“இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்”
உலகில் ஆண்டுக்கு 127 லட்சம் மக்கள் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிகிறார்கள்.இவர்களில் 76 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.புற்றுநோயினால் ஏற்படும் உயிரிழப்பு 2030ல் இதைவிட 80% அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம்.அதாவது வருடத்திற்கு 260 லட்சம் புது புற்று நோயாளிகள்.அதில்170 லட்சம் உயிரிழப்புகள்!!!எய்ட்ஸ்,மலேரியா,டிபி,ஆகிய மூன்றையும் கூட்டினால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும் அதிகமான இறப்புகள் புற்றுநோயினால் ஏற்படக்கூடும் என்பதே இதன் சாராம்சம்.
புற்றுநோய் ஏற்படுத்தும் காரணங்களாக எண்ணிலடங்கா நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் கண்டறியப் பட்டுள்ளன.இவற்றில் பல வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டவை.வாழ்க்கை முறையில் சில சில மாற்றங்கள் செய்வதின் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும்.
புற்றுநோயை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்:
புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமானவற்றை தவிர்க்கவும்.
மதுபானங்களை தவிர்க்கவும்.
உடற்பருமனை குறைக்கவும்.
தினமும் குறைந்தபட்சம் 1/2 மணிநேரம் உடற்பயிற்சி செய்யவும்.
மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நோய்த்தடுப்பு மருந்துகள் மூலம் Hepatitis B & C மற்றும் HPV கிருமி ஆகியவற்றை கட்டுப்படுத்தி கல்லீரல் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
[வளர்ந்த நாடுகளில் 22 %,வளர்ச்சி கண்ட நாடுகளில் 6சதவிகித புற்றுநோய் கிருமிகளால் உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது.இவற்றில் முக்கியமானவை கருப்பைவாய் புற்றுநோய் வைரஸ் [HUMAN PAPILLOMA VIRUS ],கல்லீரல் புற்றுநோய் உண்டாக்கும் Hepatitis B & C ஆகும்.]
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.
அதிகளவில் உணவில் காய்கள்,பழங்கள்,பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளவும்.
துரித உணவு வகைகளை குறைத்துக் கொள்ளவும்.
சமைத்த எண்ணெய்யை திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடாது.
புகையிலை:புகை நமக்கு பகை:
புற்றுநோய்க்கான மிகப்பெரிய காரணகர்த்தா புகையிலை.புற்றுநோயால் இறப்பவர்களில் 25 %அதிகமானவர்கள் புகைபிடிப்பவர்கள்.உலகில் புகையிலை 6 வினாடிகளுக்கு ஒருவரின் உயிரைக்குடிக்கிறது.
புகைபிடிப்பவரை மட்டுமின்றி ,அருகாமையில் இருப்பவர்களையும் பாதிக்கிறது.
புகைபிடிப்பவர்க்கு வாய்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 27 மடங்காகுகிறது.
உணவுக்குழாய் புற்றுநோய் 10 மடங்கும்,இரைப்பை புற்றுநோய் 50 % அதிகமாகவும் புகைப்பவர்களை பாதிக்கிறது.
ஆபத்தான புகை பழக்கத்துடன் குடிபழக்கமும் இணைந்திருந்தால் புற்றுநோயினால் ஏற்படும் ஆபத்து மேலும் பன்மடங்கு அதிகரித்து விடுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் சில வகை புற்றுநோய் ஏற்படுகிறது.அசுத்தமான தண்ணீர் மற்றும் காற்றினாலும் ,மற்றும் சில வேதிப்பொருட்களினாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.அதுபோல் உணவில் சேரும் சில வேதிப்பொருட்களினாலும் சீரண மண்டல புற்றுநோய் ஏற்படுகிறது.
Clinical Nutrition துறையால் நடத்தப்பட்ட பலவித ஆராய்ச்சிகளின் மூலம் புற்றுநோய் வராமல் தடுப்பதில் உணவின் முக்கிய பங்கு வெளிப்படுத்தப் பட்டிரிக்கிறது.புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான,வாய்ப்புகளை குறைப்பதற்கான உணவு முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நன்றி:மருத்துவர் சே.மு.சந்திரமோகனின் புற்றுநோயை வெல்ல கைகோர்ப்போம் என்ற கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
தொகுப்பு:diet-b
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments








Please comment with your real name using good manners.