/* ]]> */
Jan 252019
 

மனித உடலில் துளையிட்டு, ரத்தத்தை உறிஞ்சும் அளவுக்கு கொசு வலிமையானதா?

மனித உடலில் துளையிட்டு, ரத்தத்தை உறிஞ்சும் கொசு

தோலில் துளையிட்டு, ரத்தத்தை உறிஞ்ச சிறப்பான அமைப்பு கொசுவிடம் உள்ளது. கொசுவின் வாய்ப் பகுதியில், உறிஞ்சு குழல் ( Straw) போன்ற நீண்ட அமைப்பு 6 நுண்ணிய குழாய்களுடன் உள்ளது.அதில் 2 குழல்கள் ரம்பம் போன்ற பல் அமைப்புடன் இருக்கும். அந்த ஜோடிக் குழல்களை மேலும் கீழும் இழுத்துத் தோலில் துளையிடுகிறது. மற்ற 2 குழல்கள் தோலை விரித்து இழுத்து பிடித்துக் கொள்ளவும், 5-வது குழல் துளையின் உள்ளே சென்று ரத்த நாளத்தை அடைந்து உறிஞ்சவும் செய்கிறது. இதன் முனையில் ரத்தத்தை உணரும் உணர்வி செல்கள் உள்ளன. எனவே, தோலுக்கு அடியில் எங்கே ரத்தக் குழாய்கள் உள்ளன என அறிந்து அங்கே துளைத்துச் செல்லும்.

ஹைபோபேரிங்க்ஸ் ( Hypopharynx) எனப்படும் 6-வது குழலே நமக்கு ஆபத்தானது.. இதன் வழியே ரத்தத்தில் தனது எச்சிலைக் கொசு செலுத்துகிறது. எச்சிலில் உள்ள ஒரு வேதிப் பொருள் ரத்தம் உறையாமல் நீர்த்துப் போகச் செய்து, எளிதில் உறிஞ்ச வழி செய்கிறது.இந்த எச்சில் வழியேதான் நோய் ஏற்படுத்தும் கிருமிகளும் உடலில் நுழைகின்றன

கொசுவின் வியக்கத்தக்க உடலமைப்பை மாதிரியாக வைத்தி, அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் உண் ஊசிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊசியில் உள்ள நுண்குழாய் மூலம் மரத்துப் போகச் செய்யும் திரவம் சிறிதளவு கசியும். மற்றொரு நுண்குழாய் மூலம் மருந்தை உள்ளே செலுத்தலாம்.  அல்லது ரத்தத்தை   ஆய்வுக்கு எடுக்கலாம். எனவே இந்தப் புதுவித ஊசியைக் குத்தும்போது வலி தெரீயாது.

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>