/* ]]> */
Oct 132017
 

மலச் சிக்கல்:

CONSTIPATION

பொதுவாக சுற்றுப்புறச் சூழல், உணவுப் பழக்க வழக்கங்கள், எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள் எல்லாம் மலச் சிக்கலுக்கு வழி வகுக்கின்றன.

  • மலச் சிக்கல் இருந்தால், அவசரப்படாமல் கழிவிடட்தில் பொறுமையாக அமர்ந்துமலம் கழிக்க முயற்சிக்கவேண்டும்.
  •  நிறைய தண்ணீர், பழரசங்கள், நார்ச் சத்துள்ள ஆகாரங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் என்று சேர்த்துக்கொள்வது இப் பிரச்சினையைக் குறைக்கும் அல்லது தவிர்க்கும் வழிமுறைகள்.
  • அசைவப் பிரியர்கள் அதனுடன் காய்கறிகள், சாம் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் கொழுப்புச் சத்தும், புரோட்டீன் சத்தும் சேருமளவு உடலுக்கு நார்ச் சத்து கிடைப்பதில்லை. நார்ச் சத்து கிடைக்காததினால் வெளியேறும் மலத்தின் அளவும் குறைகிறது. இதனால், வயிற்றுத் தசைகள் அசைவும் குறைந்து போகிறது. மேலும் பெருங்குடலின் அசைவு மெதுவாக இருப்பதாலும், மலம் வெளியேறும் கேஸ்ட்ரோகாலிக் ரிஃப்லெக்ஸ் இல்லாமல் போவதாலும் மலச் சிக்கல் ஏற்படுகின்றது
  •  வயதாக வயதாக பெருங்குடலின் சுவரில் உள்ள தசைகள் பலவீனப்படும்.அந்தத் தசைகளோடு இணைந்திருக்கும் நரம்புகளும் தளர்ச்சியடையும். பெருங்குடலின் சுவரை ஒட்டியுள்ள தசைகளுக்கு வேலை செய்யும் வேகம் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும். இப்படி வயதாவதினால் வரும் மலச் சிக்கலுக்கு சினைல் மலச் சிக்கல் என்று பெயர்.
  • இளம் வயதினர்களுக்குக்கூட மலச் சிக்கல் வருவதுண்டு. அதேபோல் பெருங்குடல் புற்றுநோய் வந்தால், தசையை சுருக்கிப் பிடித்துக்கொள்ளும். அப்பொழுதும் மலம் வெளியேறாமல் மலச் சிக்கல் உருவாகும்.
  •  நார்ச் சத்து மிகுந்த காய்கறிகள், கீரை, பழம் இவற்றை சாப்பிட பழக்கப்படுத்திக்கொள்வதுதான் மிகப் புத்திசாலித் தனம். அப்படி சாப்பிட இயலாதவர்கள் காய்கறிகளிலும், பழங்களிலும் இருக்கும் நார்ச் சத்தை மட்டும் கடைந்தெடுத்து மாவாக்கி பௌடர் வடிவில் வருகிறது அதை டாக்டரின் சிபாரிசில் எடுத்துக்கொள்வது நல்லது. இது புண்ணாக்குதான். டப்பாக்களில் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது பெருங்குடல் சுவர் இதை உறிஞ்ச முடியாது. அதனால், இந்த ஹஸ்கினால் நீரை நன்றாக இழுத்துக்கொள்ள முடிகிறது. இதனால், கெட்டியான இறுகிப்போன மலத்தைக்கூட இது அடித்து வெளியில் கொண்டுவந்துவிடும்.இத்துடன் சர்க்கரையும் சேர்த்து வெளியேற்றும். எனவே சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். ஹஸ்க் சாப்பிடுவதை நிறுத்தினாலும், மலம் வெளியேறுவதில் பிரச்சினை இருக்காது.
  • மலச் சிக்கலுக்கு மற்றொரு காரணமாக பெருங்குடல் புண் விளங்குகிறது. இந்தப் புண் இருப்பதால், தசை இறுக்கமாக இருக்கும். இதனால், மலம் இறுகிப்போய் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறும்போது சிறிது ரத்தக் கசிவுகூட இருக்கும். மலச் சிக்கலுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால் சிக்கலுக்கு விடை கொடுத்துவிடலாம்.
  • வயிற்று சங்கடம் பெரும்பாடாகப் போகும். சாப்பிட்ட உடனே மலம் கழிக்கணும் என்ற உணர்வு வந்து மலம் கழிக்கச் சென்றால், காத்து போகுதே ஒழிய மலம் வெளிவராது. வயிறு உப்பிசமானது மாதிரியும் இருக்கும்.
  • சிறுகுடலில், பெருங்குடலில் உள்ள தசைகளின் அளவு அல்லது அசைவின்மை என்ற இந்த இரண்டு காரணங்களினாலும் இப் பிரச்சினை உருவாகிறது. வயிறு உப்புசம், காற்று வெளியேறுவது மலச் சிக்கல், அல்லது வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் இதனால் ஏற்படும். ஒவ்வொருமுறை சாப்பிட்டதும் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வுஎழும். வயிற்றை சுருட்டி இழுத்துப் பிடிக்கும் உணர்வும் உருவாகும்.
  • இந்தப் பிரச்சினைகளை சட்டென்று நிறுத்த முடியாது. நன்கு பரிசோதித்து பிறகு மருந்து சாப்பிடவேண்டும். இது உயிருக்கு ஆபத்தான விசயமல்ல. வயிற்றுக்கு பிரச்சினை உண்டாக்கும் பண்டங்களை ஒதுக்குவதுதான் நல்லது.
  •  வயிற்று அசௌகர்யப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அது மலச் சிக்கலாக இருந்தாலும, வயிற்றுப் போக்காக இருந்தாலும், வயிற்றில் மலம் இருக்கும்வரைதான் வலியும் சங்கடமும் இருக்கும். அது வெளியேறிவிட்டால், வலி நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு மலம் மிக இறுகி புழுக்கை வடிவில் வெளியேறுமே ஒழிய ரத்தம் கசியாது
  •  மேற்கூறிய வயிற்று அசௌகரியங்கள் உள்ளவர்கள் நார்ச்சத்து அடங்கிய பௌடர் ஸிரப் போன்ற மருந்துகளை பல வருடங்கள் தொடர்ந்து எடுக்கவேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^         .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>