/* ]]> */
Feb 262020
 

மனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு?

LEGS AND HANDS OF HUMAN BEINGS GROW IN THE SAME SIZE

நம் பார்வைக்கு இரண்டு கால்களின் அளவும் சாம்ம் என்று தோன்றலாம். ஆனால் ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டு கால்களின் நீளத்துக்கும் சற்றே வித்தியாசம் இருக்கலாம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு சேர வருவோரை ஆராய்ந்து பார்த்த ஒரு ஆய்வில் சுமார் 32 சதவீதத்தினரின் இரண்டு கால்களும் ஒரே அளவாக இருக்கவில்லை. அரை செ.மீ. அளவுக்கு மேல் வித்தியாசமாக இருந்தது. சீனாவில் இரண்டு லட்சம் நபர்களின் கை கால் அளவுகளை ஆராய்ந்து பார்த்ததில், 80 சதவிகிதம் சமம்.; 17 சதவிகிதம் ஒருகை நீண்டவர்கள். 3 சதவிகிதம் ஒரு கால் நீண்டவர்களாக இருந்தனர்.

சிறு வித்தியாசங்களை ஒதுக்கி வைத்துப் பார்த்ததில், கை கால்களின் நீளம் சற்றேறக்குறைய ஒன்றுதான். எலும்பு வளர்ந்து நீண்டால், கால் நீளமாகும். எலும்பு வளர்வது நின்றால், கால் வளர்வது நின்று போகும். எலும்புகளில் உள்ள குறுத்தெலும்பு பகுதியில்தான், எலும்பு செல்கள் உருவாகின்றன. அவை நீர்த்துப் போகும்வரை எலும்பு வளர்ச்சி இருக்கும். னோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரே அளவில்தான் புதிய எலும்பு செல்கள் உருவாகும். எனவே இரண்டு கால் கைகளின் நீளமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே அமைந்துவிடுகின்றன.

******************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>