைப் பெருக்கும். ஒரு நியல்ம் வாங்கியதன் மூலம் லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவு செய்யவேண்டாம். கண் , தலை சம்பந்தப்பட்ட நோய்கள் உங்களை படுத்தும். கடின வேலை முடிந்ததும் ஓய்வு அவசியம். பெண்கள் தங்க நகை வாங்குவதன்மூலம் மகிழ்ச்சியடைவார்கள். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பயணத்தின் மூலம் களைப்புறுவீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விலைஉயர்ந்த பொருட்களும் உங்கள் வீட்டில் நிறையும். நல்ல உணவு உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில், விருந்துகளும் நடக்கும். நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
. துலாம்:
பணியிடத்தில் நீங்கள் அதிகாரியை மதித்து நடக்கவேண்டும். உண்மையான உழைப்பைக் காட்டி அதிகாரியின் நன்மதிப்புக்கு பாத்திரமாக முயல்வது அவசியம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தால் தப்புவது கஷ்டம். மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு விஷயங்களிலோ அல்லது அல்பமான பொழுதுபோக்குகளிலோ ஈடுபட்டால் வெற்றிகாண முடியாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உங்கள் புதல்வர்கள் உங்களை தலை நிமிர்ந்து பெருமையுறச் செய்வார்கள். உங்கள் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால், உஷ்ண சம்பந்தமான சிறு சிறு வியாதிகள் வரலாம். பெண்கள் ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடத்தில் மகிழ்வுறுவர். தேவையற்ற பயணங்களையும் அலைச்சல்களையும் மேற்கொள்வீர்கள். பயணங்கள் உங்களை களைப்படையச் செய்யும். கடவுள் உங்களை கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பார். வாயைத் திறக்குமுன் பலமுறை யோசிக்கவும். மாத முற்பதியில் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதன்பிறகு நிலமை மாறும். பண விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கைநிறைய பணம் நிறைந்திருக்கும்.
விருச்சிகம்:
கணக்குத் துறையில் வேலை செய்பவர்களுக்கு இது யோகமான மாதம். உங்களுக்கு வேலை சம்பந்தமான ஒரு புதுவித ஆஃபர் வரும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பதற்கு இது உகந்த மாதமல்ல. மாணவர்கள் தங்கள் நேரம், சக்தி அனைத்தையும் தங்கள் படிப்புக்கே செலவிடவேண்டும். துளிகூட வேஸ்ட் பண்ணக்கூடாது. அப்போதுதான் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். உங்கள் முயற்சிகளுக்கு சவால் விடும் விதமாக உங்கள் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு தவிர்க்கமுடியாமல் போகும். உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைக்குரிய மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள். எதிரிகள் தொல்லைதர தயங்கமாட்டார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத்த காயம் ஏற்படலாம். வருமானத்துக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். எனவே செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் மட்டுமே சேமிப்பை நினைத்துப் பார்க்க முடியும்.சிலருக்கு எதிர்பாராத விதமாக யோகம் அடிக்கும். பெண்களுக்கு யோகமான மாதம். பொன் நகை வாங்குவார்கள். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால் அங்கு உங்களுக்கு அமைதியான காலமாக இருக்காது.
தனுசு:
மாத முற்பாதியில் நீங்கள் ஒரு புதிய தொழிலை வெற்றிகரமாக துங்குவீர்கள். மாதத்தின் பிற்பாதியில், நீங்கள் எதிர்பார்க்கும் புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த சரியான தருணம் இது. மாணவர்களின் கல்விக்கு இது அனுகூலமான மாதம். உங்கள் பெற்றோரும் உறவினர்களும் உங்கள் வளர்ச்சியில் பெருமையடைவார்கள்.உங்களுடைய ஆரோக்கியம் சிற்ப்பாக இருக்குமென்றாலும், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தாக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கும். உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கும். மாத முற்பாதியில் ஒரு பெரிய மனிதரின் சந்திப்பும் நட்பும் கிடைக்கும். உங்களிடம் உறவினர்கள் பிரியத்துடன் பழகுவார்கள். எதிரிகளின் தொல்லை இருக்கும். சொத்து வாங்க நினைப்பீர்கள். அந்த ஆசை வெற்றிகரமாக நிறைவேறும். கால்நடைகளின் மூலம் நல்ல வருமானம் வரும். செலவுகளும் நிறைய வரும். பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சில பயணங்களை மேற்கொள்வீர்கள். அவை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். உங்கள் அணுகுமுறை அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் பேரும் புகழும் உயரும். ஆன்மீக விஷயங்களுக்காக நேரம் ஒதுக்கி ஈடுபடுவீர்கள். வழக்குகள் வெற்றியளிக்கும்.

