மயக்கம் என்ன விமர்சனம் – மயக்கம் என்ன சினிமா விமர்சனம் – மயக்கம் என்ன திரை விமர்சனம் – மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம்
படக்குழு
Directed by Selvaraghavan இயக்கம் செல்வராகவன் Story by Selva Ragavan கதை செல்வராகவன்
Starring நடிப்பு
Dhanush தனுஷ்
Richa Gangopadhyay ரிச்சா கங்கோபாத்யாய் ( கரகடாம்மா ? இதவிட கஷ்டமான பேரு கிடைக்கலையா?)
Music by G. V. Prakash Kumar இசை ஜி.வி.பிரகாஷ்குமார்
Cinematography Ramji ஒளிப்பதிவு ராம்ஜி
Editing by Kola Bhaskar எடிட்டிங்க் கோலா பாஸ்கர்
Distribution Gemini Film Circuits விநியோகம் ஜெமினி ஃபில்ம் சர்க்யூட்
ஹைலைட்ஸ்
பட்டையைக் கிளப்பும் தனுஷ் செல்வராகவன் ஜோடி “புதுப்பேட்டை ” என்ற சிறு சறுக்கலுக்குப் பிறகு மீண்டும் இணையும் படம்.
இரண்டாம் உலகம் என்ற மெகா ப்ராஜக்டை ஆரம்பித்து செல்வராகவன் திருமணத்தால் ஆண்ட்ரியா அந்தப் படத்திலிருந்து விலக , அவசர அவசரமாய் கதையை மாற்றி ரிச்சா கங்கோபாத்யாவிடம் கால்ஷீட் வாங்கி மூன்றே மாதத்தில் முடிக்கப்பட்ட ஜெட் வேகப் படம்.
தனுஷ் பல வயதில் தோன்றும் கதாபாத்திரமாய் அவருடைய நடிப்பிற்கும் கெட்டப்பிற்கும் சவாலாய் அமைந்த படம்.
U/A சர்டிஃபிகேட் பெற்று வந்திருக்கும் படம். செல்வராகவன் சில சமயங்களில் எல்லை மீறுவார் … இந்தப்படத்தில் மீறியிருக்கிறாரா?
முதலில் இசை ஜி.வி.பிரகாஷ் என சொல்லி, பின் யுவன் தான் இசை என தடுமாறி, பின் மீண்டும் ஜிவிதான் என செல்வராகவன் தகதிமிதோம் ஆடி, கடைசியில் ஜி.வி.பிரகாஷ் மயக்கம் என்ன பாடல்கள் மூலம் இசைத்தட்டு ரெக்கார்ட் செய்த படம். இப்போது உலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் வை திஸ் கொலைவெறிடி பாடலாசிரியர் தனுஷ் முதன்முதலில் பாடலாசிரியராக அறிமுகமாகும் படம் இப்படி படம் வருவதற்கு முன்பே படத்தைப் பற்றி ஹைலைட்டுக்கள், எதிர்பார்ப்புகள் நிறைய….
கதை :
கார்திக் (தனுஷ்) ஒரு ஃபோட்டொகிராஃபர். கல்யாணம் , போர்ட்ஃபோலியோ என வயிற்றுப் பிழைப்புக்காக ஃபோட்டோ எடுப்பவர். மனதில் தான் ஒரு வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபர் ஆக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருப்பவர். ஒரு பெரிய புகழ்பெற்ர வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபரான மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் அசிஸ்டென்டாய் சேர்வது தனுஷின் கனவு. ( 3 இடியட்ஸில் சுட்ட ஐடியா) .
நண்பர்கள் புடை சூழ ஜாலியான இளமை வாழ்க்கை. சுந்தர் என்ற ஆத்ம நண்பனின் கேர்ல்ஃரண்டாய் அறிமுகமாகிறார் ரிச்சா. ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் உறவு மெல்ல மெல்ல காதலாக ஒரு மழை நாளில் முத்ததின் உதவியோடு புரிதல் தொடங்குகிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் அடிபட்டு குடிக்கு அடிமையாகி உழல்கிறார் தனுஷ். பின் மெல்ல மெல்ல தலை நிமிர்ந்து மெச்சூர்டாக வாழ்வை எதிர்நோக்குகிறார்.
