அக்கரைப்பச்சை ஆசைகளில்..
வாழ்க்கையை தொலைத்த மனிதா..
இக்கரை நின்று
அக்கரை பார்த்து..
அக்கரை கானலில்
இக்கரைப்பச்சைகளும்
கருகிட..
கண்ணுக்கெட்டிய இடம்
கைக்கெட்டிய பொருள்
காதலுக்கெட்டிய மனசு
கிட்டுவதும்
எட்டுவதும்
சட்டென புளித்திட..
கிட்டாததும்
எட்டாததும்
பட்டென பிடித்திட..
இருப்பதை மறந்து..
பறப்பதை நினைத்து
மகிழ்ச்சியை தேடும்
மாயை மனிதா…
மனிதனில்..
தன் இருப்பதனாலோ?
சுயநல சூழலில்
சுற்றுகிறாய்?
மாற்றான் வீட்டு கூரை பிரித்தா
உன் ஆசைப் பந்தலை கட்டுகிறாய்?
இந்த வாழ்வின் மதிப்பு..
சேமிப்பு கணக்குகளை வைத்தா..?
இல்லை
சேவை கணக்குகளை வைத்தா..?
மனசை விற்று
வயிற்றை வாங்கி
உடல் வளர்த்து
உள்ளம் தொலைத்தாய்..
கணக்கடங்கா ஆசைகளும்..
களைப்படங்கா ஆட்டங்களும்..
மண்ணில் மறையும் மட்டும்தானே?
மகனாய்..
மாப்பிள்ளையாய்..
சகோதரனாய்..
சக தோழனாய்..
தகப்பனாய்..
தாத்தனாய்..
வாழ்ந்து வீழும் மனிதா..
மனிதனாய் ஒரு நாள் வாழ்ந்து பாரேன்…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments