/* ]]> */
Mar 182021
 

புத்தாண்டு பலன்கள்2021-2022 பிலவ வருஷம்

tamil puththantu

மேஷ  ராசி :

 மேஷம் ராசி
மேஷம் ராசி

                           இந்த வருடம் குருபகவான்  2021 நவம்பர்  மாதம் வரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  அக்டோபர்  மாதத்துக்குப் பின்   11- இடத்துக்குப் போகிறார்.  சனி  ராசிக்கு 10 ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.ராகு ராசிக்கு 2 லும் கேது 8 லும் சஞ்சரிக்கிறார்கள்.

இனி குருவின் சஞ்சார பலன்களைப் பாக்கும்பொழுது, குரு இந்த வருடம்  2021 நவம்பர் மாதம் வரை உங்கள் ராசிக்கு   10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு  கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை  கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக,  வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும.

குரு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம். தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த வேண்டும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில் இடமாற்றங்கள் வரும்.

2021  நவம்பர்  மாதத்துக்குப் பிறகு, குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
. எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்  சிறப்பாக இருக்கும்.

இந்தஆண்டு  , உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த சமயத்தில், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.

உங்கள் பதவி, உத்தியோகத்திற்கு பங்கம் வரும். வேண்டாத இட மாற்றம் ஏற்படும். செய்வினை, பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளின் அச்சம் ஏற்படும். மனப் பயம் கூடும். கவலை மிகும். கருமித்தனம் மேலிடும். காசி, ராமேஸ்வரம் என்று தல யாத்திரை செல்வீர்கள். அதாவது அதிக காலம் வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வர். அதிக உழைப்பும் ,குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில் ஈடுபட்டு கஷ்ட ஜீவனம் பண்ணுவர். பலனற்ற வேலைகளில் ஈடுபடுவர். வீண் அலைச்சல் மிகும். தன நஷ்டமும் கலவிக்குப் பங்கமும் ஏற்படும். தோல்வி பயம் ஏற்படும். பலவித நோய்கள் பற்றிக் கொள்ளும். அவச்சொல், பெரும் பழி, எல்லாம் அடிக்கடி வரும்.
இவருக்கு இதய ரோகம் ஏற்படும். மான பங்கம், கௌரவ பங்கம் ஏற்படும். ஓயாத உழைப்பும், அதைச் செய்ய முடியாத களைப்பும் ஏற்படும். வேலைக்குக் குறைந்த பலன்தான் ஏற்படும். புத்தித் தெளிவு சிறிதும் இராது. நிர்ணயத் திறன் குறையும். லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளைச் செய்வர். இபப்டி பல வகையிலும் கஷ்டமே ஏற்படும். சனி, எல்லா விதத்திலும், 10-ம் இடத்தில் அசுப பலனையே தருகிறார்.
பெண்களுக்கு:
மேற்கூறிய பாதிப்புகளுக்கு நீங்கள் தாராளமாக ஆட்பட ஏதுவான காலம் இது என்பதால், திருமணமான பெண்கள் மிகவும் சிரத்தையோடு செயல்படுவது நல்லது. கணவரிடமோ அல்லது அவரது உறவினரிடமோ அதிக வாக்குவாதத்தை அல்லது பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் வசிக்கும்போது உங்கள் மாமியார், மாமனார் அல்லது நாத்தனார் போன்றோருடன் காரசாரமான சண்டைக்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது காட்டாமல் விட்டுக்கொடுத்துப்போகும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அதனால் பின்னால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலம். கெட்ட பெயரும் தலைகாட்டாது. இருப்பினும் ஆறாமிடத்தில் வீற்றிருக்கும் குருவின் 9-ம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு அப்படியே ஏற்பட்டாலும். வந்த சுவடு தெரியாமல் தானாகவே அடங்கிவிடும்.

