/* ]]> */
Mar 072019
 

பூமத்திய ரேகையை விட துருவங்களில் எடை அதிகம் இருக்கும் என்கிறார்களே, ஏன்?

பூமத்திய ரேகை

பூமி சுழலும்ப்போது, அதில் ‘மைய விலக்கு விசை’ ( centrifugal force)  ஏற்படும். இந்த மைய விலக்கு விசை துருவங்களில் பூஜ்யம் ஆகவும், நில நடுக்கோட்டில் அதிக பட்சமாகவு அமையும் அமையும். புவியின் ஒவ்வொரு புள்ளி யிலும் ஈர்ப்பு விசைக்கு எதிராக இந்த மைய விலக்கு விசை அமையும். இரண்டின் வேறுபாடுதான் ஒவ்வொரு புள்ளியிலும் பூமியின் மையத்தை நோக்கிய ஈர்ப்பு விசையின் முடுக்கு வேகமாக அமையும். துருவத்தில் ஈர்ப்பு விசையின் முடுக்கு வேகம் 980665 செ.மீ/ நொடி நில நடுக்கோட்டில் கூடுதல் மைய விலக்கு விசை அமைவதால், அங்கே ஈர்ப்பு விசையின் முடுக்கு வேகம் சுமார் நொடிக்கு நொடி 3.39 செ.மீ./ நொடி நில நடுக்கோட்டில் குறைவாக இருப்பதால்,  எடை குறைவது போன்ற மயக்கம் ஏற்படும். ஆனால், பூமியில் எல்லா இடங்களிலும் குறைவாக இருக்கும். எனவே பொருட்கள் மீது பூமி செலுத்தும் விசை நில நடுக்கோட்டில் குறைவாக  இருப்பதால், எடை குறைவது போன்ற மயக்கம் ஏற்படும்.ஆனால், பூமியில் எல்லா இடங்க/ளிலும் ஒரே அளவு பொருள் திணிவு இல்லை. எனவே எல்லா  இடங்களிலும் ஈர்ப்பு விசை  ஈர்ப்பு விசை சமமாக இருக்காது. எடுத்துக்காட்டாக மலைப் பகுதிகளில் , சற்றே கூடுதல் ஈர்ப்பு விசை இருக்கும். எனவே பூமத்திய ரேகையை விட  துருவங்களில் எடை அதிகம் இருக்கு என்பது கோட்பாடு அளவில் சரி என்றாலும் நடைமுறையில் அவ்வாறு கூறுவது சரியில்லை.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>