/* ]]> */
Sep 112013
 
                                              புற்றுநோயும் உணவு முறையும்
                                                                                                               PS.BANUMATHY,B.Sc.,[M.H.Sc.,NUTRITION]
 
நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதின் மூலம் புற்றுநோய்,உடற்பருமன்,சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களை தவிர்க்கலாம்.இதில் உணவுப் பழக்கவழக்கம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.இந்திய சினிமாக்களில் வலம் வந்துக் கொண்டிருந்த புற்றுநோய் ,இன்று பரவலாக உலகம் முழுவதிலும் வயது வித்தியாசமின்றி ,பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் வந்து, மரண பயத்தை ஏற்படுத்துகிறது.
.புற்றுநோய் ஏற்படுத்தும் காரணங்களாக எண்ணிலடங்கா நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் கண்டறியப் பட்டுள்ளன.இவற்றில் பல வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டவை.மக்கள் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்று பார்த்தால் ,நம்முடைய தவறான உணவுப்பழக்கவழக்கம்.
உணவும் புற்றுநோய்க்கு காரணமாகுமா ?
ஆம் என்பதே இந்த கேள்விக்கான பதில்.இப்போதைய நமது வாழ்க்கை முறையும்,உணவு பழக்க வழக்கங்களும்,நிறைய மாறிவிட்டன.நாம் சாப்பிடுவது,அருந்துவது,என்று அனைத்திலும் பலவிதமான ரசாயனங்களும்,பூச்சிக்கொல்லி மருந்துகளும் கலந்திருக்கிறத..நம் பாரம்பரிய உணவு வகைளை சமைப்பதையும் சாப்படுவதையும் குறைத்துவிட்டு துரித உணவகங்களை நோக்கி படையெடுக்க துவங்கி விட்டோம்.குழந்தைகளும் பர்கர்,பிஸ்ஸா.சமோசா.சிப்ஸ்,பிரெஞ்சு பிரைஸ்,பேக்கரி உணவு வகைகளைத் தான் விரும்புகிறர்கள். நகர்ப்புறங்களில் வாழும் 70-80% துரித உணவுக்கு [FAST FOOD] அடிமையாகிவிட்டார்கள்.அதிகப்படியான உப்பு [SALTIER] எண்ணெய்[OILIER] இனிப்பு [SWEETER] நிறைந்த உணவினை தொடர்ந்து உண்ணும் பட்சத்தில் ,புற்றுநோய் வராமல் வேறு என்ன செய்யும். அதனால் நம் வாழ்க்கை.முறையில் சில சில மாற்றங்கள் செய்வதின் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும்.குறிப்பாக நம் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலேயே நாம் புற்றுநோய் ஆபத்திலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.
இறைச்சி:[Meat]
உணவு நேரடியாகவோ மறைமுகமாகவோ புற்றுநோய்க்கு காரணமாகலாம்.மலக்குடல்,சிறுநீர்ப்பை மற்றும் ப்ராஸ்ட்ரேட் புற்று நோய்கள் இறைச்சி [red meat] அதிகம் உண்பவர்களிடையே பரவலாக காணப்படுகிறது.மிகஅதிக வெப்பத்தில் இறைச்சியை சமைப்பதும் தவறு.
அளவுக்கதிகமாக உணவுஉட்கொள்வது [energy balance]:
அதிக உடல் எடை,அளவுக்கதிகமான கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வது,உடல் பருமன் குறியீடு [BMI],இடை அளவு [waist line],மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை மார்பகம்,சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் புற்றுநோய்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
சர்க்கரை:[Sugar]
அதிகளவு மாவுச்சத்து[CHO],மற்றும் சர்க்கரை சத்துக்களை உட்கொள்வதினால் வயிறு மற்றும் மலக்குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
கொழுப்பு:[FAT]
அதிகளவு கொழுப்பு சத்து [Saturated fat] நிறைந்த உணவுகளை உட்கொள்வதுnon-Hodgkins lymphoma-என்ற புற்றுநோயை உண்டாக்கும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
புரதம்: [Protein]
அதிகப்படியான புரதச்சத்து[Animal protein-விலங்குகளிலிருந்து பெறப்படும் புரதம்] நிறைந்த உணவும் பலவிதமான புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.அதிகளவில் அசைவ உணவு உண்பதும் புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி சில உணவுகள் [carcinogenic foods],நேரிடையாக புற்றுநோயை ஏற்படுத்தும்.பல உணவுகளை தவறான சமைக்கும் முறையினால் நாம் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவையாக மாற்றிவிடுகிறோம் [carcinogen may be produced by cooking].சந்தையில் கிடைக்கும் பல உணவுப்பண்டங்கள் தவறான முறையில் பதப்படுத்தப்பட்டு [processed food],சேமித்து [stored foods]வைக்கப்படுவதால் புற்று நோய் ஏற்படுத்தக் கூடியவையாக மாறிவிடுகின்றன.சில நுண்ணுயிர்கள் [micro organisms] சேமித்து வைக்கப்பட்டுள்ள [stored foods]உணவுகளை புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவையாக மாற்றிவிடும்.நம் கவனக்குறைவினால் நாம் நம் உணவை நஞ்சாக்கிவிடுகிறோம்.பெருகிவரும் புற்றுநோயிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் துரித உணவுகளை விடுத்து [fast foods], நாம் நம் பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டும்.உணவில் அதிகளவில் பச்சையிலைக் காய்கறிகளையும்,பழங்களையும் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புற்றுநோய் ஆபத்தை உணவுமுறையால் குறைக்க முடியுமா ?
நிச்சயமாக குறைக்கவும் முடியும் .தவிர்க்கவும் முடியும்.Clinical Nutritionதுறையால் நடத்தப்பட்ட பலவித ஆராய்ச்சிகளின் மூலம் புற்றுநோய் வராமல் தடுப்பதில் உணவின் முக்கிய பங்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான,வாய்ப்புகளை குறைப்பதற்கான உணவு முறைகளைப் பற்றி பார்க்கலாம்..புற்றுநோய் வராமல் தடுப்பதில் உணவின் பங்கு மிக முக்கியமானது.
காய்கறிகளையும்,பழங்களையும் அதிகளவில் உட்கொண்டால்[more than 400gm/day]நிச்சயமாக புற்றுநோய் ஆபத்து இருபது சதவிகிதம்[20 %] குறையும்.
பீட்டாகரோட்டீன் மற்றும் விட்டமின்-சி [beta- carotene,vitamin-C & E] நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் சில வகையான புற்றுநோய்களிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம் .Beta-carotene நிறைந்த உணவுகள் பலவகையான புற்றுநோய்களை தடுக்கவல்லது.குறிப்பாக நுரையீரல்,உணவுக்குழாய்,வயிறு,தொண்டை போன்ற பகுதிகளில் வரும் புற்றுநோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.நுரையீரல் சரிவர இயங்கச் செய்யவும் [improves lung function] இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது[slows the ageing process].Beta carotene ,பச்சையிலை காய்கறிகள்,கீரை வகைகள்,நன்குபழுத்தமஞ்சள்,ஆரஞ்சுநிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்,மாம்பழம்,பப்பாளி,காரட்,பரங்கிக்காய்,கிர்னிபழம்,கிவிபழம்,சிகப்பு சர்கரைவள்ளிக்கிழங்கு,பசலிக்கீரைகளில் அதிகளவில் இருக்கிறது.
 
