/* ]]> */
Mar 292013
 

புத்தாண்டு பலன்  விஜய வருஷம் மேஷ ராசி பலன்

 

புத்தாண்டு பலன்  விஜய வருஷம்

மேஷம்:

அசுவினி;பரணி;கார்த்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

                                                     இந்தப் புத்தாண்டில், உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்கள் கலந்திருக்கும். நற்பலன்களைவிட தீய பலன்களே மிகுந்து காணப்படுவதால்,  எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.  ஏற்கெனவே கெண்ட சனியின் பிடியில் இருக்கிறீகள். ராகு கேதுவின் கோச்சாரங்கள் யோகம் தருவதாக இல்லை. அத்துடன், வருகிற மே மாதம் 27-ம் தேதியன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அதாவது மிதுன  ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த சஞ்சாரம் கோச்சாரப்படி சரியில்லை யென்றாலும்கூட  குரு பகவான் தனது புனிதமான பார்வைகளால் உங்களுக்கு சில நன்மைகளைச் செய்யத் தவற மாட்டார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தை தனது 5-ம் பார்வையாலும், 9-ம் இடத்தை 7-ம் பார்வையாலும், 11-ம் இடத்தை தனது 9-ம் பார்வையாலும் பார்த்து அந்த இடங்களை மேன்மையடையச் செய்கிறார்.

                   குருபகவானின் 5-ம் பார்வை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையை   இதுவரை பாதித்து வந்த பிணி நீங்கும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறக்கும். தொழிலுக்கு நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலருக்குப் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் உங்களுக்கு சில உதவிகள்  கிடைக்கும். சிலருக்கு மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிலர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாலும்கூட சிலருக்கு திடீர் என்று பண வரவுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். தந்தை பற்றிய கவலையும் நீங்கும்.   உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் விழும் குரு பார்வையால், உங்கள் தந்தை மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.

                               பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ,கையில்  சிறு செலவுகளுக்குத் தேவையான பணம் இருக்கும்.  புதிய ஆடைகள் வாங்குவீர்கள். வெளியிடங்களில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். ஆனால் வீட்டில் அது கிடைக்காமல் போகும்.  குரு பகவானின் பார்வையால் நல்ல வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால் அவை அனைத்தும் அவசிய காரியங்களுக்கு பயன்படாமல், விரயமாகும். சிலருக்கு மனைவிவழிப் பூர்வீகச் சொத்தின்மூலம்  பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.உங்கள் தந்தையும் தந்தை வழி உறவினர்களும் கை கொடுக்க தயங்க மாட்டார்கள்.  இனி குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களையுப் பார்க்கலாம்.

                  இந்த சமயத்தில் சில சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக  அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு  பாதிப்படையும். அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.

                 மேற்கல்விக்குப் போதிய பணம் இல்லாமையால், கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு பேசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.

                மற்றவர்கள் உங்களிடம் விரோதம்  காட்டுவார்கள்.  எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

             சனிபகவானின் 7-மிட வாசம் மனநிம்மதியைக் கெடுக்கும். உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களிடமிருந்து விலகிப் போவார்கள். ராகு கேது சஞ்சாரம் குடும்ப அமைதியை குலைக்கும்.

                      இதுவரை இருந்துவந்த சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்தும். நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். மகிழ்ச்சி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை  தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள்.

                            திட்டமிட்டபடி எதுவும் நடக்காது.   குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது.

                        சில்ருக்கு பிள்ளைகள் நல்ல நிலையில் இருந்தாலும் அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது.  சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான சுபகாரியங்களும் தடைப்படும்.

          இப்படி அசுப பலன்களாக சொல்லப்பட்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்த குருப் பெயர்ச்சிக்குண்டான பலன்கள் அனைவருக்கும் பொதுவாக தரப்பட்டுள்ளது. இது ஒருவருக்கொருவர், அவரவர் ஜாதக அமைப்புகளின்படி மாறுபடும். ஜாதகப்படி உங்கள் திசா புத்தி யோகமாக இருந்தாலும், கிரகங்களின் அமைப்பு அதிர்ஷ்டமானதாக இருந்தாலும் ,இந்த அசுப பலன்கள் மிகக் குறைந்த அளவிலேதான் செயல்படும்.  எனவெ நீங்கள் ஒருமுறை உங்கள் ஜாதகத்தைப் பரிசீலித்துக்கொள்வது மிகவும் நல்லது.

               பரிகாரம்:

       வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பொன்னரளிப்பூவால் மாலைகட்டிப்போட்டால், துன்பங்களும் தொல்லைகளும் பறந்தோடும். சனிக்கிழமையில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும். வினாயகரைத் துதி செய்து வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்யவும். துன்பங்கள் விலகும்.

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.