/* ]]> */
Mar 182021
 

புத்தாண்டு பலன்2021:-2022 பிலவ வருஷம்

tamil puththantu

சிம்ம  ராசி

 simmam-rasi

இந்த வருடம்   2021 நவம்பர்  மாதம் வரை குரு 6-மிடத்திலும், அதன்பிறகு 7 மிடத்துக்கும் பிரவேசிக்கிறார். சனி 6- மிடத்தி சஞ்சரிக்கிறார். ராகு 10 லும் கேது  4 லும் சநரிக்கிறார்கள்

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

ஏற்கெனவே கூறியுள்ளபடி, குரு ஆண்டின் தொடக்கத்தில் 2021 நவம்பர் மாதம் வரை, உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகள் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள்  மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தூர தேசங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென  கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். .

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த்  சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகல் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.

குருபகவான் 2021  நவம்பர் மாதத்துக்குப்  பின்பு , உங்கள் ராசிக்கு 7-மிடத்துக்குப் போவதால், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள்  திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் தீரும்.  சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.  நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள்  அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது  நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

முயற்சிகள் வெற்றியடையும். மனக் குழப்பங்கள் தீரும். இல்லறம் சிறப்படையும். தொழில் சிறக்கும். கல்வி மேம்படும். .இப்போது வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள்  திருமணம் , படிப்பு, தொழில் என்று து நல்லபடியாக முடிவடையும்.  பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும்.  இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவி செய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும்.  உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை  தடைபட்ட  திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

சனி பகவான் , உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும். இது யோக காலமாகவெ நடக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும். நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம். பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.
அரசியல்வாதிகள், பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.
மாணவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும். பெண்களுக்கு சாதகமாகவே அனைத்தும் நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். மேலும் உங்களின் முயற்சியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அலல்து நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மைகள் நடக்கும்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் இடம் பெயர்கிறார்கள் .

இனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள். தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.
சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும் 12-ம் இடத்தையும் பார்க்கிறார். இதன்பலனாக தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.
கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.

துலாம் :

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மிதுன  ராசிக்கும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான  தனுசு  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.   இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை ர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.

பரிகாரம்:

வினாயகர் கோவிலுக்குச் சென்று, சேவையாற்றவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும்.  குரு பகவான் ஆண்டின்  பிற்பகுதியில், சரியான  சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்

இந்த 2021 2022 -ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக அமைய வாழ்த்துக்கள்!. வாழ்க!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் ஜாதகத்துக்குரிய முழுப் பலனை ரூ. 950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்பினால், moonramkonam.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>