மடிசார் மாமி மதன மாமா கில்மா படமா ?
மடிசார் மாமி மதன மாமி என்ற படம் படப்பிடிப்பில் இருக்கிறது. மடிசார் மாமி மதன மாமா பட ஸ்டில்கள் நெட்டில் உலா வரத் தொடங்கி இருக்கின்றன . இந்தப் பட கவர்ச்சி ஸ்டில்களை பார்த்தால் இது கில்மா படமா என ஒரு டவுட்டு ( நாட்டுக்கு ரொம்ப அவசியம் ). ஷில்ப் மோஷன் வொர்க்ஸ் மற்றும் வோல்ட் ஃப்ளிக் லைஃப் நிறுவனம் சார்பில் விவேக் தீக்ஷி மற்றும் சுசாந்த் கர்டு இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘மடிசார் மாமி மதன மாமா’.
மடிசார் மாமி மதனா மாமா நடிகர் நடிகை கள்
மிதுன், ரிஷி பூட்டாணி இருவரும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மான்சி, மற்றும் காயத்ரி நடிக்கின்றனர். அஞ்சலி என்கிற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் நான்கு சிறுமிகளும் நடித்துள்ளனர்.
ரவிபிரகாஷின் கதைக்கு ரஞ்சித் போஸ் திரைக்கதை எழுதி உள்ளார். ரவிபிரகாஷ், ரஞ்சித் போஸ் இருவரும் இணைந்து வசனம் எழுதி உள்ளனர். அதே போல ரஞ்சித் போஸ் படத்தை இயக்கி படத்தொகுப்பும் செய்துள்ளார். எல்.வி.கணேசன் இசையமைக்க, பாடல்களை பழனிபாரதி, யுகபாரதி, முத்துவிஜயன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
மடிசார் மாமி மதன மாமா கதை
சமுதாயத்தில் வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் மூன்று குடும்பங்களின் பிரச்சனைகளை மூன்று வயது சிறுமி தீர்த்து வைப்பதுதான் கதை. கதையில், கணவன் மனைவிக்கு இடையே ஆன புரிதலின் அவசியம், பெண் குழந்தையின் முக்கியத்துவம் என சராசரி குடும்பத்தின் சம்பவங்களை நகைச்சுவையோடு படமாக்கி உள்ளனர்.
குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்தப் படம் மஹாபலீஸ்வரர் பகுதியில் படமாக்கி உள்ளனர். ஆகவே இது கில்மா படம் போல் தோன்றினாலும் இது கில்மா படம் இல்லை என அனைவருக்கும் , குறிப்பாக சீன் பட பிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Please comment with your real name using good manners.