புத்தாண்டு பலன் தமிழ்ப் புத்தாண்டு 2013
விஜய வருஷம் மிதுன ராசி
புத்தாண்டு பலன் தமிழ்ப் புத்தாண்டு 2013 விஜய வருஷம்:
மிதுன ராசி:
மிருகசிரீஷம் (3&4); திருவாதிரை; புனர்பூசம்(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
இந்த ‘விஜய வருஷ’ தொடக்கத்தில், ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். வருகிற மே மாதம் 27-ம் தேதியன்று வரப்போகும் குருப்பெயர்ச்சியின்போது குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள். மே மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதுபோலத்தான் இருக்கும். இனி மற்ற கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தோமானால், சனியும் ராகுவும் உங்கள் 5-மிடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமல்ல. கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு நற்பலன்களை வழங்கக்கூடிய சஞ்சாரமாகும். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
குருவின் சஞ்சாரம் உங்களிடமுள்ள ஊக்கத்தைக் குறைப்பார். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிட்டுவிடும். கொலாஸ்ட்ரால் சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .
உங்கள் நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கலள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.
ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.
கேதுவின் சஞ்சாரத்தின் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவும் அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும். சிலர் அவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடஙகுவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தையும் நட்பையும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல், இரணடையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இரண்டையுமே கெடுத்துக்கொள்வார்கள்.
சனி மற்றும் ராகுவின் சஞ்சாரங்களும் சரியில்லாமல் இருப்பதால், சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.
மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.
அசுப பலன்களாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம். பலன்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாதக அமைப்புகல் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஜாதகத்தில் உங்கள் திசா புத்தி மிக நன்றாக இருந்து, கிரகங்களும் பலம் வாய்ந்து அமைந்திருந்தால், இந்த அசுப பலன்கள் பெருமளவு குறைந்து, நீங்கள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். எனவே உங்கள் பிறந்த ஜாதகத்தை ஒருமுறை பரிசீலித்துக்கொள்ளவும்.
பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் வஸ்திரம் அணிவித்து கொண்டக் கடலை- மாலை போட்டு வணங்கவும். சனியின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்றுஎள்தீபம் ஏற்றவும்.துயரங்கள் விலகும்.
இந்தப் புத்தான்டு இனிய ஆண்டாக மலரட்டும்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
Sorry, the comment form is closed at this time.