மேலும் தொழில் ஸ்தானமான 10-ல் வீற்றிருக்கும் சனி பகவனை இந்த ஏழாமிட குருவானவர் தனது 5-ம் பார்வையால் பார்ப்பதால், இந்த சனி பகவானின் வீர்யம் குறைந்து அவரால் ஏற்படவிருக்கும் சில மன சஞ்சலங்கள் மற்றும் உடல் மற்றும் மன சஞ்சலங்கள் ஓரளவு கட்டுக்குள் வரும். அதேபோல் குருவானவர் உங்கள் ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலத்தில் ( குருவின் கன்னி ராசி சஞ்சாரத்தில்) இந்த இந்த 10-மிட சனியின் பாதிப்புகள் ஓரளவு குறையும். அதாவது இந்த ஆண்டு செப்டமர்  மாதம் மவரை  சுமார் ஓராண்டு காலம் குருவின் சஞ்சாரமானது உங்களுக்கு சனியின் பாதிப்பை தகர்க்கும். உங்களில் சிலருக்கு திடீர் கல்யாணம் அல்லது கலாட்டா கல்யாணம் என்ற அமைப்பில் அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்து திருமணம் இனிதே நடந்தேறும். இத்தகைய திருமணத்திற்கு, உங்களின் மூத்த சகோதரர அல்லது சகோதரிகளின் பொருளாதார உதவிகளும் சரீர உதவிகளும் கிடைக்க ஏழில் வரும் குருவின் 9-ம் பார்வை மூன்றாமிடமன சகோதர ஸ்தானத்திற்க்கு ஏற்படுவதேயாகும். இருப்பினும் ராகு கேதுவின் சஞ்சாரங்கள் தங்கள் ராசிக்கு சாதகமாக இல்லாத காரணத்தால், சனி பகவானின் கடைசி நேர பயணத்தில் சில சங்கடங்களும் அல்லது பிரச்சினைகள் சற்று கடினமாக உங்களைத் தாக்கலாம். தெய்வ நம்பிக்கையே காப்பாற்ற முடியும்.
மாணவர்கள் வீட்டு சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு, கல்வியில் போதிய ஆர்வத்தை குறைத்துக்கொள்ள இந்த நேரமானது அமைகிறது. சனியின் தாக்குதலில் ஆரம்ப காலம் உங்களைப் பெரிய அளவில் பாதிக்காது. பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் ஆசிரியர்களும், உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளும் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் உங்கள் மன பாதிப்பால் எடுப்பார் கைப்பிள்ளையாக யார் என்னசொன்னாலும் அதை நம்பும் விதமாக அப்படியே செயல்படுவீர்கள். உங்கள் சொந்த புத்தியைக்கூட சில சமயம் அடகு வத்துவிடுவீர்கள். எனவே யோசித்து சற்று நிதானித்து செயல்பட்டு, படிப்பில் கருத்தூன்றி படித்தால் படிப்பில் பாதிக்குமேல் வெற்றி கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு பத்தாமிட சனியின் ஆரம்ப காலம்  பெரிய அளவில் பாதிக்காதவண்ணம் வரும் ஆண்டு நவம்பர் மாதம் வரை  குருவின் சஞ்சாரம் உங்களுக்கு துணை நிற்கிறது. இதன் காரணமாக உங்களின் சொல்வாக்கு மற்றும் செல்வாக்கு போன்றவை ஓராண்டு காலத்துக்கு ந்ல்லவிதமாக செயல்படும். அதன்பிறகு சுமார் ஓராண்டு காலம் இரண்டு மாதம் சனியின் 10-மிட சஞ்சாரம் முடியும்வரை உங்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உங்களின் கீழ் உள்ளவர்களின் செயல்கள் தலை விரித்தாடும். மேலும் உங்களிடம் நெருங்கிப் பழகும் உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தாங்கியே தீர வேண்டும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை இழக்க நேரலாம். இதற்கு உங்கள் ராசிக்கு ராகு கேது தீய சஞ்சாரமும் ஒருவகையில் காரணமாய் அமையும். வீட்டு விஷயங்களில்கூட சிலருக்கு சில துரோகச் செயல்கள் தலை விரித்தாடும். அதை சரிக்கட்ட முயற்சிகள் மேற்கொள்வதைக் காட்டிலும் அவற்றைக் கண்டும் காணாமல் விடுவதே உங்களுக்கு நல்லது. மேலும் சனியின் பத்தாமிட சஞ்சாரம் முடியும்வரை நீங்கள் அடிக்கடி பணப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரும். எந்த பரிகாரமும் கை கொடுக்காது. சக்கரத்தாழ்வாருக்கு பரிகாரம் மேற்கொண்டால், நன்மையைப் பெறலாம்.

ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். ஜோதிட விதிப்படி, 2,8-ம் இடத்து சஞ்சாரம் உகந்ததல்ல. எனவே இங்கு கூறப்போகும் ராகு கேதுவின் சஞ்சார பலன்களைப் படித்து நீங்கள் பீதியுறவேண்டாம். அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்கள்தான் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் ராசிக்குரிய ராகு-கேதுக்களின் கடுமையான பலன்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். நன்மையைத் தரும் விதமாகவே குரு  அமைந்துள்ளதால், கெடுபலன்கள் மாறி நன்மைகள் நிகழ வாய்ப்புள்ளது. இனி பலன்களைப் பார்க்கலாம்.
தற்போது கடக ராசியான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானின் சஞ்சாரம் உங்களை குடும்பத்துக்காக அதிகம் உழைக்கச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் ஒரு சுமையாகத் தெரியும். குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அனைத்தும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். வருமானக் குறைவு ஏற்படும். வருமானம் வரப்போகிறதே என்றெண்ணி எந்த செலவையும் திட்டமிட முடியாது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேராது. எந்த வழியிலாவது உங்களுக்குப் பணம் வருமா என்றும் தெரியாது. பணப்பற்றாக்குறை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாக நேரும். திடீர் வருமானங்கள் வரும் என்றாலும், அந்த வருமானத்திற்கு தயாராக செலவுகள் காத்திருக்கும். எனவே உங்களுக்கு சேமிப்பு என்பதே இருக்காது.இந்தக் காலத்தில் சிலர் நேர்மையான வழியில் நடக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பொய் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் சிலருக்கு தவிர்க்க முடியாததாகிவிடும். பணத்தேவை தவிர்க்க முடியாததாகிவிடுவதால், , பணம் கிடைக்காத சூழ்நிலையில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். யாரிடமும் நாணயத்துடன் நடந்துகொள்ள முடியாது. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.
ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முக்கியமாக கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. புதல்வர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கஷ்டங்கள் பல வந்தபோது, அவர்கள் கடுமையாகப் போராடி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். அந்தப் பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் மிகுந்த மனவேறுபாடு தோன்றும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவேண்டியதும் விட்டுக்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையென்றால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து , சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிய வேண்டி வரும்.
அரசுத் துறையிலோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்படுவதற்கோ அல்லது தண்டனை அனுபவிப்பதற்கோ வாய்ப்புண்டு. திருமண ஏற்பாடுகள் தடைப்பட நேரலாம். ஆனால் குருவின் சஞ்சாரம் குருபலம் கொடுத்து, நிலைமையை மாற்றக்கூடும்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைப்படநேரும்போது, டென்ஷன் ஏற்படுவதால்,யாரிடமும் சுமுக சூழ்நிலை இருக்காது. யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் மற்றவர் பிரச்சினைகளில் குளறுபடிகளும் குதர்க்க வாதங்களும் அதிகமாகும். இத்தனை பிரச்சினைகள் மலிந்திருந்தாலும் மற்றவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். எதிர்பாராதவிதமாக ,சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கடும் முயற்சியினால், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியை செய்து முடிப்பீர்கள்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும். வீடு கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த கட்டடப் பணிகள் தடைப்படும்.வண்டி வாகனங்கள் ரிப்பேர் செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவை ஏற்படுத்தும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பாப்பதால், விரயச் செலவும் அலைச்சல்களும் ஏற்படும். அதன்காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வருமானம் வரும் வழி தெரியாவிட்டாலும், செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தான தருமங்களில் நாட்டம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைத்தாலும் அது கையில் தங்காது. மனதை ஆன்மீக வழியில் செலுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை அடைய முடியும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பல தொல்லைகள் உருவாகிவிடும். சிலர் அடுத்தவ்ர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினை இவர்களையும் தொற்றிக்கொள்வதால், அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். அடிக்கடி ஏதாவதொரு துக்க செய்தி வந்தவண்ணம் இருக்கும். அதன் காரணமாக மனதில் கலக்கங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும். சொந்த பந்தங்களால், பொருள் இழப்பும், பகைகளும் தேவையற்ற வம்புகளும் வந்து சேரும். சிலருக்கு உயிர்பயமும் ஏற்படும். .இதையெல்லாம் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை.சரியான பரிகாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டால்,கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நடக்கும் தசா புத்தியையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் சனியின் சஞ்சாரம் நன்மை செய்யும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இந்தச் சமயத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகம் ஆகும். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை விற்றோ அல்லது எதிர்பாதவிதமாகவோ பண வரவினைப் பெறக்கூடும். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் முயற்சிகள் பலனளிக்காமல், கைப்பொருளையும் இழக்க நேரும். அதே சமயம் உங்கள் பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால், அது திரும்ப கைக்கு வராது.
கேது பகவான், தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10 இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தொழில் வியாபாரம் பாதிக்கப்படும். முதியவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். அலுவலர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தும். மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். உங்கள் எதிரிகள் இயற்கையாகவே பாதிப்புக்குள்ளாவார்கள். உங்களுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். விஷக்கடி ஏற்படலாம். பெண்களால் தொல்லைகளும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகும். தொழிலில் மன அமைதி கெடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அவற்றால் எந்த லாபமும் இருக்காது. தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் மன அமைதி ஏற்படுவதுடன் மனைவி மக்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்:

வினாயகர் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.    வெள்ளிக் கிழமைகளில் துரகையை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும்.  சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும்.  குரு பகவானின்  சஞ்சாரமும் சரியில்லாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
##################################

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>