/* ]]> */
Sep 062010
 
மணக்கும் மொகல் பிரியாணி செய்வது ரொம்ப சுலபம் தாங்க..எங்க ஊர்ல எல்லாம் பெருநாட்களின் போது நாங்க பெண்களே அஞ்சு கிலோ வரையும் செஞ்சுடுவோம்!ரொம்ப சமையல் தெரியாதவங்க கூட சுலபமா குக்கர்ல செய்யலாம் இந்த ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறை பாத்து!

தேவையான பொருட்கள பாக்கலாம்..

1. நயமான சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி- 11/2 கிலோ( அரிசி தாங்க ரொம்ப முக்கியம்! புது அரிசியா இருந்தா போச்சு…சோறு கொழஞ்சு கஞ்சியாகிடும்! நல்ல பழைய அரிசியா பாத்து வாங்கிடனும். அதோட சீரக சம்பாவுக்கு..1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணி..பாஸ்மதின்னா 1 கப் அரிசிக்கு..11/2 கப் தண்ணி தான் அளவு

2.11/2 கிலோ ஆட்டிறைச்சி (அரிசிக்கு மேல கறி போடனும்..அதாவது 11/2 கிலோ அரிசிக்கு 2 கிலோ இறைச்சி..இல்லாட்டி..சரிக்கு சரியாவது போடனும்)

3.பெரிய வெங்காயம்-1 கிலோ (நீளமா, மெல்லிசா வெட்டிக்கணும்)

4.தக்காளி- 1 கிலோ (துண்டங்களாக வெட்டிக்கணும்)
5. பட்டை, கிராம்பு ,ஏலம்- மூன்றும் சேர்த்து அரச்ச பொடி 1/2 கப்

6. புதினா- ஒரு பெரிய கட்டு( ஆய்ந்து, கழுவி வைத்துக் கொள்ளவும்)

7. மல்லித்தழை- ஒரு பெரிய கட்டு (ஆய்ந்து , கழுவி வைத்துக் கொள்ளவும்)

8. இஞ்சி, பூண்டு விழுது-1 1/2 கப்

9. தயிர்- 2 கப்

10. எண்ணை- 2 கப்

11. நெய்- 1 கப்

12. ப.மிளகாய்- 5 (அ) 6

13. தேங்காய்ப் பால் -அரை மூடி துருவி, பால் பிழிந்தது, 1 கப்

14. மிளகாய்த் தூள்- 2 லிருந்து 4 ஸ்பூன் வரை தேவைக்கேற்ப

15. உப்பு – தேவைக்கேற்ப

16. 2 எலுமிச்சை பழங்களின் சாறு…

செய்முறை..
1*அடுப்பில் 12 லி குக்கரை ஏற்றி பாதி நெய்யையும் எல்லா எண்ணையையும் விடவும்.

2*காய்ந்ததும், பட்டை கிராம்பு ஏலப் பொடியைப் போடவும்.

3* பிறகு ப.மிளகாய், வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

4*உடனே புதினா, மல்லி போட்டு வதக்கி, கறியையும் சேர்க்கவும்.

5* கறியோடு 1 மேஜைக் கரண்டி உப்பு சேர்க்கணும்.( இங்க தாங்க மொகல் பிரியாணியோட ரகசியம் ஒண்ணு கவனிக்கணும். இறைச்சியிலிருந்து அதனுடைய ஊண் தண்ணி என்று சொல்லக் கூடிய நீர் தானாகப் பிரிஞ்சு வற்றும் வரையில வேற எதுவும் போடாம வதக்கணுங்க . அப்ப தான் நல்ல ருசி கிடைக்கும்.)

6* பிறகு, தக்காளி சேர்த்து, மிளகாய்த்தூள் சேக்கணும், தக்காளி கரஞ்சு, காரம் மேல மிதக்கும் போது இஞ்சி பூண்டு விழுது சேத்து , பச்சை வாடை போகும் வரை வதக்கணும்.

7*அப்பறம் தயிர் சேத்து, தேவைப் பட்டால், கொஞ்சம் போல் தண்ணி சேத்து கிளறி வெயிட் போட்டு குக்கரை மூடவும்.

8* சத்தம் வந்து குறைத்து வைத்து, 10 நிமிடம் கழித்து திறக்கவும்.

9*இப்போ தேங்காய்ப் பாலும் தண்ணீருமா சேத்து, 11/2 கிலோ அரிசிக்கு (சீரக சம்பா-சுமாரா 14- 15 கப்)(பாஸ்மதி- 10-11 கப்) தண்ணீர் சேத்து, ஒரு கொதி வரும் முன்ன , கலஞ்சு, ஊற வச்சு இருக்குற அரிசிய , துளி தண்ணி இல்லாம வடிச்சு, போடவும்.

10*அரிசியும் மசாலா தண்ணியுமா கொதிக்க ஆரம்பிக்கும்.
கொஞ்ச நேரத்துல தண்ணியும் சோறுமா வத்தி வர சமையம் ( இப்ப ருசி பாத்து உப்பு, காரம் சேத்துக்கலாங்க) எலுமிச்ச சாறு சேத்து, மீதம் உள்ள நெய்யையும் சேக்கனுங்க

11*. நல்லா( அரிசி ஒடையாம ) கிளறி, குக்கர் மூடி போட்டு வெய்ட்டையும் போட்டு, மூடி, தீயக் கொறச்சு வச்சுடுங்க.

12* 10 தே நிமிஷத்துல மணக்கும் மொகல் பிரியாணி ரெடி! இப்ப பிரியாணிக்கு சைட் டிஷ்..தால்சா!

தேவையான பொருட்கள்-
1. துவரம் பருப்பு- 2 கப்

2. கடலைப் பருப்பு- 1 கப்

3. பெ. வெங்காயம் -4( நீளமாக வெட்டிக்கொள்ளவும்)

4. தக்காளி- 4( நறுக்கிக் கொள்ளவும்)

5. ப.மிளகாய்- 4

6. இஞ்சி பூண்டு விழுது-கால் கப்

7.பட்டை, கிராம்பு ,ஏலம் பொடி-1. ஸ்பூன்

8. ஆட்டெலும்பு- கால் கிலோ

9. கத்திரிக்காய்- கால் கிலோ

10. புதினா, மல்லி- ஒரு கைப்பிடி

11. மாங்காய்- 1

12. புளி- ஒரு பெரிய எலுமிச்சை அளவு

13. மிளகாய்த்தூள்- 2-3 ஸ்பூன் தேவைக்கேற்ப

செய்முறை-
1*பருப்புகளை கழுவி, அதோடு ஆட்டெலும்பு, புதினா, மல்லி, வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வேக விடவும்.

2* பிறகு, புளியைக் கரைத்து ஊற்றி, கொதித்தும், கத்திரிக்காய் போட்டு, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

3*காய் வெந்ததும் உப்பு போட்டு,வாணலியில் எண்ணை விட்டு, பட்டை ,கிராம்பு ,ஏலப்பொடி போட்டு, பிறகு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து குழம்பில் கொட்டவும்.

4* மாங்காய்த் துண்டங்களைப் போட்டு சிறிது நேரம் மூடி வைத்து அடுப்பை அணைக்கவும். தால்சா தயார்!

அப்புறம் இருக்கவே இருக்கு, தயிர் வெங்காயப் பச்சடி!
…ஷஹி…


ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>