/* ]]> */
Apr 122018
 

புத்தாண்டு பலன் : விளம்பி வருஷம் 2018-19 :

புத்தாண்டு பலன்கள்

தனுசு  ராசி:

தனுசு ராசி

தனுசு ராசி

தற்போது குருபகவான்  செப்டம்பர்   மாதம் வரை, லாப ஸ்தானமான 11-ம் இடத்த்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும்.  செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு குரு உங்கள் ராசியில் ஜென்ம குருவாக சஞ்சரித்து அசுப பலன்களைத் தருகிறார்.  ராகு 8-ம் இடத்துக்கும், கேது 2- ம் இடத்துக்கும் மாறுகிறார்கள். சனிபகவான்    இந்த ஆண்டு ராசியில் ஜென்ம சனியாக  சஞ்சரிக்கிறார். இனி பலன்கலைப் பார்க்கலாம்.

செப்டம்பர்  மாதம் வரை , குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
. எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும்.

செப்டம்பர் மாதத்துக்குப் பின்  நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரம்  சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்., சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும்.

வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.    தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்ம் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.

இந்த வருடம், சனி உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக  பிரவேசிக்கிறார்.  சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான்.தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும். இவரே  தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும்.

தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும். இது 7 1/2 ச் சனியில் மிகவும் கொடுமை செய்யும் ஜென்ம சனிக்காலமாகும். நடு 21/2 வருஷமாகும். ஆயுர்த்தாயம் நிறைவும், சமீபத்து 7 1/2ச் சனியும் ஜென்ம சனியாய் அமைந்துவிட்டால், மரணமும் சம்பவிக்கலாம்.
பெண்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் விழுவதால், கணவர் உங்கள் பேச்சை மீறியோ அல்லது உங்கள் கருத்துக்கு மாறாகவோ செயல்படுவார். இருவரிடமும் நெருக்கம் குறைவதோடு தேவையற்ற சணடை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு புகுந்த வீட்டாரிடமிருந்து தொல்லைகள் உண்டாகும். அவர்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் கணவர் செயல்படுவார். உங்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். உங்களின் உழைப்பு மற்றும் குடும்பப் பற்றை உங்கள் கணவரும் உங்கள் புகுந்த வீட்டாரும் அலட்சியம் செய்வதோடு, வீண் பழிக்கும் நீங்கள் ஆளாக நேரும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற நற்பெயரோ அல்லது பாராட்டோ கிடைக்காது. உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கூட கிடைக்காது. உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் கௌரவ பாதிப்போ அல்லது ஆண் ஊழியர்களால், சில வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளும் தொந்தரவுகளும்கூட ஏற்படும். எனவே அவர்களுடன் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது

மாணவர்களுக்கு, உடன் படிக்கும் சக மாணவர்கள் உங்களின் முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கோடு உங்களின் கவனத்தைப் பல வழிகளிலும் திசை திருப்புவார்கள். அதைப்போல ஜென்ம  ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு உடல் அசதியையும் மன அழுத்தத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளைச் சேர்க்காது. சிற்சில பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ராகு பகவான் கடக ராசியிலும் கேதுபகவான்  மகர ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இதன்மூலம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இவற்றை  நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இனி இவற்றால் உண்டாகப்போகும் பலன்களைக் காணலாம்.

8-ம் இடத்தில் உள்ள ராகுவின் சஞ்சாரம் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று குறிப்பிட்டதன்மூலம் தீய பலன்கள் மட்டுமின்றி சில நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம். ராகு தனது 3-ம் பார்வையால், 10-ம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் உத்தியோகம், வியாபாரம், தொழில் சம்பந்தமாக திடீரென்று வேறு ஊர்களில் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் தங்கள் வசிப்பிடங்களையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். வீடு குடி மாறுவார்கள். சியல்ருக்கு எதிர்பாராத சொத்து சுகங்கள் கியடிக்கும். சிலருக்கு ஷேர்மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இருப்பினும் அதையே நம்பி வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது. பயணங்களின்போது 8-ம் வீட்டில் உள்ள ராகு சில எதிர்பாராத நிகழ்ச்சிகளை நடத்திவிட வாய்ப்புண்டு. அதனால் பயணங்களின்போது கவனம் தேவை. பயணங்களின்போது எடுத்துச் செல்லும் பொருள்கள் திருட்டுப்போகும் நிலையும் ஏறப்டலாம். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸ். கோர்ட், தண்டனை என்று அல்லல்படுவார்கள். வியாபாரிகள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தால் தொல்லை ஏறப்டும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் கையூட்டுப் பெறுவதை தவிர்ர்க்கவில்லையென்றால், காவல்துறையிடம் சிக்கி சிறை செல்வார்கள். அவமானப்பட நேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புண்டாகும் யோகம் வரும். அதுபோல சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் காலத்தில் யாருக்காகவும் ஜாமீனுக்குப் போகவேண்டாம். அதில் நீங்கள் சிக்கிக்கொண்டு துன்பப்படநேரும். வரவு செலவுகளும் உங்களைக் கவிழ்த்துவிட்டுவிடும் நாணயம் தவறிப்போவீர்கள். பணத்தைப் பிறரிடம் கொடுத்துவைத்தால் ஏமாற்றப்படுவீர்கள். தானாகக் கிடைக்காத விஷயத்தை பணம் கொடுத்து சாதித்துக்கொள்ளவேண்டாம். சிக்கல் ஏற்படும். காரியமும் நிறைவேறாமல், செலவழித்த பணமும் கைவிட்டுப் போய், லஞ்சம் கொடுத்ததற்கான தணடனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். எடுத்த காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும்.. ஆரோக்கியம் பாதிப்படையும். மறைந்திருக்கும் எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும். ஆனால், அவர்களால் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. பொதுவாக இந்த ராகு பெயர்ச்சி பண விரயம், எதிகளால் தொல்லை,அலைச்சலகள் தீய நட்பு, பெண்களால் அவமானங்கள் என்று ஏற்படும்.
இனி கேதுபகவானின் 2-ம் இட சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். தொழில் மந்த கதியை அடையும். வருமானம் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.
கேது பகவான் தன்னுடைய 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தையும், தன்னுடைய 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிகக்ப்படும். சிலருக்கு வீடு, மனை நிலம் சம்பந்தமான விரயச் செலவுகளும் , தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படக்கூடும். வண்டிவாகனங்களில் விரயச் செலவுகள், வணடி வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவுகள் ஏற்படுதல் போன்ற நிலைகளை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் உங்களது கவனம் செல்லாது. மனநிம்மதி இருக்காது. பொருள் வீணாக செலவழியுமே தவிர உருப்படியாக எதையும் செய்ய முடியாது. வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடையும் தாமதங்களும் ஏற்படும். சுப காரியங்களை கடன்பட்டுச் செய்யவேண்டியிருக்கும். அந்தக் கடன் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்தவரைஎல்லோரையும் அனுசரித்துக்கொள்ளமாட்டீர்கள். அதனால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பீர்கள். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்கள்.சிலர் சொந்தபந்தங்களைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள். சிலருக்கு உறவும் பகையாகும். நண்பர்களும் பிரிந்து விடுவார்கள். அயலாரிடம் இருந்துகூட உதவிகள் கிடைக்கலாம்;ஆனால், சொந்த பந்தங்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது.

பரிகாரம் :

பிரதோஷ காலங்களில் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவது துன்பங்களை விரட்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள்.வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் , வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும்.சனிக் கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*****************************************************

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>