மகரம்:

இருக்கும் வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவீர்கள். இந்த மாதம் கடினமான வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பெண்களால் சகாயம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். உறவினர்களிடமிருந்து தற்காலிக பிரிவு ஏற்படும். உங்களுடைய நண்பரின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். பழங்கால நினைவுகளில் மூழ்குவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் நிதிநிலைமை நன்றாக இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். நிலம், வீடு, சொத்து சேர்ககை ஏற்படும். கப்பல், படகு சவாரி செய்ய நேரும். உங்கள் மதிப்பு சமூகத்தில் உயரும். குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். கோர்ட்டில் நீங்கள் போட்டிருக்கும் வழக்கு வெற்றியடையும். குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். உறவினர்களிடமிருந்து பிரிவு ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். பெண்கள் புதிய ஆடை, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வர்.
கும்பம்:

உங்கள் வேலையில் நல்ல பாராட்டுகள் கிடைக்கும்.புதிய வேலைக்கு மாற நினைத்தால் அது மாதப் பிற்பாதியில் நிகழும். மாணவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றியடைவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கருத்துவேறுபாடுகளைத் தவிர்த்துக்கொண்டால், குடும்ப அமைதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். தீய நண்பர்களிடமிருந்து விலகியே நில்லுங்கள். உறவினர்களிடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவை ஏற்படுத்தும். கடுமையான உடல் உழைப்பை அளவுக்கு மீறி மேற்கொண்டால் களைப்பில் சோர்ந்துபோய் வியாதிபோல் உணர்வீர்கள். தோலில் அலர்ஜி ஏறப்டாமல் தடுக்க சுத்தமான துணிகளை உடுத்தவும். வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இல்லாவிட்டால், விபத்துக்கள் நேரலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவீர்கள். சாலை விதிகளை சரிவர பின்பற்றாவிட்டால், ஃபைன் கட்ட நேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடங்களில் பணிகளை முடிக்க மிகுந்த சிரமப்படுவார்கள். உங்கள் தேவைகளை கணவரிடம் கேட்டுப்பெற இது சரியான தருமம் அல்ல. காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

மீனம்:
உங்கள் முயற்சிகளில் சிறிது பின்னடைவு ஏற்படும். உங்கள் வேலையைத் திறம்படவும் நேர்மையாகவும் முடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவது நல்லது. மாணவர்கள் அறிவுத் தெளிவோடு படிப்பில் கவனம் செலுத்துவார்கள் . தேர்வுகளில் ஜொலிப்பார்கள். குடும்பத்திலுள்ள பெண்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், குடும்ப அமைதி கெடும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் ஆதரவைத் தேடுவார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். கெட்ட சகவாசத்தை விட்டொழிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவமானங்கள் உறுதி. உங்கள் உறவினர்களிடம் சுமுகமான உறவைக் காப்பாற்றிக்கொள்வது நன்மை பயக்கும். சொத்து சேர்ககை ஏறபடும். அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்கவும். அதன்மூலம் பணப்பற்றாக்குறையைத் தடுக்க முடியும். வியாபாரிகள் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பதன்மூலம் வியாபாரத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியம் நலிவடையும். சத்தான உணவுகளை சாப்பிடுவதின் மூலம் உடல்நிலையைக் காப்பாற்றிக்கொள்ளலாம். இல்லையென்றால் மருத்துவ சிகிச்சை பெற நேரும். சிறு பிரயாணங்களையும் நீண்ட பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பயணங்கள் பலன் தராது. களைப்புதான் மிஞ்சும். மற்றவர்களுக்கு உதவிசெய்ய சந்தர்ப்பம் வாய்க்கும். யாருடனும் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்துக்கொள்ளவும். அரசுக்குச் சேரவேண்டிய கட்டணத்தகையை பாக்கி வைக்காமல் செலுத்திவிட்டால் தண்டனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
**************************************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>