/* ]]> */
Jul 172019
 

மண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன?

மண் பானையில்

மண்பானையானது களிமண் நீரைக் கொண்டு கைகளால் உருட்டிச் செய்யப்படுவது.ஈர நிலையில் செய்யப்படும் பானையை உலர வைத்து சூடு படுத்திய பிறகு விற்பனை செய்கிறார்கள். மண்பானையைக் கூர்ந்து கவனித்தால், அதில் சிறுசிறு நுண்துளைகள் இருக்கும். மண்பானையில் வைக்கும் நீர், தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக  இந்தத் துளைகளில் நுழையும். சிறிது சிறிதாக பானையின் மேலே கசிந்து, ஆவியாகும். ஆவியாகி, பானையின் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும். எனவே பானையில் உள்ள நீர் சற்றே குளிர்ந்துவிடும். நமது உடலும் வியர்வையை வெளியிட்டு, ஆவியாக்கி உடலைக் குளிர்விப்பதும் இதே முறையில்தான். அறை வெப்பத்தைவிட 5 டிகிரி செல்சியஸ் குறைவாகத்தான், மண் பானை நீரைக் குளிர்விக்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>