/* ]]> */
Sep 062020
 

மனோபலம் அதிகரிக்கச் செய்யும் வழிகள்:

WILL POWER

  • உங்களுக்குச் சரியென்று பட்ட நியாயமான விஷயங்களில் ஈடுபடும்போது மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்.
  • ஒரு விஷயத்திற்காக அதிகமாக எதையும் சிந்தித்து மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள்.
  •  உங்களுடைய செயல்களுக்கு நீங்களே முழுப் பொறுப்பு. அதனால், எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால்தான் நீங்கள் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியும்.
  • மற்றவர்கள் உங்களை வித்தியாசமாக நடத்துகின்றனரா? கவலையை விடுங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கியே செல்லுங்கள். அடுத்தவர்கள் தங்களை வித்தியாசமாக நடத்தியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதவர்கள் சாதித்தவர்கள்.
  •  மற்றவர்கள் உதவுவர் என்று நினைத்து எதையும் செய்வதில்லை, சாதித்தவர்கள். எது நடந்தாலும் சரி. அவர்கள் நினைத்ததை சாதிக்க முனைபவர்கள், எந்தத் தடையையும் தாண்ட முயல்கிறவர்கள்.
  • நீங்கள் செய்யும் சில செயல்கள் சில நேரம் மற்றவர்களின்  கேலிக்கு ஆளாகலாம். உங்களிடமே சில குறைகள் இருக்கலாம்.  அதை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். நமது இலக்கு வெற்றி மட்டுமே.
  •  நாள் முழுவதும் நல்லதே நடக்கும் என்பதற்கு யாரும் உறுதி தர முடியாது. நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். கெட்டது நடந்தால், அதை சமாளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதையும் உங்களால் சமாளிக்க முடியும் என்பதை நம்புங்கள்.  எதற்கும் அச்சமடையாதீர்கள். எது நடந்தாலும் சரி மகிழ்ச்சியாக இருங்கள். ஆடுங்கள் பாடுங்கள். மூலையில் மட்டும் முடங்கி விடாதீர்கள்.

*********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>