Aug 232012
கடந்து சென்ற ரமலான் பெருநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒவ்வொறு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் சிறுமி அமினாவின் பாடல் காட்சி ஒலிபறப்பபட்டது. எளிமையான பாடல் வரிகளும், இனிமையான குரலோடு சிறுமி அமினாவின் பாடல் மனதுக்கும், செவிகளுக்கும், கண்களுக்கும் இனிமை சேர்த்தது. பிஞ்சு கைகளை ஏந்துகிறேன் என்று இறைவனிடம் மன்றாடுவது மிக அழகாகவும் மனதுக்கு ரம்யமாகவும் இருந்தது. இறைவன் மிகவும் எளிமையானவன் என்பதை குறிக்கும் மிக அழகான பாடலை மூன்றாம் கோணம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments