/* ]]> */
Mar 092020
 

புயல் நிலத்தில் உருவாகாமல், கடலில் உருவாகக் காரணம் என்ன?

புயல்

புயல் என்பது நீர்ப்பசை நிரம்பிய வெப்ப நிலையில் உள்ள சுழலும் காற்று. கோடைக் காலத்தில் கடலின் மேற்புறம் கூடுதலாக வெப்பமடையும். 2.9 செல்ஷியஸிற்கும் கூடுதலாக கடல் வெப்பம் கூடும்போது புயல் உருவாக வாய்ப்பு ஏற்படும். அப்போது அந்தப் பகுதியில் கடல் நீர் கூடுதலாக ஆவியாகும். சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு என்பதால் நீர்த் திவலைகளை ஏந்தி அது மேலே எழும்பும். கடல் மட்டத்தைவிட மேலே செல்லும்போது  காற்றின் அடர்த்தி குறைவு. எனவே அந்த வெப்பக் காற்றுக் குமிழி விரிவடையும். விரிவடையும்  வாயு சுழலும். எனவே அந்தக் குமிழியும் சுழன்றுகொண்டே மேலே செல்லும்.

கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச்செல்ல,வெப்பநிலை குறையும். எனவேதான் மலைப் பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கின்றன. சூடான காற்று குளிர்கிறது என்றால், அங்கே காற்றழுத்தம் கிஉறையும். எனவே வேறு பகுதியிலிருந்து காற்று வேக வேகாமாகப் பாயும். சுழன்று வீசுவதால், புயல் கடலின் மேலே நகரும்.

கடல் மீது காற்று வீசும்போது ஏற்படும் உராய்வு விசையை விட நிலத்தின் மீது உராய்வு விசை அதிகம். எனவேதான் நிலத்தில் வீரியம் குறைந்து புயல் மறைகிறது. மேலும் நிலத்தின் மீது கடலுக்குச் சமமாக நீர்நிலைகள் இல்லை. எனவே நிலத்தின் மீது புயல் கடந்து சென்றாலும் , கடலில்தான் புயல் உருவாகும்.

*****************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>