/* ]]> */
Jan 102020
 

மக்கள்தொகைப் பெருக்கத்தால், காற்றிலுள்ள ஆக்ஸிஜன் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்புண்டா?

மரங்களும் ஆக்ஸிஜனும்

சராசரி மனிதர் ஒரு நிமிடத்தில் 7 லிருந்து 8 லிட்டர் வரை காற்றை சுவாசிக்கிறார்.  இதில் சுமார் 20 சதவிகிதம் ஆக்ஸிஜன் இருக்கும். உள்வாங்கும் ஆக்ஸிஜனில் வெறும் நான்கில் ஒரு பங்கை மட்டுமே நமது உடல் உள்ளே உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. மீதமுள்ள மூன்று பகுதி வெளியே விடும் மூச்சுக் காற்றில் வந்துவிடுகிறது. எனவே ஒரு நாளைக்கு சராசரி நபர் , சுமார் 550 லிட்டர் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறார். அதாவது உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் கார்பன்-டை ஆக்ஸைடு வடிவில் வெளியே வந்துவிடுகிறது.

ஒளிச்சேர்க்கை நிகழ்வின்படி தாவரங்கள் கார்பன் –டை –ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை உமிழ்கிறது என நாம் அறிவோம். சுமார் 50 செ.மீ. சுற்றளவு கொண்ட 30-40 மீட்டர் உயரமான மரம் ஒரு நாளைக்கு சுமார், 92 லிட்டர் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது.  அதாவது  சுமார் 7 மரம் ஒரு நபரின் தினசரி ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.

உலகில் சுமார் 400 பில்லியன் மரங்கள் உள்ளன என செயற்கைக் கோள்கள் அளிக்கும் தரவுகளை வைத்து மதிப்பீடு செய்யும்போது தெரிய வருகிறது.

அதாவது  சுமார் 57 பில்லியன் ம்னிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை உலக மரங்கள் ஆண்டுதோறும் வெளியிடுகின்றன. தற்போது உலக மக்கள்தொகை இன்னும் 7.7 பில்லியன் மட்டுமே.

அதுபோல பிற உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜன் தேவை , கார் போன்ற இஞ்சின்கள்  இயங்க ஆக்ஸிஜன் தேவை. நெருப்பு பற்ற வைக்க ஆக்ஸிஜன் தேவை.

பல்வேறு படிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதின் மூலம் வளிமண்டல கார்பன்-டை- ஆக்ஸைடு செறிவு ஆண்டுதோறும் சுமார் 2.2 ppm அளவுக்கு உயர்கிறது  என ஒரு ஆய்வு கூறுகிறது

அதாவது, ஆக்ஸிஜன் அளவும் குறைகிறது என்பது பொருள்.இப்படியே போனால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர் , ஆக்ஸிஜன் அளவு இன்றைய நிலையைவிட 1 % குறைந்து போகும். எனவே, இது உடனடி ஆபத்து அல்ல.

**********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>