/* ]]> */
Apr 052019
 

 

பொன்னாங்கண்ணியின் பலன்கள்:

பொன்னாங்கண்ணியின் பலன்கள்

  • கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு செர்த்து துவையல் அரைக்கவும். 48 நாட்களுக்கு, தினமும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.  பார்வை தெளிவு பெரும். உடல் மெருகு பெறும்.
  •  உடல் சூடு மிகுதியானவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் ஒரு கைப்பிடி கீரையுடன் உப்பு, நீர்  சேர்த்து வேக வைத்து சாப்பிடுங்கள்.

கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு  நல்ல நிவாரணி. வதக்கி, பொறுக்கும் சூட்டில் கண்கள் மீது வைத்துக் கட்டவும். கண் எரிச்சல், வலி, கண் சிவப்பு நீங்கும்.

* மூல நோயால் சிரமப்படுபவர்கள், வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால், நல்ல பலன் பெறலாம்.

* ஒரு கட்டு கீரையை சுத்தம் செய்து , பாசிப் பருப்புடன், 5 பூண்டு  பல்,  தோல் நீக்கிய இஞ்சித் துண்டு , உப்பு சேர்த்துக் குழைய வேக விடவும்.  இதை நன்கு மசித்து, ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் சேர்க்கவும்.  வாரத்தில் 3 நாட்கள்கால் தம்ளர் ஸ்ர்த்துக் கியர் சாப்பிட்டால், ஊளைச் சதை குறையும்.

*  நீர் விட்டுக் கழுவி பொடியாக நறுக்கிய ஒரு தம்ளர் கீரையுடன் துவரம் பருப்பு உப்பு சேர்த்துகுழைய வேக வைக்கவும். சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் எடை கூடும்.

* பொடியாக நறுக்கிய கீரை 2 தம்ளர், பயத்தம் பருப்பு அரை தம்ளர், உப்பு சேர்த்துக் குழைய வேகவிடவும். கடுகு , ஜீரகம் போட்டு தாளித்து இதில் கொட்டவும்.  கால் தம்ளர் சேர்த்துக் கிளறவும்.

சூடான சாதத்தில் பிசைந்து 27 நாட்கள் சாப்பிட்டால், கண் கோளாறு நீங்கும். இருதயம் வலுவடையும். ரத்த ஓட்டம் சீரடையும். மூளை நரம்புகள் பலம் பெறும்.

  • கைப்பிடி அளவு துவரம் பருப்பை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் ஊற்றி, ஜீரகம், தேவைக்கேற்ப சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்துக் கிளறவும். பொடியாக நறுக்கிய ஒரு தம்ளர் கீரை மசித்த பருப்பு, உப்பு , 2 தம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க சூப் படஹ்த்தில் வந்ததும், மிளகுத்தூள் தூவி, வளர் பருவத்தினருக்கு பருகக் கொடுங்கள். எலும்புகள் உறுதி பெறும். ஆரோக்கியம் மேம்படும்.
  •  அரை தம்ளர் கீரையுடன், பட்டை, கிராம்பு, தலா ஒன்று, உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து, நீரை வடிகட்டி அருந்துங்கள். வாய் துர்நாற்றம் நீங்கும்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>