/* ]]> */
Mar 042013
 

பெண்கள் கற்பை காக்கும் எஸ்.ஓ.எஸ் வாட்ச் | காக்கும் கடிகாரம்

SOS watch - Kadigaram

SOS watch – Kadigaram

எஸ்.ஓ.எஸ். வாட்ச்:
சமீபத்திய டெல்லி நிகழ்ச்சியினால் மன அதிர்ச்சிக்குள்ளாகாதோர் யாருமில்லை. ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பெண்களைக் காப்பாற்றும் வழி பற்றி சிந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் “பெண்களின் பாதுகாப்புக்கான விசேஷ எஸ்.ஓ.எஸ். வாட்ச்களை அரசே தயாரித்து 500 ரூபாய்க்கு வழங்கும்” என்று அறிவித்திருக்கிறார்.
இந்த விசேஷ வாட்ச்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பார்க்கலாம்.
பண்டைக் காலத்தில், கப்பலில் பயணம் செய்பவர்கள் ,கப்பல் மூழ்கும் தறுவாயில்’ நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். காப்பாற்றுங்கள். ‘ என்ற அர்த்தத்தில், தந்திக் கருவி மூலம் எஸ்.ஓ.எஸ். என்ற மூன்று எழுத்தை கரைக்கு அனுப்புவார்கள் என்பது நாம் அறிந்ததே. எனவே உதவி கேட்டு அழைக்கப் பயன்படும் இந்த வாட்ச் எஸ்.ஓ.எஸ். வாட்ச் என்று அழைக்கப்ப்டும். ஸெல்போன் போல இந்த வட்ச்சை சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த வாட்ச்சில் சிம் கார்டு ஒன்றைப் பொருத்த இடம் இருக்கும். முக்கியமான எண்கள் என மூன்று முதல் ஐந்து தொலைபேசி எண்களை அதில் பதிவு செய்ய முடியும். செயற்கைக்கோளோடு தொடர்பு கொள்ளக்கூடிய ஜி.பி.எஸ். வசதி இதில் இருப்பதால், இதை அணிந்திருப்பவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை சரியாகக் கண்டு பிடித்து விடலாம்.
   மேலும் இந்த வாட்ச்சில் ‘ பேனிக் பட்டன்’ என்ற ஒரு பட்டன் உண்டு. ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பெண் இந்த பட்டனை ஒருமுறை அழுத்தினால் போதும். போலீஸுக்கும் பதிவு  செய்திருக்கும் எண்களுக்கும் செய்தி போய்விடும். மொபைல் போனில்கூட இந்தவசதி உண்டே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், உங்களை அட்டாக் பண்ணிக்கொண்டிருக்கும் எதிரி உங்களை செல்போனை ஆபரேட் பண்ண விடமாட்டார். மேலும் உங்கள் கையிலிருந்து அந்த செல்போனை பிடுங்கிவிடக்கூடும். மோசமான தாக்குதல் தொடரும். ஆனால் வாட்ச்சில் ஒரு பட்டனைத் தட்டிவிடுவது அப்படி ஒன்றும் வித்தியாசமாகத் தெரியாது. எதிரி அறியாவண்ணம் கூட செய்துவிட முடியும். ஆபத்தில் உள்ள பெண் அனுப்பக்கூடிய சமிக்ஞைகளை போலீஸ் உடனடியாகப் பார்த்து, அலெர்ட் ஆகிவிடும். தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். பெண்ணின் வீட்டினரும் உறவினரும்கூட பெண் இருக்கும் இடத்துக்கு விரைந்துவந்து விட முடியும்.
      பாலியல் கொடுமையும் ஆசிட் வீச்சும் பெருகிவிட்ட இந்நாளில் இன்த எஸ்.ஓ.எஸ். வாட்ச்சை பெண்களுடன் சேர்ந்து அனைவரும் எதிர்பார்ப்போம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.