/* ]]> */
Oct 252016
 

ப்ரெட் ரசகுல்லா/ தயிர் வடை- செய்வது எப்படி?
1. ப்ரெட் ரசகுல்லா:
bread-rasagulla
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள்-5; பால்-1 டம்ளர்; சர்க்கரை-5 தேக்கரண்டி; பாதாம், முந்திரி.
செய்முறை:
ஓரங்களை நறுக்கிய பின்பு சிறிய மூடியால் ப்ரெட்டை வட்ட வடிவமாக வெட்டவும். பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். டம்ளரில் ஒரு ப்ரெட் துண்டு போட்டு சிறிதளவு பால் ஊற்றி, மேலே பாதாம், முந்திரியைச் சேர்க்கவும். இதேபோல மீதமுள்ள ப்ரெட்டை தயாரித்து பறிமாறவும்.
2. தயிர் வடை:
curd-vada
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள்-5; தயிர் -1 டம்ளர்; பால் சிறிதளவு; கேரட் துருவல், மல்லித் தழை, உப்பு.
செய்முறை;
ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்தபின் சிறிதளவு பால் சேர்த்து, கெட்டியாகப் பிசையவும். சிறிய பந்துகளாக உருட்டி வடை போல தட்டி, தட்டில் அடுக்கவும். தயிருடன் கேரட் துருவல், மல்லித் தழை, உப்பு கலந்து அடுக்கி வைத்த வடை மீது ஊற்றி பறிமாறலாம். எண்ணெய் இல்லாத வடை என்பதால் அனைத்து வயதினரும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ’ கால்சியம் நிறைந்தது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>