/* ]]> */
Mar 182021
 

புத்தாண்டு பலன்-2021 -2022 பிலவ வருஷம் :

tamil puththantu

கன்னி

 கன்னி ராசி
kanni-rasi

இந்த வருடம் குரு  2021    நவம்பர்   மாதம் வரை குரு 5-மிடத்திலும், அதன்பிறகு 6-மிடத்துக்கும் பிரவேசிக்கிறார். சனி 5-மிடத்தில்  சஞ்சரிக்கிறார்.

இந்த 2021 ஆண்டின்  நவம்பர்  மாதம் வரை உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.    ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள்,  நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.   எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.    உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று சங்கடங்கள்  தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைப்பட்ட திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

ஏற்கெனவே கூறியுள்ளபடி, குரு 2021  நவம்பர்  மாதம் முதல், உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகள் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள்  மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தூர தேசங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென  கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். .

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த்  சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 5-ல் சனி வரும்போது, சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படுகின்றது. புத்தி சரியாகச் செயல்படாமல், தகுந்த முடிவு எதுவும் எடுக்க முடியாமல், சில முக்கிய திட்டங்கள் நிறைவேறாமல் பாழாகும். ஏதாவது விபத்து முதலியவற்றால், அங்கஹீனம் ஏற்படும். பணம் கரையும். வறுமை மேலிடும். ஏதாவது இழிசெயல் செய்தாவது பிழைக்க நேரிடும். மனக் கலக்கமும் ஏற்படும். நடத்தை கெட்ட பெண்களின் உறவால், பொருளும் பணமும் கெடும். பலருடன் பலவகைச் சண்டைகளில் ஈடுபட நேரிடும். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படலாம். எந்த ஸ்திரமான உருப்படியான காரியமும் நிறைவேறாது. குழந்தைகள் யாருக்காவது மாரகம் ஏற்படலாம். பந்து ஜனங்களைப் பகைத்துக்கொள்வர். குழந்தை குட்டிகளை விட்டுப் பிரிவார். சோகம் , புத்திரஹானி போன்றவை ஏற்படலாம். எனவே எல்லா வகையிலும் சனி அசுப பலனையே தருகிறார். அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரையில் இருந்துவந்த அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு உங்களுக்கு அடியோடு விலகுகிறது. இதுவரை உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய அளவில் உங்களால் சாதிக்க முடியவில்லை. மேலும் உங்களின் வெளிவட்டார உறவுகளும், இதுநாள்வரை திருப்திகரமாகவும் மதிப்புடனும் இல்லை. உறவினர்கள் மத்தியில் கூட நீங்கள் பிறருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நல்ல பெயரோ அல்லது பாராட்டோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இதுவரை கஷ்டப்பட்டீர்கள். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறுகிறது. முன்பு உங்களை உதாசீனம் செய்தவர்கள் இப்போது உங்களை சுற்றிச் சுற்றி வந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் திறமையையும் ஆற்றலையும் பலவாறு புகழ்வார்கள். அதன்பிறகு ஓராண்டு காலம் சிற்சில அவலநிலைக்கு நீங்கள் ஆளாக நேரிடும். மேலும் சனியின் 10-மிட பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால், இந்த சனியின் 5-மிட மாற்றம் உங்களின் முன்னேற்றம் அல்லது சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி உங்களின் பொருளாதார மற்றும் தன நிலையில் பெரிய அளவில் மாற்றங்களையோ அல்லது ஏற்றங்களையோ ஏறப்டுத்தாது. இருப்பினும் அடுத்த ஆண்டு  (2015-ம் ஆண்டு பிற்பகுதியில்) உங்களின் தன நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி. மாணவர்களுக்கு இந்த 5-மிட சனியின் பெயர்ச்சியால், உங்களது கல்வி நிலையில் ஓரளவு மாற்றம் அல்லது ஏற்றம் ஏற்படும். இதுவரை அர்த்தாஷ்டம சனியின் சஞ்சாரம் உங்கள் கல்வியின் அதிர்ஷ்ட வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தி வந்தது. பெற்றோர்கள்  ஆசிரியர்கள் , மற்றும் உறவினர்களின் அவச் சொல்லுக்கும் அறிவுரைக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆனால் அந்நிலை தற்போது அடியோடு மாறுகிறது. கல்வியில் ஓரளவு ஆர்வமும் செயல்திறனும் உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிக்குமேல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும்.  நீங்கள் தவறாமல் தொடர்ந்து பாடுபட்டால், உங்களின் இலக்கில் வெற்றி பெறுவது உறுதி. பெண்களின் நியாயமான ஆசைகளும் கோரிக்கைகளும் இந்த 5-மிட சனியின் தடைகளை சந்தித்தபிறகே ஓரளவுக்கு வெற்றி பெறும். உங்களின் பேச்சுக்கும் சொல்லுக்கும் நாள்பட்டே மதிப்பு மரியாதை கிடைக்கும். வீடு நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கையும் மிகவும் தாமதமாக அடுத்த ஆண்டு பாதிக்கு மேல் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு வேண்டிய இடமாற்றம் மற்றும் சம்பள் உயர்வு போன்றவை சற்று தாமதப்பட்டு கிடைக்கப்பெறும். லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு சனியின் 7ம் பார்வை ஏற்படுவதும் களத்திர ஸ்தானத்துக்கு சனியின் மூன்றாம் பார்வை ஏற்படுவதும் நல்லதல்ல. உங்களது கணவருக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியோந்நியம் குறைந்து குடும்பத்தில் அமைதியைப் பறிக்கும். புகுந்த வீட்டினரின் பாராட்டைப் பெறுவது சற்று கடினம். அதேபோல அவர்கள் மூலமாக உங்களுக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் தாமதப்பட அலல்து மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை, பண வரவு போன்றவை நிகழ இந்த 5-மிட சனி தடையை ஏறப்டுத்தும். மேலும் 5-மிடமான புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருப்பது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வக் குறைவு அல்லது அவர்களின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு விலகும். மேலும் சனிபகவானின் 10-ம் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ம் இடத்தில் விழுவதால், உங்களுக்கும் கணவருக்குமிடையே சன்டை சச்சரவு ஏற்படும். மொத்தத்தில் இந்த 5-மிட சனி பாதிப்புகளையே அதிகம் கொடுக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.   இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். இதன்பலனாக, தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மையடைவர். மூத்த சகோதரர்களால், தக்க உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபமும் காரிய சித்தியும் உண்டாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் பெறுவார். உடல்நோய் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்.சிலருக்கு நல்ல நணப்ர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நல்ல காரியங்கள் நடைபெறும். சிலருக்குப் புதிய கூட்டுத் தொழில் உருவாகும். கூட்டுத் தொழில் செய்யும் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் ஏர்படும். தொழில் அபிவிருத்தியும் கூடும். உடன் பழகும் நணப்ர்களுக்கு தக்க சமயத்தில் பல உதவிகள் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் கூடும். அதன் காரணமாக வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.
கேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.:

பரிகாரம்:
குருவின் சஞ்சாரம்    பிற்பாதியில் நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி  கோவிலுக்குச்  சென்று கொண்டக்கடலை மாலையும் ,மஞ்சள் நிற மாலையும் சாத்தி வழிபடவும். கேது சஞ்சாரமும் சரியில்லாததால்,  வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து ,வினாயகரை வழிபடவும். கொள்ளுதானம் செய்யவும். வெள்ளிக் கிழமைகளில், மகாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*********************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>