ஜெயா டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரான சரவணராஜன் மீது நிகழ்ச்சி தொகுப்பாளரான பெப்ஸி உமா போலீஸில் புஹார் அளித்துள்ளார். அந்த டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஆல்பம்’ நிகழ்ச்சி மீது தலைமைக்கு அவ்வளவாக திருப்தி இல்லையாம். மறைமுகமாக சொல்லிப் பார்த்தும், சரவணராஜன் அதை நிறுத்தவில்லையாம். ஏற்கெனவே சில ஜோதிட நிகழ்ச்சிகளை ரபி பெர்னார்ட் கேன்சல் பண்ணிவிட்டதால், அவர்தான் ‘ஆல்பம்’ நிகழ்ச்சிக்கும் தொல்லை கொடுத்திருக்கவேண்டும் என்று சரவணராஜன் ரபியிடமே வம்புக்குப் போயிருக்கிறார். எனவே ரபி பெர்னார்ட் இவர் மீது தலைமையிடம் புகார் செய்துவிட்டார். இப்படி தொடர்ந்து , உளைச்சலில் இருந்ததால், அடுத்த புரோகிராம் பற்றி பேச வந்த உமாவை தன்னுடைய அறைக்கு வரவழைத்து திட்டியதோடு பொதுவில் ஓப்பனாகவும் திட்ட ஆரம்பித்துவிட்டார். எஸ்.எம்.எஸ் மூலமும் ஏடாகூடமாய்த் திட்டிவிட்டார். அதையே ஆதாரமாக வைத்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா, வன்கொடுமைப் புஹார் அளித்துவிட்டார். சரவணராஜனின் குடும்பத்தினர் வந்து உமாவிடம் எத்தனையோ கெஞ்சியும் உமா பின்வாங்கவில்லை. .
ஏற்கெனவே ஜெ. கலந்துகிட்ட டில்லி புரோக்ராமை ‘அவுட் ஆப் ஃபோகஸா’ காட்டியும் , திருச்சியில் பசு தானத்தை கவரேஜ் பண்ணாம விட்டுவிட்டதும் ஜெ.வோட டென்ஷனை அதிகமாக்கியிருந்தது. எல்லாம் மொத்தமா சேர்ந்துதான் இப்படி ஆகிவிட்டது.. முன்னாள் மாணவரணிச் செயலாளராக இருந்த சரவணராஜனின் நிலைமை இன்று ஜெயில் வரை போய்விட்டது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments