/* ]]> */
Nov 052019
 

மாதுளையின் மகத்துவம்:

POMEGRANATE’S

மாதுளையில் இனிப்பு, புளிப்பு ஆகிய 3 ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளையை சாப்பிட்டால், இதயத்திற்கும் மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையை சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறு நீரை வெளியேற்றுகிறது.பித்த நோய்களிய நிவர்த்தி செய்கிறது. குடற் புண்களை ஆற்றுகிறது. மாதுளம் விதைகளை சாப்பிட்டால், ரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்கு சிறந்த நிவாரம் அளீக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால், பலவீனம் அடைந்தவர்கள்  மாதுளம் பழத்தைச் சாப்பிட்டவுடன் உடல் தேறும். உடல் ஈடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் இதைச் சப்பிட்டால்,  மிகுந்த சக்தியை  அடைய முடிகிறது. மாதுளை சாப்பிடுவதால், விக்கல் உடனே நிற்கும். தாகத்தைப் போக்கும்.

மாதுளம் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.  சரீரம் குளிர்ச்சி அடையும். காய்ச்சல் தணியும்.  மாதுளம் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால், ஒரு மாதத்திற்கு உடல் தெம்பு பெறும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

மாதுளம் பூக்களை உலர்த்தி பொடியாக்கி  வேளைக்கு ஒரு சிட்டிகை சாப்பிட்டால், இருமல் நிற்கும்

மாதுளம் சாறு, அருகம் புல் சாறு, சமமாக சேர்த்து, வேளைக்கு 50 மில்லி மூன்று நாட்களுக்கு  கொடுக்க பெண்களுக்கு உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம், 23 கிராம்,  சர்க்கரையைச் சேர்த்து, நன்கு அரைத்து காலை மாஅலி 1 தேகக்ரண்டி  சாப்பிட தொல்லைப்படுத்தும்  பெண்களின் வெள்ளைப் பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூகக்ளை தலையில் வைத்துக்கொண்டால்  தலைவலி, வெப்ப நோய் தீரும்.

$$$$$$$$$$$$$$$$$$

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>