/* ]]> */
Aug 202010
 
ஏம்பா ரெட் ஜெயண்ட் மூவிஸ்னாலே வித்தியாசமா இருக்கணும்பா…கௌதம் மேன்ன் விண்ணைத்தாண்டி வருவாயால பட்டையக் கெளப்புன மாறி நம்ம ஒரு வித்தியாசமான லவ் ஸ்டோரி கொடுக்கணும்…
லவ் ஸ்டோரில என்ன பெரிய வித்தியாசம்?
இப்ப டைட்டானிக் கூட லவ் ஸ்டோரிதான். எவ்ளோ வித்தியாசமாயிருந்தது..
ரைட்டுப்ப்பா , அப்ப டைட்டானிக் மாதிரியே நம்ம படத்துலயும் ஒரு ஃபாரின் வயசான பாட்டி நெனச்சுப் பாக்குது..அப்படியே ஃப்ளாஷ்பேக்குல கதை தொடங்குது..
சூப்பர் அண்ணே ஒரு ஃபாரின் லவ் ஸ்டோரி. அது ரைட்டு நம்ம வச்சிருக்கறது ஆர்யா கால்ஷீட்டாச்சே.. அஜீத்துன்னா கூட ஹேர் டை பண்ணி ஃபாரின் ஆள் மாதிரி காட்டலாம்..ஆர்யா?
டேய்..இவன் உட்டா ஹாலிவுட் படமே எடுப்பாண்டா.. ஒரு ஃபாரின் பொண்ணு இந்தியனை லவ் பண்ணுற மாதிரி கதை..
ஓஹோ லகான் நாடோடித் தென்றல் மாதிரி..
ஆமாம், இதுல ஆனா ரஞ்சிதா கேரக்டர கட் பண்ணிட்டு ஃபாரின் இந்தியன் லிங் மட்டும் காட்டுறோம்!
சூப்பணேன்..ஆரம்பமே டிஃபரண்டுண்ணேன்..
டேய், இது மட்டும் பத்தாதுடா.. இன்னும் யோசிங்க!
அண்ணே.. டைட்டானிக் லகான்லாம் ஓடுனுச்சுன்னா அதுக்கு காரணம் லவ் மட்டும் இல்ல.. அது பீரியட் ஃபிலிம்ணேன்..
சரியா சொன்னடா.. நாமளும் பீரியட் ஃபிலிம் எடுப்போம்.. நமக்குத் தெரிஞ்ச ஒரே சரித்திரம் சுதந்திர போராட்டம்தான்! அத்தயே புடிப்போம்!
ஆமாண்ணே அப்பத்தான் ஃபாரின் பொண்ணு உள்ள வர கரிக்டா இருக்கும்! ஆனா டைட்டானிக்ல எல்லார் கண்ணயும் கட்டிப் போடற  மாதிரி அந்தக் கப்பல் இருந்துதேண்ணேண்..! நாம அது மாதிரி எதுனா பழைய பொருளா காட்டணும்! பழங்கால பைக் எதுனா உஷார் பண்ணவா? ஹீரோ ஹீரோயின் அதுல போறாப்பல..
டேய் ! யோசிச்சா பெரிசா யோசிடா..நாமளும் கப்பலே காட்டுவோம்டா!
ரெட்ஜெயண்ட் அடுத்த படம் கமல் படம் மன்மதன் அம்புக்கு ஏற்கனவே கப்பல புக் பண்ணிட்டாங்க. நாம் ஏதாவது வேற காட்டணும் .. அந்தக் கப்பல் ஒரு ஊர் சைசுக்கு இருந்துதே அதப்போல..
ஏண்ணே ஊருன்னோன ஞாபகம் வருது? நாம ஏன் நம்ம ஊரு சென்னையே அப்ப எப்படி இருந்ததுன்னு காட்டக்கூடாது?
சூப்பர்டா..டைட்டானிக் கப்பலுக்கு பதில் அந்தக் கால சென்னை.. சரியான ஐடியா.. இன்னா.. ஆர்ட் டைரக்டர்தான் அவஸ்தப்படணும்.. ! அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க..
அது மட்டும் இல்லண்ணே..லகான் ஓடுனுச்சுன்னா அதுக்கு காரணம் அதுல ஒரு கேம் இருந்துதுண்ணே! அதாவது ஃபாரின் காரனும் இந்தியனும் அதுல கிரிக்கெட் வெளயாடி இந்தியாக்காரன் ஜெயிப்பான். அத்த தேட்டர்ல நம்ம ஆள் பாத்து விசிலடிப்பான்..அதப்போல நாமளும் எதுனா ஒரு கேம் ஆட உடணும்…அந்தக்காலத்துல சென்னைல மங்காத்தாதான் ஆடுனாங்க ! நல்ல கேம்தான் ஆனா வெள்ளக்காரன் மங்காத்தா ஆடுனா எப்டி இருக்கும்?
டேய்..மங்காத்தாவை உடுடா..அத அஜித் காலி பண்ணுவாரு நாம குஸ்திய வச்சுக்கலாம்.. ஹீரோ குஸ்தி வீரன்.. அவன் கூட வெள்ளக்காரன் குஸ்தி போடறான்..எப்படி?
சூப்பர்ணேன்..அண்ணே இதே மாதிரி ஃபாரின் பொண்ணு இந்தியனை லவ் பண்ணுற மாதிரி கைட்ஸ் னு ஒரு ஹிந்தி படம் வந்திருக்குண்ணே?
அப்டியா? அதுல ஒரு சீன் சொல்லு!
க்ளைமேக்ஸ்ல அந்த ஃபாரின் பொண்ணு மயக்கமான ஹீரோவை காப்ப்பாத்த அவன ஒளிச்சு வச்சிட்டு ஓடறமாதிரி இருக்குண்ணேன்.
அத அப்டியே தூக்கி நம்ம பட்த்துல போடறோம்.ஓகேவா?
ஓகேண்ணேன்! அங்க உருவி இங்க உருவி சூப்பர் ஒரிஜனல் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டோம். பேர மதராஸப்பட்டிணம்னே வச்சிடலாம்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>