அடுத்து Vitamin -C  நிறைந்த காய்கள் மற்றும் பழங்களைப் பற்றியும் எவ்வகை புற்றுநோயை தடுக்கக் கூடியது என்பதைப் பற்றியும் இப்பொழுதுபார்ப்போம்.ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துக்குடி,கொய்யா,திராட்சை,நெல்லிக்கனி போன்ற பழ வகைகளிலும் மற்றும் தக்காளி,பச்சையிலைக் காய்கறிகள்,முளைக்கட்டிய பயறு வகைகளில் Vitamin-C அதிகளவில் காணப்படுகிறது.இவ்வகை பழங்களையும்,காய்கறிகளையும் உணவில் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் பலவகையான புற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.குறிப்பாக சீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்,கழுத்தில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இருதய கோளாறுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
அடுத்து வருவது vitamin – E.இது தானியங்கள்,மற்றும் எண்ணெய் வித்துக்களில் அதிகளவில் காணப்படுகிறது.எல்லா விதமான எண்ணெய்[vegetable oils],பருத்தி விதை,சூரியகாந்தி விதை,முட்டை மஞ்சள் கரு,வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களில் அதிகளவில் காணப்படுகிறது.vitamin -E  rich foods significantly reduces the risk of oral & pharyngeal cancer.
 புற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்ஸின் பங்கு பற்றி பார்ப்போம்.
 
