/* ]]> */
Apr 212014
 

பெண்களுக்கான தற்காப்பு துப்பாக்கி:

rif
டெல்லி சம்பவம் பலவித சட்டத் திருத்தங்களையும், புதிய சட்டங்களையும் கொண்டுவந்தது மட்டுமல்ல. பெண்களுக்கான பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியும் வெளிவந்துவிட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் கான்பூரில் உள்ள ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலை பெண்களுக்காகவே பிரத்தியேகமாக ஒரு துப்பாக்கியை வடிவமைத்துள்ளது.
டெல்லியில் ‘நிர்பயா’ என்ற பெண்ணின் கற்பழிப்பு கொலைக்குப் பிறகு, எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நாடு முழுவதும் பெண்களுக்கான வன்முறை தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. சென்னையிலும்கூட உமா மகேஸ்வரியின் கொலை வழக்கு மனதைப் பதற வைத்தது. பெண்கள் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், சமூக விரோதிகளின் சபலத்துக்கு ஆளாகும் அவலம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
பெண்கள் தங்கள் தற்காப்புக்காக கைப்பையில் மிளகாய்ப்பொடி வைத்துக்கொள்ளவேண்டும் என்ற தற்காப்பு ஆலோசானைகளைத் தொடர்ந்துதான், இந்த கைத்துப்பாக்கி அவதாரம் எடுத்துள்ளது. இந்தியாவிலேயே பெண்களுக்கென சிறப்பு தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்ட முதலாவது உள்நாட்டு துப்பாக்கி இது. இதற்கு ‘நிர்பீக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் டெல்லி ‘நிர்பயா’வின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. நிர்பீக் என்பதற்கு ‘ அச்சமில்லை’ என்று அர்த்தமாம்.
இந்த சிறிய வகை இலகு ரக துப்பாக்கியின் மொத்த எடை 500 கிராம்தான். பெண்களின் கைப்பையில் மட்டுமல்ல மணிபர்ஸில்கூட இதை வைத்துக்கொள்ளும் வகையில் எளிமையானது. மர கைப்பிடியுடன் உலோகத்தில் உருவாகக்ப்பட்டது. 6 குண்டுகள் நிரப்பிக்கொள்ளலாம். 50 அடி தூரம்வரை குறிபார்த்து சுடலாம். இதன் விலை 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்.
பெண்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. அறிமுகப்படுத்திய சில தினங்களிலேயே இதன் விற்பனை பெருக ஆரம்பித்துவிட்டது. இது குறித்த விசாரணை எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்ரி அயல்நாடுகளிலும்கூட இதுகுறித்த வரவேற்பு நிலவுகிறது.
21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே, இந்த துப்பாக்கிக்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். தேவையின் அவசியத்தை குறிப்பிடுவதோடு அதை சட்ட விரோதமாக பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழியும் அளிக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் குறித்து ,காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகரிகள் விசாரணை நடத்துவார்கள். மனநலம், உடற் குறைபாடு தொடர்பான மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படும். அனைத்தும் முடிந்தபின் , துப்பாக்கி வழங்கப்படும். குற்றப் பிண்ணனி ஏதும் இருந்தால், தொடக்கத்திலேயே விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உரிமம் வாங்கிய பின்னரும் குறிப்பிட்ட இடைவெளியில் உரிமம் புதுப்பிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால், சட்ட விரோதமாகக் கருதப் பட்டு தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புண்டு.
இந்தத் துப்பாக்கிக்கு ஒருபக்கம் ஆதரவு பெருகியபோதும், ,மறுபுறம் எதிர்ப்பும் வலுக்கிறது. ‘ துப்பாக்கி வைத்திருப்பது மட்டுமே உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. மாறாக அதுவே பல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. ‘ என்ற கருத்து நிலவுகிறது. துப்பாக்கி ஒரு வன்முறை ஆயுதம். பெரும்பாலான இடங்களுக்கு துப்பாக்கி கொண்டுசெல்ல தடை உள்ளது. அதை எப்போதும் கையில் வைத்திருக்கவும் முடியாது. வீட்டு அலமாரியில்தான் பத்திரப்படுத்தி வைக்க முடியும். எனவே துப்பாக்கி எபப்டி பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்? என்று கேள்வி கேட்கிறார்கள் சிலர். இப்படி ஆளாளுக்கு துப்பாக்கியை கையில் தூக்கிக்கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை பழி தீர்க்கும் ஆயுதமாகக்கூட பயன்படுத்திவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்றும் வாதிடுகிறார்கள்.
ஆனால், எது எப்படி இருப்பினும், இந்த துப்பாக்கி அறிமுகமான முதல்நாளே, மூன்று பெண்கள் இதை விலைக்கு வாங்கினர். சீனியர் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியான கீதா (லக்னோ), அரசியல் பின்புலம் கொண்ட கல்பனா பாண்டே([பராபங்கி), , குடும்பத் தலைவி சீமா கர்பாண்டா ( புதுடெல்லி)ஆகியோர்தான் அந்த மூன்று பெண்கள்!
பெண்களும் திருப்பித் தாக்க முடியும் என்ற செய்தி சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேரும் என்பதில் ஐயமில்லை.
^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>