புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான,வாய்ப்புகளை குறைப்பதற்கான உணவு முறைகளைப் பற்றி பார்க்கலாம்.புற்றுநோய் வராமல் தடுப்பதில் உணவின் பங்கு மிக முக்கியமானது.காய்கறிகளையும்,பழங்களையும் அதிகளவில் உட்கொண்டால்[more than 400gm/day]நிச்சயமாக புற்றுநோய் ஆபத்து இருபது சதவிகிதம் குறையும்.
பீட்டாகரோட்டீன் மற்றும் விட்டமின்-சி [beta- carotene,vitamin-C & E] நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் சில வகையான புற்றுநோய்களிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம் .
Beta-carotene நிறைந்த உணவுகள் பலவகையான புற்றுநோய்களை தடுக்கவல்லது.குறிப்பாக நுரையீரல்,உணவுக்குழாய்,வயிறு,தொண்டை போன்ற பகுதிகளில் வரும் புற்றுநோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.Beta carotene ,பச்சையிலை காய்கறிகள்,கீரை வகைகள்,நன்குபழுத்தமஞ்சள்,ஆரஞ்சுநிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்,மாம்பழம்,பப்பாளி,காரட்,பரங்கிக்காய்,கிர்னிபழம்,கிவிபழம்,சிகப்பு சர்கரைவள்ளிக்கிழங்கு,பசலிக்கீரைகளில் அதிகளவில் இருக்கிறது.
அடுத்து Vitamin -C நிறைந்த காய்கள் மற்றும் பழங்களைப் பற்றியும் எவ்வகை புற்றுநோயை தடுக்கக் கூடியது என்பதைப் பற்றியும் இப்பொழுதுபார்ப்போம்.ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துக்குடி,கொய்யா,திராட்சை,நெல்லிக்கனி போன்ற பழ வகைகளிலும் மற்றும் தக்காளி,பச்சையிலைக் காய்கறிகள்,முளைக்கட்டிய பயறு வகைகளில் Vitamin-C அதிகளவில் காணப்படுகிறது.
இவ்வகை பழங்களையும்,காய்கறிகளையும் உணவில் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் பலவகையான புற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.குறிப்பாக சீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்,கழுத்தில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இருதய கோளாறுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
அடுத்து வருவது vitamin – E.இது தானியங்கள்,மற்றும் எண்ணெய் வித்துக்களில் அதிகளவில் காணப்படுகிறது.எல்லா விதமான எண்ணெய்[vegetable oils],பருத்தி விதை,சூரியகாந்தி விதை,முட்டை மஞ்சள் கரு,வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களில் அதிகளவில் காணப்படுகிறது.
vitamin -E rich foods significantly reduces the risk of oral & pharyngeal cancer.
அடுத்த பதிவில் புற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்ஸின் பங்கு பற்றி பார்ப்போம்.
தொகுப்பு: diet-b
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




















அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ! நன்றி !
Thank you Dhanabalan.