புரை ஏறினால் கவனம் தேவை:
நாம் சாபிடும் உணவு உள்ளே இறங்கும்போது தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்கவேண்டிய மூச்சு தடைப்பட்டு திணறல் ஏற்படும். மூச்சுத் திணறல் ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, 4 நிமிடங்களில் மரணமே ஏற்பட்டுவிடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து உயிர் காப்பாற்றப்பட்டாலும் , மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும்.
சாப்பிடும்போது இதுபோன்ற மூச்சுத் திணறலை பெரும்பாலோர் சந்திக்கின்றனர்.கண்கள் சிவப்பாகி காற்றை உள்ளிழுக்கும் வகையில் வேகமாக மூச்சிழுப்பர். தொடர்ந்து பெரிய அளவில் இருமல் ஏற்படும். பேச முடியாமல் தொண்டையைப் பிடித்துக்கொள்வர். உடலில் ஆக்ஸிஜன் குறைந்து முகம் நீல நிறமாகிவிடும். பின் இருமல் மெதுவாகக் குறைந்து, மயக்கம் ஏற்படும். உடனடி மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், உயிரிழக்க நேரிடும். புரை ஏறும்போது அருகில் நிற்பவர்கள் , முதுகில் தட்டி அதை சரி செய்ய முயல்வர். இது பெரும்பாலும் ஆபத்தில் முடியும். முதுகில் வேகமாகத் தட்டும்போது உணவுத் துகள்கள் வெளியேறலாம். அல்லது மூச்சுக் குழலில் மேலும் இறங்கிவிடலாம். இது அரைகுறை அடைப்பை முழுமையாக்கிவிட்ட கதையாகிவிடும். வாழைபழம் சாப்பிடச் சொல்வது அல்லது வேறு திட உணவுகளை சாப்பிடச் சொல்வது , தண்ணீர் குடிக்கச் சொல்வது , பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி ஆளைப் பலி வாங்கிவிடும். சபந்தப்பட்ட நபர், மயக்கமடையாமல், இருந்து, இருமிக் கொண்டு, மூச்சுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தால், அவரைக் கீழே குனிய வைத்து, இன்னும் அதிகமாக இருமச் சொல்லவேண்டும். உள்ளங்கையால் மேல் முதுகைத் தட்ட வேண்டும். 5 தட்டுதல்களுக்குப் பின்னும் நிலைமை சீராகவில்லை என்றால், டாக்டர் ஹீம்லிச் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.
டாக்டர் ஹென்றி ஹிம்லிச் இருதய சிகிச்சை நிபுணர். புரை ஏறினால் என்ன செய்வது என்பது குறித்து 1976ல் ஒரு கோட்பாட்டை வகுத்தார். எனவே அந்தக் கோட்பாடு அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முதலுதவி வகுப்புகளில் இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது.
ஒரு வாலிபர் சாப்பிடும்போது தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டால்,
- அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுபபிச் சுற்றிக் கட்டிக்கொள்ளவேண்டும்.
- அதே நிலையில் நின்று அவருடைய விலா எலும்புகள் நடுவில் முடியும் இடத்தில் கீழே தொப்புளுக்கு மேலே ஒரு குத்து விடுவது போல கையை மடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அப்படியே மேல் நோக்கி வேகமாகக் கையை அழுத்தவும். விலாப் பகுதியைக் இடித்து விடாதீர்கள். கவனமாகச் செய்ய வேண்டும்.
- உணவுப் பொருள் வெளியேறும்வரை இப்படிச் செய்யலாம். இது எளிதாகத் தோன்றினாலும், பயிற்சி செய்தால் மட்டுமே எளிதாகச் செய்ய முடியும்.
- புரை ஏறிய நபர் கர்ப்பிணியாகவோ, அல்லது அதிக எடை கொண்டவராகவோ அவரைப் பின்புறத்திலிருந்து கட்டிப் பிடிக்க மூடியாது.அவருடைய இரு கைகளின் கீழ் வழியாக உங்கள் இரு கைகளையும் நுழைத்து, மார்புப் பகுதிக்குக் கீழே லேசாக மேல் நோக்கி அழுத்தி கீழிறக்க வேண்டும்.
- அவர்களை நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வைக்க வேண்டும்.
- அவருடைய இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் உங்கள் கால்களை முட்டி போட்டு, உங்கள் எடை அவர்மீது விழாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- வலது கை மீது இடது கையை வைத்துக்கொள்ளுங்கள்.விலா எலும்பின் கீழ் , தொப்புளின் மேல்புறத்தில் வலது உள்ளங்கையின் கீழ் பகுதியால், மேல் நோக்கி அழுத்துங்கள்.
- உங்கள் உடல் எடை இதற்கு உதவும்.
- உணவுத் துகள் வெளியே வரும்வரை இதைச் செய்யவும. நீங்கள் தனியாக இருக்கும்போது புரை ஏறி மூச்சுத் திணறல் வந்தால் பயப்படாதீர்கள்.
உணவுத் துகள் வெளியே வரும்வரை இதைச் செய்யலாம்.நீங்கள் தனியாக இருக்கும்போது புரை ஏறி மூச்சுத் திணறல் வந்தால் பயப்படாதீர்கள்.
வேறொருவர் உங்கள் வயிற்றிஉல் மேல் நோக்கி அழுத்தம் கொடுப்பது போலவே நீங்களே உங்க கையால் அழுத்தம் கொடுத்து மேலேற்றலாம்.உணவுத் துகள் வெளியேறும் வரை இதைச் செய்து கொள்ளலாம்.
************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments