/* ]]> */
Jan 312018
 

பூமி சுற்றும்போது, அதன் அதிர்வை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

earth rotation

பஸ் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை முதலில் பார்ப்போம். பஸ் கிளம்பும்போது இருக்கையில் பின்னோக்கி உந்தப்படுகிறோம். பிரேக் பிடித்தால், முன்னோக்கி செல்கிறோம். பஸ் சிரான வேகத்தில் செல்லும்போது முன், பின் உந்துதல் எதுவும் இருப்பதில்லை. நெடுஞ்சாலைகளில் பஸ் செல்லும்[போது, அதன் இயக்கம் நமக்குப் புலப்படுவது இல்லை.

நியூட்டன் முதல் விதி இதைத்தான் காட்டுகிறது.ஒரு பொருள் ஓய்வாக இருக்கும்போது, அது ஓய்வாக இருக்கவே முயற்சி செய்யும். அதனையும் மீறி , அதன் மீது உந்தும் விசை செலுத்தும்போதுதான், அது நகரும். அதுபோல ஒரு பொருள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அதே சீரான வேகத்தில் செல்லவே முயற்சிக்கும். அதற்கு எதிரான விசை செலுத்தினால் மட்டுமே, அதன் இயக்கம் மாறும். நிற்கும். அதாவது இயற்பியல் பார்வையில் சீர் வேகமும் ஓய்வு நியலியும் ஒன்றுதான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>