PHYTOCHEMICALS என்றால் என்ன ?
இயற்கையாகவே காய்கறிகள்,பழங்களில் இருக்கும் ஒரு bioactive substance.இவை காய்கனிகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து நம் ஆரோக்கியத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.பலவிதமான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. இதய நோய்,உயர்ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்று அனைத்துவிதமான நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.இளமையான தோற்றப் பொலிவுடன் திகழ பைட்டோகெமிக்கல்ஸ் பெரிதும் உதவுகின்றன.குறிப்பாக புற்றுநோயை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
“PHYTOCHEMICALS”- இதனை, “fight-o-chemicals “ என்று உச்சரிக்க வேண்டும்.பெயருக்கேற்றார் போல இவை நம் ஆரோக்கியத்தை காப்பதற்காக பாடுபடுகின்றன.
அழகிய நிறங்களில் கொட்டிக் கிடக்கும் காய்கறிகளிலும்,பழங்களிலும் நூற்றுக்கணக்கான phytochemicals குவிந்துகிடக்கின்றன. இவை காய்கனிகளில் உள்ள பலவிதமான சத்துக்களுடன் சேர்ந்து ,நம்மை பலவிதமான நோய்களில் இருந்து காத்து ,நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.காய்கனிகளை நாம் உண்ணும் பொழுது ,அதில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மிக எளிதாக நம் உடம்பால் உறிஞ்சப் பட்டு ,நம் உடலுக்கு அதிகபட்ச ஆரோக்கியத்தை வழங்குகிறது.
காய்கனிகளில் நிறைந்திருக்கும் பைட்டோகெமிக்கல்ஸ் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்:
 
வெங்காயம்,மற்றும் பூண்டில் அல்லியம் [allium compound]என்ற பைட்டோகெமிக்கல் நிறைந்திருக்கிறது.இது பலவிதமான புற்றுநோய்களை தடுக்கவல்லது.மேலும் பூண்டில் இருக்கும் quercetins என்ற பைட்டோகெமிக்கல் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் ஏற்படும் கட்டிகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது.சிகரெட் புகை,சுற்றுச்சூழலினால் ஏற்படும் மாசு மற்றும் புகைகளிலிருந்து நம் நுரையீரலை [lungs] பாதுகாக்கிறது.
ஆப்பிள் மற்றும் ப்ரூன்ஸில் [prunes-பதப்படுத்தப்பட்ட ப்ளம்ஸ்] இருக்கும் phenolic compound பலவகையான புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து காக்கிறது.
நாவற்பழத்தில் இருக்கும் ஆந்த்தோசையானின் [anthocyanin] கொலஸ்டிராலை குறைத்து,புற்றுநோய் ஆபத்தைக் குறைத்து, இளமையான தோற்றத்தையும் கொடுக்கிறது.
 
சிகப்பு மிளகில்[red pepper] உள்ள lycopene ப்ராஸ்ட்ரேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
எலுமிச்சை,ஆரஞ்சு,திராட்சையில் அதிகளவில் காணப்படும் hesperidin,tangeritin போன்ற பைட்டோகெமிக்கல்ஸ் பல வகையான புற்றுநோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.ஆதலால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப் பழங்களின் சாற்றை அதிகளவில் பருகலாம்.இப்பழகளில் இருக்கும் vit-c cervical cancer,upper gastro intestinal tract cancer -ஐ குறைக்கிறது.
 
காளிப்ளவ்ர்.முட்டைகோஸில் காணப்படும் sulphoraphane என்ற பைட்டோகெமிக்கல் பல வகையான புற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கிறது.
தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் [lycopene] என்ற பைட்டோகெமிக்கல்,ப்ராஸ்ட்றேட் [prostrate cancer]புற்றுநோய்,மற்றும் இதய நோய்களின் ஆபத்துகளிலிருந்து நம்மை காக்க வல்லது.
மிளகாயில் இருக்கும் காப்ஸைசின் [capsaicin ] புற்றுநோயை எதிர்க்கவல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கவும் தவிர்க்கவும் நமது உணவு முறைகளின் பங்கு மிகமுக்கியமானது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் போதும் ,சிகிச்சைக்கு பிறகும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்..அதிகளவில் உணவில் காய்கள்,பழங்கள்,பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அசைவ உணவுகளை அளவுடன் உட்கொள்ளலாம்..துரித உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது..சமைத்த எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடாது.
“மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்” என்கிறது தமிழ் பழமொழி.ஆதலால் முதல் நாள் சமைத்த உணவினை பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.
.புற்றுநோயின் வகைகளைப் பொறுத்தும் மற்ற நோய்களின் தன்மையைப் பொறுத்தும் [சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம்] உணவு வகைகளை,ஊட்டச்சத்து ஆலோசகரின்[Dietician] பரிந்துரைப்படி உட்கொள்வது நல்லது. 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>