நடிப்பு :
தனுஷ் :
தேசிய விருது வாங்கிய பிறகு தனுஷிடம் எதிர்பார்ப்புகள் நிறைய. அதைக் காப்பாற்ற மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கெட்டப்பிலும் அந்தக் கேரக்டராய் மாற அவர் எடுக்கும் முனைப்பு அபரிதம். ரிச்சாவுடன் கெமிஸ்ட்ரி சரியாய் ஒர்க் அவுட்டாகாவிட்டாலும் கூட பார்வையாலேயே ரொமான்சை அள்ளித் தெளிக்கிறார் தனுஷ்.
ரிச்சா : ரிச்சாவுக்கு இது மாதிரி ஹெவி சப்ஜக்ட் புதுசு. இருந்தாலும் செல்வராகவன் உதவியோடு ஈடு கொடுக்கிறார். தனுஷை அவர் மறுதலிக்கும் காட்சிகளில் எரிச்சல் கிளப்புவதே அவர் நடிப்புக்கு கிடைத்த வெற்றிதானே.(பொண்ணு கோவா மாம்பழம் மாதிரி இருக்குன்னு பக்கத்து சீட்டுல இருந்தவர் சொன்னாரு ஹி ஹி. )
இசை :
ஜி.வி.பிரகாஷ் குமார்
: ஜிவி.பிரகாஷ் குமார் தனுஷை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஜி.வி. பாடல் வீடியோ இங்கே…
வழக்கம் போலவே ஜிவி தனுஷ் காம்பினேஷன் கலக்கி விட்டது. ஆடுகளத்தைவிடவும் சாங்க்ஸ் சூப்பர். அதுவும் தனுஷே எழுதி பாடியிருக்கும் பாடல்கள் இளைஞர்களை கவர்ந்துவிட்டது. “காதல் என் காதல்” “ஓட ஓட” ரெண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். சொன்னதும் மழை வந்துடுச்சா என்ற செல்வராகவன் பாட்டின் மெல்லிய ஃபிலாசஃபி தமிழுக்கு புதுசு ! என்னென்ன செய்தோம் இங்கு ஹரீஷ் ராக்வேந்திரா குரலில் உருக வைக்கிறது !
ஒளிப்பதிவு :
ஒரு மெலோடிராமாவுக்கு இவ்வளவு அழகாய் கனகச்சிதமாய் ஒளிப்பதிவு செய்ததற்கு ராம்ஜிக்கு பாராட்டுக்கள். சில இடங்களில் காட்சியின் உணர்ச்சிக்கேற்ப லைட்டிங்கும் நம்மை அந்தந்த கேரக்டர்களின் உணர்வுகளைப் புரிய வைக்கிறது.
இயக்கம் :
அழுத்தமான இயக்கம். தமிழில் கவனிக்கப்பட வேண்டிய இயக்குநர் செல்வராகவன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். அடுத்த கமல் சப்ஜக்ட் விஸ்வரூபத்துக்கு தேவைப்படும் மெச்சூரிடி தன்னிடம் இருப்பதை செல்வராகவன் இந்தப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார். தனுஷ் என்ற திறமையான நடிகருக்கு சரியாய் தீனி போட்டிருக்கிறார். முக்கியமான கட்டங்களில் தனுஷை அண்டர்ப்ளே செய்ய வைத்திருப்பது அழகு. வாழ்க்கையை ஃப்ரேம்களில் சொல்லும் கலை செல்வராகவனுக்கு இயல்பாகவே வருகிறது. U/A சர்டிஃபிகேட் என்றாலும் கூட அனைவரும் பார்க்கும் விதத்திலேயே ஒரு வாழ்க்கையை காட்டியிருக்கிறார் செல்வராகவன்.
பார்க்கலாமா :
தனுஷ் செல்வராகவன் உணர்ச்சி மயமான விஷுவல் + ஆடியோ ட்ரீட். தாராளமாய் பார்க்கலாம். தயக்கம் என்ன ?
ஃபைனல் வெர்டிக்ட் :
மயக்கம் என்ன – மந்தஹாசம் !
tags : mayakkam yenna, mayakkam enna, mayakkam enna review, mayakkam yenna review, mayakkam yenna movie review, mayakkam enna movie review, மயக்கம் என்ன சினிமா விமர்சனம், மயக்கம் என்ன விமர்சனம், மயக்கம் என்ன திரை விமர்சனம், மயக்கம் என்ன + தனுஷ், மயக்கம் என்ன பாடல்கள், மயக்கம் என்ன + செல்வராகவன், மயக்கம் என்ன ரிலீஸ், மயக்கம் என்ன + தனுஷ் + ரிச்சா, மயக்கம் என்ன சினிமா விம்ர்சனம்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments