/* ]]> */
Apr 122018
 

புத்தாண்டு பலன் விளம்பி   வருஷம்-  2018-2019 :

tamil puththantu

துலாம் ராசி :

துலாம் ராசி

துலாம் ராசி

இந்த  வருஷம் செப்டம்பர்   மாதம்  வரை , குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.  ஆகஸ்டு மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும், ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வது போலத்தான் இருக்கும். இனி  மற்ற கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தோமானால்,  சனி உங்கள் ராசிக்கு 3-மிடத்தில்  சஞ்சரிப்பது நல்லது.  .    ராகு உங்கள் ராசிக்கு 10-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

தற்போது  நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரம்  சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.சஞ்சாரமும் சரியில்லாமல் இருப்பதால், சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.    தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்ம் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.ருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ் தற்போது உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில்  சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நறப்லன்களை அள்ளித் தருகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள்  ராசிக்கு 6-ம் இடத்தையும்,   7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 8-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய   ராசிக்கு 10-மிடத்தையும்   பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

இந்த வருஷம், சனி ப்கவானின் 3-மிட சஞ்சரம், மிகவும் நல்ல பலன்களை நல்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். இந்த 2 1/2 வருஷமும் பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர்.
பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண் சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது.
பெண்களுக்கு  இதுநாள்வரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில் இந்த சனியின் சஞ்சரம் உங்களுக்கு சாதகமான முறையில் செயல்படும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகி உங்களுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமும் நல்லிணக்கமும் ஏறப்டும். பிள்ளைகளும் தங்களின் சொற்படி நடந்து உங்களுக்கு நற்பெயரையும் பாராட்டையும் வாங்கித் தருவார்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கும். மொத்தத்தில் உங்கள் வீடு ஒரு அமைதிப் பூங்காவாகக் காட்சியளிக்கும். சிலருக்கு அலுவலகத்தில் நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். அதேபோல் ஊதிய உயர்வும் பணிமாற்றமும் கிடைக்கும். சிலர் புது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரியும் யோகமும் கிட்டும். நெடுநாளாக குழந்தைப்பேறு இன்றித் தவித்த உங்களில் சிலருக்கு அந்த பாக்கியம் எளிதில் கிடைக்கப் பெறும். ஏனெனில் சனிபகவான் உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதியாவதால், இந்த நல்ல விஷயத்திற்கு பெரிதும் உதவுவார்

மாணவர்களுக்கு சோதனைகளைக் கடந்து பல சாதனைகளைப் படைக்கும் விதமாக இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு துணை புரியும். தேர்வில் அமோக வெற்றி மற்றும் நீங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து படிக்க இந்த சனியின் சாதகமான நிலை உங்களுக்கு பெரிதும் துணை நிற்கும். உங்களின் ஆர்வம் மற்றும் செயல்திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் வியந்து பாராட்டுவார்கள். இந்த திருப்திகரமான நிலை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதால், கல்வித் துறையில் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும். மேலும் உங்களுக்கென்று ஒரு தனியிடத்தை மாணவர்களாகிய நீங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். உங்கள் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும். இந்த சனிப் பெயர்ச்சி சாதனைகளை நிகழ்த்த வல்லதாக நிகழும் என்பதில் சந்தேகமேயில்லை.
அரசியல்வாதிகளுக்கு சனி பகவானின் மூன்றாமிட மாற்றம் உங்களின் அரசியல் துறையில் உங்களால் முடியாத அதாவது சாத்தியமற்ற பல செயற்கரிய சாதனைகளைச் செய்ய உங்களைத் தயார்படுத்துவார். இதுநாள்வரையில் உங்களுக்கு உங்கள் துறையில் இருந்துவந்த குறுக்கீடுகள் மெல்ல மெல்ல மறையும். உங்களை எதிர்த்தவர்களும், உங்களை ஏளனப்படுத்தியவர்களும் உங்களிடம் மண்டியிடுவார்கள். அல்லது தங்களின் வேற்றுமையுணர்வுகளைக் களைந்துவிட்டு அவர்களும் உங்களுடன் சேர்ந்து, உங்களின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பாடுபடுவார்கள். அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கென்று தனிப் பெயரோ அல்லது அந்தஸ்தோ கிடைக்க இந்த சனிபகவான் பெரிதும் துணை புரிவார். புகழோடு, பணமும் அந்தஸ்தும் கௌரவமும் உங்களை வந்தடையும். உங்கள் துறையில் நீங்கள் நினைத்த எல்லாவற்றையும் நடத்திக்காட்ட உங்களால் கண்டிப்பாக முடியும்.

இந்த வருடம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான சிம்ம  ராசியிலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான கும்ப ராசியிலும் இடம் பெயர்கிறார்கள் . இனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள். தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.
சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும் 12-ம் இடத்தையும் பார்க்கிறார். இதன்பலனாக தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.
கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏறப்டும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.

பரிகாரம்:

உங்களுடைய ராசிக்கு  ராகுவின் சஞ்சாரம் சரியில்லை என்ப்தால், மகாலக்ஷ்மிக்கு சிவப்பு மலர்களை வெள்ளிக் கிழமைகளில் சாத்தி வழிபடவும். கேதுவின்    சஞ்சாரம் சரியில்லை என்பதால்,  வினாயகரை வழிபட்டு   கோவிலை சுத்தம் செய்யவும்.  குருவின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் வஸ்திரம் அணிவித்து கொண்டக் கடலை- மாலை போட்டு வணங்கவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டுக்குத் தொடர்புகொள்ளவும்]
*******************************************

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>