/* ]]> */
Dec 172014
 

புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கும் ஆலிவ் ஆயில்:

olive oil
ஆலிவ் எண்ணெயானது மற்ற எண்ணெயைவிட மிகவும் ஆரோக்கியம் தரும் எண்ணெய். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டுமின்றி அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
இதய நோயைத் தடுக்கும். ஆலிவ் எண்ணேயானது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், உடலில் கெட்ட கொலாஸ்ட்ரலின் அளவைக் குறைக்கவும் உதவும். இப்படி ரத்த அழுத்தம் , கொலாஸ்ட்ரல் போன்றவை குறைந்தால், இதய நோய் வருவது தடுக்கப்படும். நீரிழிவைத் தடுக்கும் ஆலிவ் ஆயிலில்’ மோனோசாச்சுரேடெட்’ கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை சர்க்கரை நோயை அண்டவிடாமல் தடுக்கும். அதிலும் தினமும் உணவில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், 50% நீரிழிவு நோய் வரும் அபாயம் குரையும். புற்றுநோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் ஆலிவ் ஆயிலில் ஆண்டிஆக்ஸிடென்டுகள் மற்றும் வைட்டமின்-ஈ அதிகம் உள்ளது.
இதில் உள்ள வைட்டமின்-ஈ மிகவும் சக்தி வாய்ந்தவைட்டமின். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். அதிலும் தினமும் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வருவதால், மூளையில் சக்தி அதிகரிப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க வைட்டமின் -ஈ மிகவும் முக்கியமானது. இத்தகைய வைட்டமின்-ஈ ஆலிவ் ஆயிலில் அதிகமக உள்ளது. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்த ஓடட்ம் சீராக இருந்து, உடலானது பொலிவோடு அழகாக இருக்கும். மேலும் உறுப்புகளும் சீராக செயல்படும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆலிவ் எண்ணெயானது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே இதனை உணவில் சேர்த்தால், எலும்புகளின் ஆரோக்கியமானது மேம்படும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>